ஓபாமா வரலாறு காணாத வெற்றி

பாரக் ஒபாமா 44 ஆவது அமெரிக்க அதிபராகத் தேர்வு

முதன் முதலாக ஓர் ஆப்ரிக்க
அமெரிக்கர் அமெரிக்காவின் அதிபராகிறார்!

538 இல் 338 வாக்குகள் பெற்று ஜனநாயகக் கட்சி வரலாறு காணாத வெற்றி

வாஷிங்டன், நவ. 5- அமெரிக்க அய்க்கிய நாடுகளின் வரலாற்றில் முதல் முறையாக ஓர் ஆப் பிரிக்க - அமெரிக்கர் அந்நாட்டு ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பாரக் ஒபாமா மொத்த முள்ள 530 எலக்டொரல் வாக்குகளில் 338 வாக்குகள் பெற்று பெரும் வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சி வேட் பாளர் ஜான் மெக்கய்னுக்கு 156 எலக்டொரல் வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது.

தனிநபர் வாக்கெடுப்பில் ஒபாமா 41,530,707 (51 விழுக் காடு) வாக்குகள் பெற்றுள்ளார். ஜான் மெக்கெய்ன் 38,935, 597 (48 விழுக்காடு) வாக்குகள் பெற்றுள்ளார்.

47 வயதான ஒபாமா, கென்யா நாட்டைச் சேர்ந்த கருப்பர் இன தந்தைக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த வெள்ளை இனத் தாய்க்கும் பிறந்தவர். இல்லினாய்ஸ் மாநி லத்தில் இருந்து அமெரிக்க செனட் அவைக்குத் தேர்ந்து எடுக்கப்பட்டவர் இவர். ஒரே ஒரு முறை செனட்டராக இருந்த இவர் இன்று ஜனாதி பதியாக ஆகியிருக்கிறார் என் பதே வியப்பிற்குரியதாகும்.

ஒபாமா 270 எலக்டொரல் வாக்குகள் பெற்று முன்னணி யில் இருந்த நிலையில் தனது தோல்வியை ஒப்புக்கொண்ட குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கெய்ன், ஒபாமா வுக்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

உலகமே எதிர்பார்த்தது

அதிபர் தேர்தலில் மட்டு மின்றி, அமெரிக்க நாடாளு மன்றமான காங்கிரஸ் மற்றும் செனட் அவைகளிலும் ஜனநாயகக் கட்சிக்குப் பெரும் பான்மை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வெற்றி மூலம் ஒபாமா வரலாறு படைத்துள்ளார்.

நேற்று நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெறப் போகிறார் என்பதை உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.

தேர்ந்தெடுக்கும் முறை

அமெரிக்க அதிபர் தேர்தல் முறை சற்று மாறுபட்டது. வாக்காளர்கள் நேரடியாக வாக்கு அளித்து தேர்ந்தெடுப் பதில்லை.தேர்தல் சபை உறுப் பினர்களைத்தான் அவர்கள் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்கிறார்கள்.

மாநில மக்கள் தொகையின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் தேர்தல் சபை உறுப்பினர் எண்ணிக்கை நிர் ணயிக்கப்படுகிறது.

அதன்படி அமெரிக்க தேர் தல் சபையின் மொத்த உறுப் பினர்களின் எண்ணிக்கை 538 ஆகும். இதில் குறைந்த அளவு 270 உறுப்பினர்களின் ஆதர வைப் பெறுகிறவர்கள்தான் புதிய அதிபராகத் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள்.

ஒரு மாநிலத்தில் எந்த வேட்பாளருக்கு தேர்தல் சபை உறுப்பினர்களின் அதிக ஆத ரவு கிடைக்கிறதோ அவருக்கு அந்த மாநிலத் தேர்தல் சபை ஓட்டுகள் அனைத்தும் வழங் கப்படும்.

இவ்வாறு மொத்தமுள்ள 538 தேர்தல் சபை உறுப்பினர்களில் ஒபாமா 338 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று பெரும் வெற்றி பெற்றுள்ளார். குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக் கெய்னுக்கு 156 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே கிடைத் துள்ளது.

ஆப்ரிக்க-அமெரிக்க இனத்தைச் சேர்ந்த முதல் அமெரிக்க அதிபர்

ஆப்ரிக்க- அமெரிக்கர் இனத்தைச் சேர்ந்த ஒபாமாவை வெள்ளை அமெரிக்கர்கள் மனதார ஏற்று வரவேற்று அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறச் செய்துள்ளனர் என்பது -அமெரிக்கர்களில் நற்கருத்துகளை ஏற்கும் மனம் படைத்தோர் உள்ளனர் என்பதை இத்தேர்தல் மூலம் பிரதிபலித்துள்ளனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்

பிரபாகரன் என்ற பெயரை சொல்லக்கூடாதா? எனது நாக்கை வெட்டிக் கொள்வேனடா திரைப்பட இயக்குனர் பாரதிராஜா

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்