ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

12 நவம்பர், 2008

தமிழக முதல்வருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: அதிமுகவிடம் ஆதாரம் கேட்கிறது உச்சநீதிமன்றம்


தமிழக முதல்வருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு:

அதிமுகவிடம் ஆதாரம் கேட்கிறது உச்சநீதிமன்றம்

சேதுக்கால் வாய்த் திட்டச் சிக்கல் தொடர் பாக, 2007 அக்டோபர் 1 அன்று நீதிமன்ற ஆணையை மீறி தமிழக அரசு ஆதரவுடன் முழு அடைப்புப் போராட்டம் நடத்தியதாக, தமிழக முதல்வர் கலைஞர், நடுவண் அமைச்சர் டி.ஆர்.பாலு மற்றும் பிற அதி காரிகளுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நியாயப் படுத்துவதற்கு, திட்ட வட்ட மான சில நிகழ்வுகளை ஆதா ரங்களாகத் தெரிவிக்குமாறு அதிமுகவை உச்ச நீதிமன்றம் கேட்டு உள்ளது.

நீதிபதிகள் பி.என். அகர் வால், ஜி.எஸ்.சிங்வி ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு இவ்வாறு கோரியுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு நட வடிக்கைகளை எடுக்கக் கோரி அதிமுக தாக்கல் செய்த மனு வில் கூறப்பட்டுள்ள குற்றச் சாற்றுகளை முதல்வர் கலை ஞர், மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு மற்றும் அதிகாரிகள் சார்பில் உறுதிமொழி ஆவ ணங்கள் தாக்கல் செய்யப்பட் டன. முழு அடைப்புப் போராட் டத்துக்கான அழைப்பு விலக் கிக் கொள்ளப்பட்டது என் றும், தலைவர்கள் பங்கேற்ற அடையாள பட்டினிப் போராட்டம் மட்டும்தான் நடந்தது என்றும் அவர்கள் உறுதிமொழி ஆவணத்தில் தெரிவித்திருந்தனர்.

அதிமுக மனுமீது நேற்று விவாதம் தொடங்கியது. நீதி மன்ற ஆணை கிடைத்த உடனே, வேலை நிறுத்த அழைப்பை விலக்கிக் கொள் வது பற்றி முதலமைச்சர் அறிக்கை வெளியிட்டிருக்கி றார் என்று நீதிபதிகள் குறிப் பிட்டனர்.

எங்கள் ஆணை இருந்தா லும், முழு அடைப்பு (பந்த்) நடக்கும் என்று அவர் (முதல்வர்) சொல்லவில்லை. வணிகர் களே கடைகளை மூடிவிட் டால் முதலமைச்சர் என்ன செய்ய முடியும்? பட்டினிப் போராட்டம் நடத்துவ தற்கு எந்தத் தடை ஆணையும் இல்லை என்று நீதிபதிகள் கூறினர்.

அரசு ஆதரவுடன் நடை பெற்ற முழு அடைப்பின் கார ணமாக அரசின் கட்டுப்பாட் டில் உள்ள அரசுப் போக்கு வரத்துக் கழகப் பேருந்துச் சேவைகள் முடக்கப்பட்டதாக அதிமுக சார்பில் வாதாடிய வழக்குரைஞர் குரு கிருட் டிணகுமார் கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதி பதிகள், வேலைக்கு வரவேண்டாம் என்று தொழிலாளர் களைத் தொழிற் சங்கங்கள் கேட்டுக் கொள்ளும்போது, வேலைக்கு வரவேண்டும் என்று அவர்களைப் போக்கு வரத்துத் துறைச் செயலர் கட்டாயப்படுத்த முடியுமா? என்று அவரிடம் கேள்வி எழுப்பினர்.

இக்குற்றச்சாற்றுக்கு மாறாக, அன்று ரூ 4 . 83 கோடி ஈட்டப்பட்டிருப்பதாக, அரசுப் போக்குவரத்துத் துறை உறுதி மொழி ஆவணத்தில் தெரி வித்துள்ளது என்பதை நீதிபதிகள் சுட்டிக் காட்டினர். இந்த வழக்கிலான வாதங்கள் இன்றும் தொடர்ந்து நடைபெறும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு