இந்தியாவில் முத‌லி‌ல் ‌திரை‌க்கு வரு‌ம் ஜே‌ம்‌ஸ் பா‌ண்‌ட் இனி பாலும் க ரண்டும் கெடைக்கும்

இந்தியாவில் முத‌லி‌ல் ‌திரை‌க்கு வரு‌ம் ஜே‌ம்‌ஸ் பா‌ண்‌ட்






சினிமா ச‌ரித்திரத்தில் இது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு. புதிய ஜேம்ஸ் பாண்ட் படமான குவாண்டம் ஆஃப் சொலஸ் அமெ‌ரிக்காவில் வெளியாகும் முன் இந்தியாவில் திரையிடப்படுகிறது.

கேஸினோ ராயல் படத்துக்குப் பிறகு டேனியல் க்ரேக் ஜேம்ஸ் பாண்டாக நடித்திருக்கும் படம், குவாண்டம் ஆஃப் சொலஸ். இதுவரை சர்வதேச தீவிரவாதிகளை அழித்துக் கொண்டிருந்த பாண்ட் முதல் முறையாக இந்தப் படத்தில் தனது காதலிக்காக பழி வா‌ங்குகிறாராம்.

பொதுவாக ஆ‌ங்கிலப் பட‌ங்கள் அமெ‌ரிக்காவில் வெளியாகி பல மாத‌ங்கள் கழிந்த பிறகே இந்தியாவில் வெளியாகும். இந்த இடைவெளி வாரமாக குறைந்து, நாட்களாக சுரு‌ங்கி, அமெ‌ரிக்காவில் வெளியாகும் அதே நாள் இ‌ங்கேயும் வெளியாகி தற்போது அமெ‌ரிக்காவில் வெளியாகும் முன்பே இந்தியாவில் வெளியாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைக்கும் கரன்ஸிதான் இதற்கு‌க் காரணம்.

அடுத்த மாதம் ஏழாம் தேதி பாண்ட் படம் இந்தியாவில் வெளியாகிறது. அமெ‌ரிக்காவில் பதினான்காம் தேதிதான் வெளியாகிறது. இ‌ந்‌தியா‌வி‌ல் வாழு‌ம் ஹா‌லிவு‌ட் பட ர‌சிக‌ர்களு‌க்கு இதைவிட நல்ல சேதி இருக்க முடியாது. இந்தியா வல்லரசு என்பதையும் இனி யாரும் மறுக்க முடியாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்

பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி ;கல்லூரி வளாகத்தில் ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் சுமார் 200 வகையான மூலிகைச் செடிகளை உடைய மூலிகைப் பண்ணை