ஈழம் எரிவது ஏன்?ஒரு அலசல் பொன்.வெங்கட்


நம்முடைய இனத்தைப் பொறுத்தவரையிலே இந்தப் பிரச்சினை யில் புலிகள் இயக்கம் எப்பொழுது தோன்றியது? தமிழர்களுடைய உரிமைக் குரல் எப்பொழுது தோன்றியது என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.

அதற்கு ஆதாரம்தான் 1939-லேயே சிங்களவர் கள் தமிழர்களை கொடுமைப்படுத்தினார்கள். இலங்கையை அப்பொழுது வெள்ளைக்காரன் ஆண்டான். இலங்கைக்கு அப்பொழுது சுதந்திரம் வரவில்லை.

இலங்கைக்கு தனி ஆட்சி வந்தது. 1948-இல். அந்த வரலாற்றை நீங்கள் மனதிலே பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

தந்தை பெரியார் அவர்கள் தமிழ்நாட்டிலே என்ன சொன்னார்களோ, அதே வாய்ப்புதான் தமிழ் நாட்டிலேயேயும் வரக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது.

1948-ல் இலங்கை நாடு சுதந்திரம் பெற்றது. சுதந்திரம் பெற்றதற்கு முன்னாலேயே சிங்கள ஆதிக்கம் இருந்தது.

தலைமுறை தலைமுறையாக மலையகப் பகுதியில் வாழ்ந்த தமிழர்கள் குடியுரிமையும், வாக்குரிமையும் பறிக்கப்பட்டன.

தலைமுறை தலைமுறையாக தமிழர்களுக்குக் குடியுரிமையும், வாக்குரிமையும் பறிக்கப்பட் டன. இதைத் தொடங்கி வைத்தவர் அன்றைய பிரதமர் சேனநாயகா. அதிலேயிருந்து ஆரம்பம். அடுத்து பண்டு தொட்டு தமிழர்கள் பூமியான வடக்கு, கிழக்கு மாநிலங்களில் சிங்களவர்கள் திட்டமிட்டுக் குடியேற்றப்பட்டனர்.

தமிழ் மண்ணில் கற்பு சூறையாடப் பட்டது. தமிழ்ப் பெண் கற்பு சூறையா டப்பட்டது இப்பொழுது தமிழ் மண்ணின் கற்பு சூறையாடப்பட்டது. அப்பொழுது எங்கேயெல்லாம் தமிழர்கள் இருக்கிறார் களோ, அங்கு தமிழர்கள் வாழக்கூடிய பகுதியாக இருக்கக்கூடாது என்று சொல்லி அவர்கள் மிகப் பெரிய அளவுக்கு இன வெறியோடு திட்டமிட்டுச் செய்தார்கள்.

தமிழர்கள் அப்பொழுதும் பொறுத்துக் கொண்டிருந்தார்கள். சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி. தமிழ்மொழி துணை மொழி யாக இருக்கும் என்று அடுத்தக் கட்டத்திற்கு போனார்கள். அதையும் தமிழர்கள் கொஞ்சம் சலசலப்போடு ஏற்றுக்கொண்டார்கள்.

வேறு வழியில்லையே இந்த நாடு முன்னேற நாம் இதற்காகவா உழைத்தோம் என்ற மன வேதனையோடு அவர்கள் இருந்தார்கள். பிறகு சிங்களப் பேரினவாதிகள் விடுவார்களா? அடுத்தபடியாக தமிழர்களை மண்ணின் மைந்தர் களாக, பூமியின் மைந்தர்களாக ஏற்க மறுத்தனர்.

அந்த சிங்கள் பேரினவாதிகள் இவர்களை, பூமி புத்திரர்கள் அல்ல; மண்ணின் மைந்தர்கள் அல்ல என்று நினைத்ததோடு மட்டுமல்ல, தமிழர்களை அழிக்கத் திட்டமிட்டார்கள்.

முதலில் கல்விக் கண்ணைக் குத்த வேண்டும் என்று நினைத்தார்கள். அது தானே ஆரியத்தின் நிலை. ஆரியம் என்ன சொன்னது? சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் அறிவைக் கொடுக்கலா காது என்ற மனுதர்மத்தை எப்படிக் கையாண்டார்களோ, அதேபோல. ஏனென் றால் ஆரிய வம்சத்தின் தொடர்ச்சி தான் அங்கே நடைபெறுகிறது.

தமிழ் மாணவர்களுக்கு வேறு அளவுகோல், சிங்கள மாணவர்களுக்கு சலுகையான அளவு கோல். கிராம அளவிலே கூட தமிழர்கள் படிக் காத அளவுகோல். கிராம அளவிலே கூட தமிழர் கள் படிக்காத அளவிற்கு கல்வியைத் தரக் கூடாது என்று மண்ணைப் போட்டார்கள்.

சிங்களவர்களுக்கு 30 மார்க் இருந்தால் போதும். அவர்களுக்கு அனுமதி உண்டு. 80 மார்க் வாங்கினால்தான் தமிழர்கள் கல்வியில் உள்ளே போக முடியும். அதோடு பல்கலைக் கழகக் கதவுகள் மூடப்பட்டன. தமிழர் மாணவர்கள் போர்க்கோலம் பூண்டார்கள். இதிலிருந்துதான் பிரச்சினை தொடக்கம்.

1947-ஆம் ஆண்டு யாழ் நகரில் உலகத் தமிழர் மாநாடு. பழைய வரலாறு இது. இதில் சிங்களவர்கள் கலகம். துப்பாக்கிச் சூடு. ஆறு தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

பிறகு 1948-லிருந்து 1972 வரை தனிநாடு என்ற கோரிக்கையை எழுப்பாத தமிழர்கள் பிறகு எங்களுக்குக் கூட்டாட்சி உரிமை வேண்டும் என்று இதைத்தான் கேட்டார்கள். எனவே எடுத்த எடுப்பிலேயே நாங்கள் தனியே போய்விட வேண்டும். எங்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்று கூட கேட்கவில்லை. மாறாக எங்களுடைய உரிமைகள் காப்பாற்றப்பட வேண்டும். எங்க ளுடைய கலாச்சாரத்திற்குப் பாதுகாப்பு வேண் டும். நாங்களும் இந்த மண்ணின் மைந்தர்கள். எனவே எங்களுக்குத் தேவை - கூட்டாட்சி என்று கேட்டார்கள்.

ஆனால், அதற்கு அவர்கள் இசையமாட் டோம் என்று சொன்னவுடனேதான் தந்தை செல்வா அவர்களுடைய தலைமையிலே தமிழரசுக் கட்சி மலையகத் தமிழர்கள் சேர்ந்து வட்டுக்கோட்டையில் தனிநாடு கோரும் தீர்மானத்தை 1976-இல் அவர்கள் முன்மொழிந் தார்கள். இந்த வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

செல்வா மறைவுக்குப்பின் நடந்த இக் கோரிக்கை தேர்தலிலேயே வைக்கப்படுகிறது. உலகத்திலேயே ஒரு நாடு பிரிய வேண்டும் என்பதை அந்த நாட்டில் தேர்தல் அறிக்கை யிலேயே ஒரு பிரச்சினையாக வைத்தார்கள். ஈழத்திலேதான் முதல் முறையாக நடந்தது என்ற வரலாற்றை இந்த நாட்டில் தெரிந்தும், தெரியாதது போல இருக்கக் கூடியவர்களுக்கு உணர்த்த வேண்டியது காலத்தின் கட்டாயமாக, வரலாற்றுக் கட்டாயமாக இன்றைக்கு இருக்கின்றது.

அந்தத் தேர்தலிலே என்ன நடந்தது? 19 தொகுதிகளிலே இந்தப் பிரச்சினையை வைத்துப் போட்டியிடுகிறார்கள். 18 தொகுதி களை தமிழர் விடுதலைக் கூட்டணி வெற்றிபெற்று விட்டது. அங்குள்ள தமிழர்கள் தனிநாடு கோரிக்கைக்கு தேர்தல் மூலமாக ஆதரவு தெரிவித்தனர் என்பது வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த ஒரு செய்தி. எனவே, மொழி, இனம், நாடு என்பது மூச்சாக நின்றது.

இப்பொழுது தெளிவாகச் சொல்லுங்கள் தோழர்களே, விடுதலைப்புலிகள் இயக்கம் எப்பொழுது பிறந்தது? பிரிவினை எப்போது தொடங்கியது. பிரிவினை ஏன் தொடங்கியது? பிரிவினை கேட்க வைத்தவர்கள் தமிழர்களா? சிங்களவர்களா? ஆதிக்கம் எங்கே கொடிகட்டிப் பறக்கிறதோ, அங்கே அடிமைத்தனம் எவ்வளவு காலத்திற்கு சலாம் போட்டுக் கொண்டிருக்க முடியும்? நிச்சயமாக ஆதிக்கம் அதிகமாக அதிகமாக நுனிக்கொம்பு ஏறினால் - அதுவே உயிருக்கு இறுதியாவிடும் என்பதற்கொப்ப அவர்கள் உச்சாணிக் கொம்பிலே ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்

பிரபாகரன் என்ற பெயரை சொல்லக்கூடாதா? எனது நாக்கை வெட்டிக் கொள்வேனடா திரைப்பட இயக்குனர் பாரதிராஜா

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்