ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

14 நவம்பர், 2008

சாதித்த தமிழன் அண்ணாதுரை நிலவுக்கு செயற்கைக்கோளை அனுப்பிய ஆறாவது நாடு இந்தியா


சாதித்த தமிழன்

நிலவுக்கு செயற்கைக்கோளை அனுப்பிய ஆறாவது நாடு என்ற பெருமையை சந்திராயன் மூலமாக
இந்தியா பெற்றுள்ளது.
இதற்கான திட்ட இயக்குநராக இருந்து வெற்றிகரமாக இதனை செயல்படுத்தியவர் அண்ணாதுரை என்ற தமிழர்.இதுபற்றிக் குறிப்பிட்ட அவர் இந்தியாவெங்கும் இருந்து இதற்கு வாழ்த்துகள் குவிந்திருக்கின்றன. கலைஞர் அவர்களும் வாழ்த்துகள் தெரிவித்திருக்கிறார். இதற்கு நான் அடையும் சந்தோசத்தைவிட சுப்பிரமணியன் என்ற ஜாதகப் பெயரை நீக்கிவிட்டு அண்ணாதுரை என்று பெயர் வைத்த என்னைப் பெற்ற ஜீவன்கள்தான் அளவுக்கு அதிகமாய் சந்தோசப்பட்டிருக்கும் என்கிறார்.


சங்க இலக்கியம் பெயர் வந்தது எப்படி?

வித்தக ஆய்வாளர் ச.வையாபுரிப் பிள்ளை தான், எட்டுத்தொகை பத்துப்பாட்டு என்று தனித்தனியே வழங்கி வந்ததை - வழக்கத்தை மாற்றி சங்க இலக்கியம் என்று அவற்றிற்குப் புதுப்பெயரிட்டதோடு, இந்தப் பெயரையே பெரு வழக்காக்கி வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ( நூல் - வழக்கறிஞர் வளர்த்த தமிழ்.)
- தகவல்: சேக்கிழான், சென்னை - 81


கடவுளுக்கு எதிராக வழக்கு

அமெரிக்காவின் நெப்ரஸ்கா மாகாணத்தின் மூத்த செனட்டர்களில் ஒருவர் எர்னிசேம்பர்ஸ்- இவர் கடவுளுக்கு எதிராக வினோதமான வழக்கு ஒன்றை டக்ளஸ் கவுண்டி மாவட்ட கோர்ட்டில் தொடர்ந்தார். கடவுளின் சீற்றத்தால் புயல், வெள்ளம், பூகம்பம், பஞ்சம், தொற்று நோய், இனப் படுகொலை போன்ற சம்பவங்களால் பல்லாயிரக் கணக்கானவர்கள் பலியாகி வருவதால், கடவுளின் இந்த அழிவு நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்பதே அவர் தாக்கல் செய்த மனுவின் சாராம்சம்.
கடவுள் எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்து இருக்கிறார். ஒரே நேரத்தில் பல இடங்களில் அவரால் காட்சி தர முடியும். எனவே எந்த நேரத்திலும் அவரை இந்த கோர்ட்டுக்கு அழைக்க முடியும் என்றும் அவர் வாதிட்டார். ஆனால், வித்தியாசமான இந்த வழக்கை நீதிபதி மார்லன் போக் தள்ளுபடி செய்துவிட்டார். கடவுள் எங்கும் இருக்கலாம். ஆனால் அவருக்கு நிரந்தரமான ஒரு முகவரி இல்லாததால் சம்மன் அனுப்ப முடியாது என்றார், நீதிபதி போக்.


வசிட்டரும், அகத்தியரும்

மணிமேகலையில் இடையிடையே வரும் சிறுகதைகளைத் தொகுத்து, மணிமேகலைச் சிறுகதைகள் என்ற பெயரிடப்பட்ட நூலைப் படித்தேன். அந்தணன் ஒருவனின் மனைவி ஒழுக்கம் தவறியதால், பதி தன்னை வெறுப் பானே என்று பயந்து, வீட்டை விட்டு வெளி யேறுகிறாள். அவள் பெயர் சாலி. நடுவழியில் குழந்தை பிறக்கிறது. இரவென்றும் பாராமல் தோட்டம் ஒன்றில் குழந்தையைப் போட்டுவிட, பசு ஒன்று பால் தருகிறது. இளம்பூதி என்பவன் எடுத்து வளர்க்கிறான். குழந்தையாகிய ஆபுத்திரன் வளர்ந்தபின், வேள்வியிலே கொல்லுவதற்காகக் கட்டிய பசுவை அவிழ்த்து ஓட்டிச் செல்லும்போது பிடிபடுகிறான்.
நீ பசுமகன் என அந்தணர்கள் ஆபுத்திரனை ஏசிப்பேசும்போது, ஆபுத்திரன் சொல்கிறான்.
உங்கள் முன்னோர்களின் பிறப்பை நீர் மறந்தீர்களோ? அசலன் என்னும் அந்தணன் யார் மகன்? பசுவின் மகன் அல்லவா? சிருங்கி, சிருங்கி எனத் தலைமேல் வைத்துக் கொண்டாடுகிறீர்களே, அந்த முனிவரின் தாய், மான் வயிற்றில்தானே பிறந்தாள். விரிஞ்சி என்பவன் புலிக்குப் பிறந்த வனன்றோ? உயர்ந்தோர் போற்றும் கேசகம் பளன் நரிக்குப் பிறந்தவன்தானே. உங்கள் குல முன்னோர்களாகிய வசிட்டரும், அகத்தியரும் விலைமாதின் மக்கள் என்பதை அறிவீர்களா?
இதைப் படித்தபோது, தலை சுற்றிக் கீழே விழாத குறைதான். மிருகங்களைப் புணர வேண்டும் என்கிற கேவலமான சிந்தனை யல்லவா, வக்கிர புத்தியல்லவா, இவற்றை எழுதி யவர்க்கு இருந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. நல்லவேளை, சாலி என்பவள், மகாபாரதக் குந்தியைப் போல், நான் சந்திரனை மனதுள் ரசித்தேன். அதனால் சந்திரன் என்னுள் பிரவேசித்து குழந்தை பிறந்தது என்று சொல்வதாக எழுதாமல் விட்டார்களே!
தகவல்: எம்.கதிர்வேல், கோவை


பாம்பு பழிவாங்குமா?

பாம்பைக் கண்டவுடன் அதை அடித்துக் கொல்லும் பழக்கம் மக்களிடையே அதிகரித் துள்ளது. அப்படிக் கொல்லக்கூடாது. அதேமாதிரி, பாம்புகளைப் பற்றிய மூடநம்பிக்கையும் அதிகமாக உள்ளது. அதை போக்குவதற்குரிய வகுப்புகளும் நடத்தி வருகிறேன். ஜோடிகளில் ஒரு பாம்பை கொன்றுவிட்டால் மற்றொரு பாம்பு வந்து கொன்றவரை பழிவாங்கும் என்பதெல்லாம் கட்டுக்கதை. செத்துப்போன பாம்பு, கொன்றவரின் உருவத்தை எப்படி இன்னொரு பாம்புக்கு காட்டிக் கொடுக்கும்? அது என்ன போட்டோ எடுத்து வீட்டு விலாசத்தையும் கூறிவிட்டா செத்துப்போகிறது? பாம்புகளைப் பற்றி எப்படி எல்லாமோ கட்டுக்கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மாதிரியான மூட நம்பிக்கைகள் எல்லாமே பாம்புகளைக் கொல்வதை மேலும் ஊக்கவிக்குது. மனிதன் தனக்கு ஆபத்து என்றால், உடனே தன்னை காத்துக்கொள்ள தாக்குவான். அதே மாதிரிதான் பாம்புகளும்...... தன்னுடைய உயிருக்கு ஆபத்து என்றதும் கொத்தி விடுகின்றன. இருட்டில் நடக்கும்போதுகூட நாம் சத்தமிட்டவாறே நடந்து சென்றால் பாதையில் பாம்பு இருந்தால்கூட விலகிப் போய்விடும். அதை மிதிக்கும்போதுதான் கடிக்குது
(பாம்புகளோடு நெருக்கமாகப் பழகிவரும் கேரள பல்கலைக்கழக மாணவி எமி எலிசபெத் தாமஸ், பாம்புகளைப் பற்றி 26.10.2008 தினத்தந்திப் பேட்டியில்.......)


இருண்ட இந்தியா

இந்த ஆண்டின் மான்புக்கர் பரிசை வென்றிருக்கும் அரவிந்த் அடிகா ஓர் இந்தியர். அதுவும் சென்னையில் பிறந்து மங்களூரில் வளர்ந்து ஆக்ஸ்போர்டு மற்றும் கொலம்பியாவில் படித்தவர்.
டைம் இதழில் செய்தியாளராகப் பணியாற்றிய அரவிந்த் அடிகாவுக்கு அவர் எழுதிய த ஒயிட் டைகர் (The White Tiger) என்ற நாவலுக்காக இப்பரிசு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா என்பது ஒளி நிறைந்த இந்தியா மற்றும் இருண்ட இந்தியா என இரண்டு நாடுகளைத் தன்னுள் அடக்கியது என்று தனது நாவலில் எழுதியுள்ள அரவிந்த் அடிகா இன்றைய இந்தியாவில் நாவல்கள், திரைப்படங்களில் காட்டப்படாத அரூபமாக வாழும் மக்கள் அதிகம். இலக்கியத்தளத்தில் தங்களைச் சேர்த்துக் கொள்ள அவர்கள் கோரி நிற்கிறார்கள் என்கிறார்.


இந்திய அரசு கவனமாக இருக்க வேண்டும்

இலங்கையில் கதிர்காமம் அம்மாந்-தோட்டை பகுதியில் ரூ. 11 கோடி செலவில் சீனா உதவியுடன் துறைமுகம் அமைக்கப்-பட்டு வருகிறது. இது அமைக்-கப்பட்டால் ஈரானிலிருந்து சீனாவுக்கு எண்ணை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் அந்த வழியாகச் செல்லவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது இந்தியாவின் பாதுகாப்புக்கு இடையூறாக உள்ள சூழ்நிலை ஆகும். இது போன்று இந்தியாவின் எதிர்ப்பு நாடுகளிடம் உறவு வைத்துள்ள இலங்கையிடம் இந்திய அரசு கவனமாக இருக்க வேண்டும்.
இலங்கையில் நடக்கும் போரில் ராணுவத் தரப்பில் ஏற்பட்ட சேதத்தைக் கூறாமல் விடுதலைப் புலிகளைக் கொன்றது குறித்த செய்திக்கே அங்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். பேச்சுவார்த்தை மூலம்தான் இலங்கையில் போரை நிறுத்த முடியுமே தவிர எந்த ஒரு காலகட்டத்திலும் இலங்கை அரசால் புலிகளைத் தோற்கடிக்க முடியாது.
தமிழ் ஈழம் கிடைத்தால் மீனவர்-களுக்கு உயிர்ப்பலியே ஏற்படாது. இதற்கு உடனடியாக தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம்

லேபிள்கள்: , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு