நகைச்சுவை பிட்ஸ் பக்தா.. வரம் கேட்கச் சொன்னால் சாபம் கேட்கிறாயே?!”
ஆபிஸர் : நாங்க விஜிலென்ஸிலேர்ந்து வர்றோம். உங்க ஆபிஸிலே யார் யார் லஞ்சம் வாங்குறது?
மேனேஜர் : சொன்னா எவ்ளோ கொடுப்பீங்க..?
*****
“பக்தா.. உன்னுடைய வருகையை மெச்சினேன். வேண்டிய வரம் கேள்.”
“கடவுளே.. எனக்கு என் காதலியே மனைவியாய் அமைந்தால் போதும்.”
“பக்தா.. வரம் கேட்கச் சொன்னால் சாபம் கேட்கிறாயே?!”
*****
விமானம் : என்னப்பா.. என்னை விட வேகமாப் போறியே.. அப்படி என்ன அவசரம்உனக்கு?
ராக்கெட் : போடாங்ங்... உனக்குப் பின்னால நெருப்பைப் பத்த வச்சாத் தெரியும்..
*****
“தமிழ்ல எந்த வார்த்தையை தப்புன்னு சொல்லுவோம்?”
“சனியன்..?”
“இல்ல..”
“மொள்ளமாரி..?”
“இல்ல..”
“பொறம்போக்கு..?”
“இல்ல..”
“பொறுக்கி..?”
“இல்ல..”
“பன்னாடை..?”
“இல்ல..”
“அது எதுன்னு நீயே சொல்லித் தொலைடா..”
“ரொம்ப சிம்பிள் கண்ணா.. ‘தப்பு’ங்கற வார்த்தையைத்தான் ‘தப்பு’ன்னுசொல்லுவோம். சரிதானே?”
*****
சரவணன் : ஒரு குழந்தையை நல்ல பர்சனாலிட்டியா, அறிவாளியா, திறமையானவனா வளர்க்கணுமா?
நண்பன் : ஆமா.. அதுக்கு என்ன பண்ணனும்?
சரவணன் : என் பெற்றோர்கிட்ட ஆலோசனை கேட்டாப் போதும்.
நண்பன் : என்ன கொடுமை சரவணா இது?
கருத்துகள்
ராக்கெட் : போடாங்ங்... உனக்குப் பின்னால நெருப்பைப் பத்த வச்சாத் தெரியும்..
//
:)))))))