புதைக்கப்பட்ட அணு உலை புரோட்டான்கள் வெளிப்படத் தொடங்கி, நிலைமை மோசமடைந்து

எஸ்.எல்-1 அணு உலையின் பராமரிப்பின்போது செய்ய வேண்டிய முக்கிய பணிகளுள் ஒன்று கட்டுப்பாட்டுத் தடி (Control rod)யை 4 இன்ச்சுகள் அளவிற்குப் பின்னிழுப்பதாகும். அவ்வாறு கையால் பின்னிழுக்கப்படும் கட்டுப்பாட்டுத் தடி, பின்னர் சரியான இடத்திற்குத் தன்னைத்தானே பொருத்திக் கொள்ளும்படி அணு உலை வடிவமைக்கப்பட்டிருக்கும்.

இந்த மையக் கட்டுப்பாட்டுத் தடியை அளவுக்கு மீறி பின்னிழுத்தாலோ அல்லது தானாக விடுபட்டாலோ அதிலிருந்து புரோட்டான்கள் வெளிப்படத் தொடங்கி, நிலைமை மோசமடைந்து அணுக்கதிர் பிளவுக்கு வழிவகுக்கும். இதற்கு (ஞசடிஅயீவ ஊசவைஉயட) உடன் நெருக்கடி என்று பெயர். இத்தகைய நிலைமைதான் எஸ்.எல்-1 அணு உலை விபத்திலும் நடந்தது.

கட்டுப்பாட்டுத் தடி 4 இன்ச்சுக்குப் பதில் 16 இன்ச்சுகள் கூடுதலாக 20 இன்ச்சுகள் அளவிற்கு பின்னிழுக்கப்பட்டதால் உடன் நெருக்கடி ஏற்பட்டு, நீராவி வெடிப்பு ஏற்பட்டு வெளியேறத் தொடங்கியிருக்கக்கூடும் என்று விபத்துக்குப் பிந்தைய ஆய்வுகள் தெரிவித்தன.

எனவே இந்த ஒற்றை/மைய கட்டுப்பாட்டுத் தடியைப் பயன்படுத்தும் முறை பின்னாளில் அணு விஞ்ஞானிகளால் கைவிடப்பட்டது.

எஸ்.எல்.-1-இன் பராமரிப்புக் குறிப்புகளில் என்ன நடந்தது என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அங்கிருந்த சிராய்ப்புகள், தடியில் இருந்த சிராய்ப்புகளைக் கொண்டே 20 இன்ச்சுகள் வெளியே இழுக்கப்பட்டிருக்கும் எனக் கண்டறியப்பட்டது. இது வெளியே இழுக்கப்பட்டதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பது குறித்து பலவித கருத்துகள் நிலவின. வெளிநாட்டுச்சதி காரணமாக இருக்குமா? இல்லை உள்ளேயிருந்த மூவரில் யாரேனும் ஒருவர்; செய்த தற்கொலை முயற்சியா? அல்லது தெரியாமல் நேர்ந்த விபத்தா என்று பல கோணங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு சுமார் இரண்டு ஆண்டுகள் நீடித்தது.

3-ஆம் தேதி இரவு நடந்த விபத்தில் உயிருடன் மீட்கப்பட்ட ஒருவரை உடனடியாக சிகிச்சைக்கு உட்படுத்தினர். அனைத்து ஆடைகளும் களையப்பட்ட பின்னரும் கூட அவரது உடலில் 500 ரான்ட்ஜென் கதிரியக்கம் இருந்தது. தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் மீண்டும் நினைவு திரும்பாமலேயே 11 மணிக்கு இறந்தார். இரண்டாமவரின் உடல் ஜனவரி 4ஆம் தேதி இரவு மீட்கப்பட்டது. மூன்றாமவரின் உடல் தொடர்ந்து தேடப்பட்டு வந்தாலும் கிடைக்கவில்லை. அவரது உடல் மேற்கூறையில் செருகியிருந்தது. ஜனவரி 9ஆம் தேதியன்று 8 பேர் கொண்ட குழு கிரேனையும் வலையையும் பயன்படுத்தி உடலை மீட்டது.

இறந்த மூவரில் ரிச்சர்ட் மெக்கின்லியின் (Richard L. McKinley) உடல் ஆர்லிங்டன் தேசிய இடுகாட்டில் புதைக்கப்பட்டது. ஜான் பைர்ன்ஸ் (John Byrnes) மற்றும் ரிச்சர்ட் லெக் (Richard legg) ஆகியோரின் உடல் அவரவர் சொந்த ஊர்களான நியூயார்க்கிலும் மிச்சிகனிலும் புதைக்கப்பட்டது. ஆயினும் மூவரின் உடலும் உரிய பரிசோதனைகளுக்குப் பிறகு முறையாக பாதுகாக்கப்பட்ட கான்கிரீட் கல்லறைகளால் மூடப்பட்டது. பின்னர் எஸ்.எல்.-1 அணு உலையும் உரிய பாதுகாப்போடு மண்ணில் புதைக்கப்படடது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்

பிரபாகரன் என்ற பெயரை சொல்லக்கூடாதா? எனது நாக்கை வெட்டிக் கொள்வேனடா திரைப்பட இயக்குனர் பாரதிராஜா

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்