இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்துதமிழ்நாடு சட்டப் பேரவையில் முதல்வர் கலைஞர் விளக்கம்




இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து தமிழ்நாடு சட்டப் பேரவையில் நேற்று பல்வேறு கட்சி உறுப்பினர்கள் பேச முயன்றனர். அப் போது முதல்வர் கலைஞர் அவர்கள் இதுகுறித்து விளக் கம் அளித்து உரையாற்றினார்.

சட்டப் பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பன் அய்ந்து சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் எடுத்துக் கொள்ளப்படு மென்று அறிவித்தார்.

அப்போது பா.ம.க சட்ட மன்றக் கட்சித் தலைவர் கோ.க. மணி காங்கிரஸ் உறுப்பினர் சி. ஞானசேகரன் ஆகியோர் கவன ஈர்ப்புத் தீர்மானங்களை விட இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து விவாதிக்க வேண்டு மென்று கோரிக்கை வைத்த னர். அதற்கு பேரவைத் தலைவர் மறுப்பு தெரிவித்தார்.

அப்போது எதிர்க் கட்சித் துணைத் தலைவர் ஓ. பன்னீர் செல்வம், சட்டமன்ற மரபுப் படி ஜீரோ நேரத்தில் அன் றைக்கு நடைபெறுகின்ற பிரச் சினைகளை முன்வரிசையிலே இருக்கின்ற எதிர்க் கட்சித் தலைவர்கள் எழுப்புவதற்கு உரிமை இருக்கின்றது. என்ன பிரச்சினையை அவர்கள் எழுப் புகிறார்கள் என்பதை நீங்கள் கேட்டுக் கொண்டு, நாளை எடுக்கப்படும், அல்லது நாளை மறுதினம் எடுக்கப்படும், இல்லையென்றால் எடுக்கவே முடியாது என்று ஏதாவது ஒரு பதிலைச் சொல்லுங்கள். பதி லைச் சொல்லாமலே அடுத்த நிகழ்ச்சிக்கு நீங்கள் செல்வது என்பது சரியான நடைமுறை யாகாது என்று கூறினார்.

இதற்கு முதல்வர் கலைஞர் அவர்கள் அளித்த விளக்கம் வருமாறு:

மாண்புமிகு முன்னாள் முத லமைச்சரும் இந்நாள் எதிர்க் கட்சித் துணைத் தலைவரு மான பன்னீர்செல்வம் எழுப்பி யுள்ள இந்தப் பிரச்சினை - முதலில் என்னவென்று கேட் டுக்கொண்டு அது என்றைக்கு எடுக்கப்படும் என்று தீர்ப்பைச் சொல்லுங்கள் என்று தங் களைப் பார்த்துக் கேட்டு இருக்கிறார். உண்மையிலேயே அது வரவேற்கத் தக்க ஒன்று. ஆனால், என்ன சங்கடம் என் றால், யார் எந்தப் பிரச்சினையை எழுப்புகிறார்கள் என்று அரு கிலே உட்கார்ந்து இருக்கின்ற எங்களுக்கே தெரிய வில்லை. சில நேரங்களிலே ஈழம் என்று காதில் விழுகிறது. -இலங்கை என்று காதில் விழுகின்றது - அங்கே செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று காதிலே விழுகின்றது - ஆக, ஈழப் பிரச்சினையில் இங்கு எழுந்து உரக்கப் பேசியவர்கள் எந்தக் கருத்தைக் கொண்டு இருக்கிறார்கள். வேறுபட்ட கருத்தைக் கொண்டவர்கள் எதிர்த்தரப்பிலே இருக்கிறார் கள். எல்லோரும் ஒரே கருத் தைக் கொண்டவர்கள் அல்ல. ஒரே கருத்தைக் கொண்டவர் களாக இருந்தால் என்ன சொல்கிறார்கள் என்று புரிந்து கொண்டு பதில் சொல்ல இயலும். இரு வேறு கருத்துகள் அல்லது மூன்று விதக் கருத்து கள் கொண்டவர்கள் இங்கே இருக்கின்ற காரணத்தால் அதைப் புரிந்து கொள்ள இயல வில்லை. குழப்பமே மிஞ்சு கிறது. ஆகவே, தனித் தனியாக, நாங்கள் இந்தப் பிரச்சினை குறித்து பேசுகிறோம் என்று கூறிவிட்டு, அந்தப் பிரச்சினை குறித்து பேசினால் அதற்குப் பதில் சொல்ல எங்களுக்கு சுலபமாக இருக்கும். அப்படி அந்த முறையைப் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

காலையிலிருந்து தங்களு டைய அறையில் அமர்ந்து அய்ந்து கவன ஈர்ப்புத் தீர் மானங்களை இன்று எடுப்பது என்று குறிக்கப்பட்டது. ஆனால், அதில் ஒன்று கூட இப்போது எடுக்கப்படவில்லை. தேவைப் பட்டால், அந்த அய்ந்தையும் ஒதுக்கி வைத்து விட்டு இப் போது பிரதானமாக பிரச் சினை என்ன எழுப்ப எண்ணு கிறார்களோ, அதில், அந்தப் பக்கத்திலே உள்ளவர்கள், அவர்களுடைய கட்சியின் சார்பில் ஒரே ஒருவர் எழுந்து அதைப் பற்றிப் பேசுவார்களே யானால் தாங்களும் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் . மற்ற கட்சிக் காரர்களுக்கும் அதைப் பற்றிப் பதில் சொல்ல வழி இருக்கும். எங்களுக்கும் அதிலே எந்தவிதமான விளக் கம் அளிக்கலாம் என்ற வகை யிலே இருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் கலை ஞர் அவர்கள் கூறினார்.

இதனைத் தொடர்ந்து சி. ஞானசேகரன் (காங்கிரஸ்), வை.சிவபுண்ணிம் (இந்திய கம்யூனிஸ்ட்), சி.கோவிந்தசாமி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) கம்பம் என். இராமகிருஷ்ணன் (ம.தி.மு.க.) சட்டமன்ற காங் கிரசு கட்சித் தலைவர் டி. சுதர் சனம், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பேசினர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்

பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி ;கல்லூரி வளாகத்தில் ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் சுமார் 200 வகையான மூலிகைச் செடிகளை உடைய மூலிகைப் பண்ணை