ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

14 நவம்பர், 2008

ப்ரேக் பாஸ்ட், லஞ்ச், டின்னர் மானங்கெட்ட தமிழன். பதுங்குகுழி பசியோடு மானத்தமிழன் கவிதை

முகாமில்

கருப்பாய் பூத்தன
மரங்கள்
வெண்மணியில் முளைத்தவை.

பிஞ்சு நிலாக்கள் மீது
பெரு நெருப்பிட்ட தென்ன?
செஞ்சோலை

இந்தியப் பொறிஞர்கள்
சிங்களப் படையில் காயம்
பூப்பறிக்கப் போயிருந்தார்களாம்

வெண்மணியில் உயிர்கள்
யாழ்ப்பாணத்தில் நூல்கள்
எரிக்கப்படுகிறோம் எதிரிக்கு வெளிச்சம் தர

காகம் கரைகிறது
யார் விருந்தாளி?
புலம் பெயர்ந்தோர் முகாமில்.

மானத்தமிழன்

கண்டம் கடந்து வந்த
நாரையின் பெயர் நாரை
கடல்கடந்த தமிழனோ அகதி?

தீதும்நன்றும் பிறர்தர வாரா
இலங்கைத் தமிழனைக் கொல்ல
இந்தியத் தமிழனின் வரிப்பணம்

நாமாவது கண்தானம் செய்வோம்
கொடுப்பினை இல்லை
குட்டிமணியின் கண்களுக்குத்தான்

ப்ரேக் பாஸ்ட், லஞ்ச், டின்னர்
மானங்கெட்ட தமிழன்.
பதுங்குகுழி பசியோடு மானத்தமிழன்

விடுதலை!

மின் விளக்கு உண்டு
வெளிச்சம் இல்லை
முகாம் வாழ்க்கை.

பூக்களைக் காக்க மட்டுமல்ல
செடிகளைக் காக்கவும்
முட்கள்.

மக்களைக் கொல்ல உம்முடையது
காக்க எம்முடையது
ஆயுதம்.

புறமுதுகிட்டு பிழைத்த நீ
அழைக்கிறாய்
முதுகில் குத்த!

அரசமரம் நெஞ்சில் குத்தும்
ஆலமரம் முதுகில் குத்தும்
உணர்ந்து நிமிர்ந்தன பனைகள்.

வாஸ்து சொல்ல முடியுமா?
எப்படிக் கட்டினால் விழாது
குண்டு?
ஆயுதங்கள் வேலை நிறுத்தம்
செய்யும் நாளின் பெயர்
விடுதலை!

முகங்கள் இல்லை

அழைக்கின்றன...
மனித இறைச்சி நாறும் பற்கள்
அமைதிப் பேச்சுக்கு

போதி மரத்தில் கூடுகள்
நம்பி கட்டிய வெண்புறாக்களே
பிணங்களாக.

வெளியே தாலாட்டு
முகாமில் ஒப்பாரி
குண்டுவீச்சு தின்ற குழந்தை

திரும்பி வந்த
புலம்பெயர் கடிதங்கள் சொல்லின
முகவரிகளுக்கான முகங்கள் இல்லை

மருத்துவர்களே...
பிரசவநாள் கூறுங்களேன்
தமிழ் ஈழம்!

-
நடைமுறை

கவச குண்டலத்தைக்
கர்ணன் அறுத்துக் கொடுத்தான்
என்பது புராணிகம்
இதயத்தையே இதேந்திரன்
அறுத்துக் கொடுத்தான்
என்பது நவீனம்.

இராமன் பாதம் பட்டு
உயிர்த்தெழுந்தாள் - அகல்யை
என்பது புராணம்.
இதேந்திரன் இதயம் கொடுத்து
உயிர்த்தெழுந்தாள் - அபிராமி
என்பது நிதர்சனம்.

அன்று...
இதயத்தைத் திருடிட்டான்
என்பது கற்பனைக் கதை
இன்று...
இதயத்தைக் கொடை கொடுத்தான்
என்பது நடைமுறை


கதை நாயகன்

ஊழலை உருவாக்கிய
அரசியல்வாதிகளும்,
மதவெறியை உருவாக்கிய
ஆன்மிக வாதிகளும்,
வன்முறையை உருவாக்கிய
தீவிரவாதிகளும்
உண்மையான நரகாசுரர்கள்.
தீபாவளியை உருவாக்கிய
நரகாசுரன்
ஆரியர்கள் உருவாக்கிய
கதை நாயகன்.


லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு