ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

13 நவம்பர், 2008

சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதல் - அதிமுக - மதிமுக வெளிநடப்பு

சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி
மாணவர்கள் மோதல் - அதிமுக - மதிமுக வெளிநடப்பு

இன்று சட்டமன்றம் தொடங் கியவுடன் சென்னை அம்பேத் கர் சட்டக் கல்லூரியில் இரண்டு பிரிவு மாணவர்களி டையே நேற்று ஏற்பட்ட பயங்கர மோதல்கள் குறித்து பிரச்சினை எழுப்ப முயன்ற அதிமுக மற்றும் மதிமுக உறுப் பினர்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.

சென்னை சட்டக் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட தாக்குதல் குறித்த விவரம் அறிய நானும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெயகுமாரும் இன்று காலை நேரில் சென்று விசாரித்து வந்துள்ளோம். இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் துரை முருகன்.

அதிமுக உறுப்பினர்கள் இந்தப் பதிலை பொருட்படுத் தாமல் அவையிலிருந்து வெளி நடப்பு செய்து ஒரு சில நிமி டங்களில் மீண்டும் அவைக்கு வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மதிமுக சட்டமன்ற உறுப் பினர்கள் இதே பிரச்சினைக் காக வெளிநடப்பு செய்தனர்.

சிபிஅய், சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு

சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின்மீது முதலில் அதிமுக உறுப்பினர் ஜெயக் குமாரை பேச பேரவைத் தலைவர் அனுமதித்தார்.

சிபிஎம் சட்டமன்ற உறுப் பினர்களும் சிபிஅய் சட்ட மன்ற உறுப்பினர்களும் எழுந்து நின்று பேரவைத் தலைவரைப் பார்த்து சென்னை அடுத்துள்ள ஹுண்டாய் கம்பெனி மற்றும் 20-க்கும் மேற்பட்ட தனியார் கம்பெனி களில் பணிபுரியும் தொழி லாளர் அமைப்பு ஏற்படுத்த கம்பெனி நிர்வாகம் தடையாக உள்ளது குறித்து பிரச்சினை எழுப்ப அனுமதி கேட்டனர். அதற்கு அனுமதி கிடைக்காத தால் வெளிநடப்பு செய்வதாக அறிவித்து வெளிநடப்பு செய் தனர். பின்னர் அவைக்கு வந்து அவை நடவடிக்கைளில் பங் கேற்றனர். நபார்டு வங்கி நிதியுதவி

இந்த ஆண்டு தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் அடிப் படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த நபார்டு வங்கி ரூ.410 கோடி நிதியுதவி செய் துள்ளதாக சட்டமன்றத்தில் இன்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழகத்தில் அரசுப் பள்ளிகளுக்கு நபார்டு வங்கி பெரிய அளவில் உதவி செய்து வருகிறது. இவ்வங்கி 1 முதல் 8 கட்டங்களாக பணிகளை மேற்கொண்டுள்ளனர். இந்த ஆண்டு 362 பள்ளிகளுக்கு ரூ.410 கோடி செலவில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளான வகுப்பறைகள், கழிப் பறை வசதிகள் போன்றவற்றை ஏற்படுத்தி வருகின்றன. மேலும் அரசுப் பள்ளி களுக்கு 80 கோடி ரூபாய் செலவில் பெஞ்ச், டெஸ்க் வழங்கப்பட உள்ளன. அனைத் துப்பள்ளிகளுக்கும் ஆய்வகங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன என்றார் அவர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு