ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

6 நவம்பர், 2008

ஈழத் தமிழர்ப் பிரச்சினைமுதலமைச்சர் கலைஞர் அறிக்கை

ஈழத் தமிழர்ப் பிரச்சினை

முதலமைச்சர் கலைஞர் அறிக்கை

சென்னை, நவ.6- ஈழத் தமிழர் பிரச்னை குறித்து முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் இன்று விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அதிர்ச்சி தரத் தக்கதும் - ஆறாத் துயரம் அடையத் தக்கது மான நிகழ்வுகள் இலங்கை மண்ணில் நித்யத் திருவிழாக்கள் ஆகி; இறுதிக் கட்டமாக அமைந்துள்ள இன்றுள்ள சோக நிலை; உலகத் தமிழர்கள் அனைவரும் அறிந்ததே ஆகும். இன்றைய நிலைக்கு முடிவு கண்டிட எடுத்திடும் முயற்சி என் ஒருவனால் மட்டுமே முற்றுப் பெறக்கூடியதல்ல! - இதை உணர்ந்திருப்போர் கூட நான் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந் திருப்பதால் என்னால் தனித்து நின்று வெற்றி பெற முடியும் என்று தவறாக எண்ணுகிறார் கள்; அல்லது தவறாகக் கூறு கிறார்கள்.

தர்ம சங்கடம்!

இந்திய நாட்டின் ஒற்று மைக்கு - ஒருமைப்பாட்டுக்கு விரோதமாக - எதுவும் பேசு வோம் - எங்களுக்கு வேண்டி யது இலங்கையில் தமிழ் ஈழம் தான் என்கிற அவர்களின் பேச்சும் எழுத்தும் எனக்குப் புரிகிறது. ஆனால் இங்குள்ள அரசியல் கட்சி களுக்கிடையே அலை மோதும் எதிர் விமர் சனங்களையும் ஓர் அரசு; சிந்தித்துச் செயல்பட வேண்டி யிருக்கிறதல்லவா? அவற்றை அலட்சியப்படுத்த முடியாதல் லவா? முதலில் அத்தகைய சட் டக் கட்டுப்பாடுகளை உடைக் கும் விதமாகப் பேசுகிறார்கள்! சட்ட ரீதியாக அதன் மீது நட வடிக்கை எடுத்திட நேர்ந்தால், கருணாநிதி இலங்கைத் தமிழர் களுக்கெதிராக நடந்து கொள் கிறார் என்று பெரும் பழி சுமத்துகிறார்கள். சாதனைகள் புரியும் ஆட்சி என்பதற்குச் சான்றாக அமைந்துள்ள அடுக் கடுக்கான திட்டங்களும், அவற்றின் செயல்பாடுகளும் அவை தொடர்பான புள்ளி விபரங்களுமே போதுமானவை என்ற மன நிறைவு எனக்கிருந் தாலும்; எனக்கும், என் தலை மையில் உள்ள ஆட்சிக்கும் எப்படியோ ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும் என்று தீர்மானித்து; எவையெவை சட்ட விரோத மான செயல் களோ; அவற்றிலே ஈடுபட்டு தமிழக அரசுக்கு தர்ம சங்க டத்தை ஏற்படுத்தும் தந்திரத் தைக் கையாண்டு வருகிறார் கள்.

ஒரு பக்கம் மேலும் முன் னேறு என்று முழக்கம் -

மறு பக்கம் போதும் திரும்பு என்பது போல சைகைகள் -

இந்நிலைக்கு, காரணம் என்ன?

என்பதைச் சிந்தித்து கை பிசைந்து நிற்பதை விட, இந் தப் பிரச்சினையில் சுதந்திர மாக செயல்பட வருக வருக என்று என்னைக் காட்டிலும் வீரமிக்க தமிழர்களை அழைப்பதோடு நான் ஒதுங்கி நின்றுவிடாமல்; அவர்களு டன் இணைந்து பணியாற் றுவேன் என்றும் உறுதி கூறி - என்னுடனிருந்து துணை நிற்கும் தூய உடன்பிறப்புகள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்.

தொண்டு தொடரும்!

இந்தியப் பேரரசு என் வேண்டுகோளையும் அனைத் துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்து தீர்மானங்களையும் படிப்படியாக நிறைவேற்ற முனைந்ததற்காக - திருமதி சோனியா காந்தி, மாண்புமிகு பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் மாண்புமிகு பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கும் -

இலங்கைத் தமிழர்க்கு மருந்து, உணவு, உடை இவற்றை செஞ்சிலுவைச் சங் கம், அய்.நா. அமைப்பு போன் றவற்றின் மூலம் வழங்கிட இதுவரை எட்டு கோடி ரூபாய் அளவுக்கு நிதி வழங்கிய தமிழ்ப் பெரு மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள் கிறேன். மேலும் வழங்கிட வேண்டுகிறேன். நான் தெரி வித்துள்ள இந்தக் கருத்துகள் ; இலங்கைத் தமிழர்களின் காயத்திற்கும் - இங்குள்ள சில தலைவர்களின் எரிச்சலுக்கும் - தக்க சிகிச்சைக்கான மருந்தா கட்டும். அவர்களின் நலிவு தீர்த்திட ஒருவகையில் நாம் பயன்படுகிறோம் என்ற மன நிறைவுடன் என்றும் போல் தமிழ்த்தொண்டு - தமிழினத் தொண்டு தொடர்வோம்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு