ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

8 நவம்பர், 2008

ஈழத்தமிழர்களுக்கு ஜனநாயக வழிகளில் உதவிகள் செய்பவர் கலைஞர் விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன்

ஈழத்தமிழர்களுக்கு ஜனநாயக
வழிகளில் உதவிகள் செய்பவர் கலைஞர்

விடுதலைப்புலிகளின் அரசியல்
துறைப் பொறுப்பாளர் பா.நடேசன்

கொழும்பு, நவ. 8- ஈழத் தமிழர்களுக்கு இன்னல்கள் ஏற்பட்ட போதெல்லாம் என்னென்ன செய்யவேண்டுமோ அத்தனை பணிகளையும் ஜனநாயக வழியில் தமிழக முதல்வர் கலைஞர் செய்து வருகின்றார் என்று விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தமிழகத்திலிருந்து வெளிவரும் குமுதம் (12.11.2008) வார இதழுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:

பேச்சுவார்த்தைமூலம் தீர்வு காணலாம் என்ற இந்தியாவின் கோரிக்கைக்குப் பிறகு, சிறீலங்கா இராணுவத்தின் குண்டுவீச்சு குறைந்திருக்கிறதா?

மாறாக நேற்றும் இன்றும்கூட கிளிநொச்சிப் பிரதேசத்தி லுள்ள குடிமனைகள் மீது சரமாரியான பீரங்கித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏராளமான வீடுகள் அழிந்து நாசமாகியுள்ளன. ஒரு குடும்பத்தில் தந்தையும், தனயனும் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர்.

இந்த சூழலில் இந்தியாவிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

இலங்கைக்கான இராணுவ உதவிகளை நிறுத்தி, எமது இயக்கத்தின் மீதான தடையை நீக்கி, எம்மை அங்கீகரிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.'

ஈழப் போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் இருந்ததைப் போன்ற ஓர் ஆதரவு நிலை இப்பொழுது மீண்டும் தமிழகத்தில் உருவாகியுள்ளதா?

தமிழீழ மக்களும் தமிழக மக்களும் ஒரே குடும்பத்தவர்கள். தொப்புள்கொடி உறவுகள் போன்றவர்கள். எமக்கொன்றென் றால் தமிழகம் கொதித்தெழும். இன உணர்வு தமிழகத்தில் நீறுபூத்த நெருப்பாக இருந்து வருகின்றது. இன்று ஈழத்தில் சிறீலங்காவின் அரசு படைகள் தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்புப்போரை மேற்கொள் ளும்போது அதற்கு எதிராக தமிழக மக்கள் கொதித்தெழுந் துள்ளார்கள். இதுவே யதார்த் தம்.

மூத்த தமிழ் அரசியல்வாதி யாகவும் தமிழக முதல்வராக வும் ஈழப் போராட்டத்தில் கலைஞரின் செயல்பாடுகள் குறித்த உங்கள் அபிப்ராயம் என்ன?

கலைஞர் எமக்கு தந்தை போன்றவர். இன உணர்வு மிக்கவர். தமிழர்கள் எல்லோரும் சுயமரியாதையோடு வாழவேண்டும் என்பதில் அக்கறையுள்ளவர். ஈழத் தமிழர்களுக்கு இன்னல்கள் ஏற்பட்டபோதெல்லாம் என்னென்ன செய்யவேண்டுமோ அத்தனை பணிகளையும் ஜனநாயக வழியில் செய்து வருகிறார்.

நீங்கள் ஜெயலலிதாவை கொலை செய்யக் குறி வைத்திருப்ப தாகவும், அதனால்தான் அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறாரே?

இவ்வாறான கருத்துகளும் பிரசாரங்களும் எமக்கெதிரான சக்திகளால், தமிழக அரசியல் தலைமைகளை எமக்கெதிராக திருப்பிவிடும் நோக்கில் உருவாக்கப்பட்ட கட்டுக்கதையாகும். இவ்வாறான புனை கதைகளை கேட்கும்பொழுது எமக்கு மிகவும் வேதனையாகவும், துன்பமாகவும் இருக்கின்றது. இவ்வாறான புனை கதைகளை உருவாக்க வேண்டாமென சம்பந்தப்பட்ட தரப்பினரை மிகவும் அன்பாக கேட்டுக்கொள் கின்றோம் என்றார் பா.நடேசன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு