ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

6 நவம்பர், 2008

விடுதலைப்புலிகளுடனான போரை எதிர் கொள்ள இயலாமல் சிங்களப் படைவீரர்கள் ஓட்டம்

விடுதலைப்புலிகளுடனான போரை எதிர் கொள்ள
இயலாமல் சிங்களப் படைவீரர்கள் ஓட்டம்

கிளிநொச்சி, நவ. 6 - இலங்கை யில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை எதிர் கொள்ள முடியாமல், சிங்களப் படையில் பணியாற்றி வந்த பலரும் போர்ப் படையில் இருந்து தப்பி ஓடிக் கொண்டு இருக்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 16,000 மேற்பட்டோர் இலங்கைப் படைகளிலிருந்து தப்பி ஓடிவிட்டதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், சிங்களப் படை யினருக்கும் இடையே கடந்த 2006 ஆம் ஆண்டின் தொடக் கத்திலிருந்து கடும் சண்டை நடந்து வருகிறது. இரு தரப் பிற்கும் இடையே 2002 ஆம் ஆண்டில் செய்து கொள்ளப் பட்ட சண்டை நிறுத்த உடன் பாட்டை மீறி இலங்கைப் படையினர் விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்தி வரு கின்றனர். ஏறக்குறைய 3 ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்தி வருகிற போதும், இலங்கைப் படையினரால் குறிப்பிடத்தக்க அளவில் எந்த வெற்றியையும் பெற முடியவில்லை.

இதனால் இலங்கைப் படையினரிடையே பெரும் சோர்வு ஏற்பட்டுள்ளது. இது வரை விடுதலைப் புலிகள் மீது தான், போர்ப்படையினர் தாக் குதல் நடத்தி வந்திருக்கின்றனர். ஒரு முறைகூட விடுதலைப் புலிகள், போர்ப்படையினர் மீது தாக்குதல் நடத்தவில்லை. இப்போது போர் உச்ச கட் டத்தை எட்டியிருக்கும் நிலை யில், விடுதலைப் புலிகள் விரை வில் தாக்குதலைத் தொடங்கு வார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அவ்வாறு தாக்கு தலைத் தொடங்கினால் இலங்கைப் படையினருக்கு பெரும் உயிரிழப்பு ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது. இதற்கு அஞ்சி இலங்கைப் படை வீரர்கள் போர்ப்படையி லிருந்து விலகித் தப்பியோடிக் கொண்டிருக்கின்றனர்.

கடந்த ஆகஸ்ட், செப்டம் பர் மாதங்களில் மட்டும் வன்னிப் பகுதியில் உள்ள போர் முனைகளில் இருந்து 70 க்கும் மேற்பட்ட போர்ப்படையினர் தப்பியோடி உள்ளனர். இவ் வாறு தப்பியோடுவதைத் தடுப்பதற்காக, போர் முனைப் பகுதிகளில் இருந்து செல்லும் அனைத்துப் பேருந்துகளிலும், காவல் துறையினரும், போர்ப் படையினரும் கூட்டாக சோதனை செய்து வருகின் றனர். போர்ப்படை வீரர்கள் போல பயணிகள் எவரேனும் தோன்றினால் அவர்களிடம் விசாரணை செய்கின்றனர்.

கடந்த 2006 ஆம் ஆண்டு போர் தொடங்கியதில் இருந்து 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை 15,000 போர்ப் படையினர் பணியிலிருந்து தப்பியோடி உள்ளனர். கடந்த சில மாதங்களில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விலகியுள்ளனர். இனி வரும் நாள்களில் தப்பியோடுவோ ரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற கவலையில் இலங்கைப் படையினர் ஆழ்ந்துள்ளனர். இவ்வாறு போர்ப்படை வீரர்கள் போர் முனையிலிருந்து தப்பியோடு வதன் காரணமாக, போர் முனையில் இலங்கைப் படை யினருக்கு நெருக்கடி ஏற்பட் டுள்ளது.

விடுதலைப் புலிகளை வீழ்த்துவதற்காக இலங்கைப் போர்ப்படைக்கு பல ஆயிரக் கணக்கான இளைஞர்கள் கட்டாயப்படுத்திச் சேர்க்கப் படுகின்றனர். அவர்கள்தான் இப்போது தப்பி ஓடிக் கொண் டிருப்பதாக பாதுகாப்பு வல்லு நர்கள் தெரிவிக்கின்றனர். போர்ப்படைக்கு நாளுக்கு நாள் வலு குறைந்து வருவதால் புதிதாக ஆட்களைச் சேர்க்கும் பணியை தீவிரப்படுத்த இலங்கை அரசு முடிவு செய் துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு