ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

9 நவம்பர், 2008

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்


தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்...

மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்

.

முதன் முதலில் வருண அமைப்பை எதிர்த்து சமத் துவத் தொண்டு செய்த போராட்ட முன்னோடிகளில் புத்தர், மகாவீரர் ஆகியோர் சத்திரிய குல தத்துவ ஞானி களாவர். ஸ்மிருத காலத்து தரும சாஸ்திரங்களில் (அதா வது கி.மு. 500) சத்திரியர்கள் பாடம் கற்பிக்கலாம் என உள்ளது. அவர்களுடைய போதனைகள், அவற்றை பின்பற்றும் மக்கள் பிரிவை இந்து மதத்திற்கு மாறாக அறிவு மதமான பவுத்த மத மாக, மார்க்கமாக தோற்று வித்தனர். அந்த மதத்தில் மனிதர்களுக்குள் பேதம் காணப்படவில்லை எனலாம்.

திருவள்ளுவர் எழுதிய திருக்குறளில் (கிட்டத்தட்ட 2040 வருடங்களுக்கு முன்) எந்த இடத்திலும் ஜாதி, கடவுள் குறிப்பிடப்பட வில்லை. பிறப்பைக் கூட தொழிலின் அடிப்படையில் என்பதில்கூட திருவள்ளு வருக்கு உடன்பாடில்லை என்பதற்கு சான்றாக, பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா

செய்தொழில் வேற்றுமை யான் (பெருமை அதிகாரம் குறள் - 972).

என்னும் குறள் விளங்குகிறது.

திருநாவுக்கரசர் (சைவ மத நாயன்மார்களுள் ஒருவர்)

சாத்திரம் பல பேசுஞ் சழக்கர்காள்

கோத்திரமும் குலமுங் கொண் டென்செய்வீர்

பாத்திரஞ் சிவமென்று பணித்தீரேல்

மாத்திரைக்குள் ளருனும் மாற்றோரே

மாணிக்கவாசகர் (மற்றொரு நாயன்மார் - சைவ மதம்) திருவாசகத்தில்

சாதி குலம் பிறப்பென்னுஞ் சுழியாட்டுத் தடுமாறும்

ஆதமிலி நாயேனை அல்லலறுத் தாட்கொண்டு

போதைகுணம் பிறருருவம் யான் எனாதன் உரைமாய்த்துக்

கோதில்அழுது ஆனானைக் குறைவுதில்லை கண்டேன்,

என்றும்,

வள்ளலார் பாடிய திருவருட்பாவில்,

சாதியிலே, மதங்களிலே சாத்திரச் சந்தடிகளிலே

கோத்திரச் சண்டையிலே அலைந்தலைந்து அழிக்கின்ற உலகீர்

உமக்கிது அழகலவே.

என்றும், மேலும்

அதே திருவருட்பாவில் வள்ளலார் மற்றொரு இடத்தில்,

நால்வருணம் ஆசிரமம் ஆனநம் முதலா

நவின்றகலைச் சரிதமெலாம் பிள்ளை விளையாட்டே

மேல் வருணம், தோல் வருணம் கண்டறிவா ரிலைநீ

விழித்துப்பார் என்றெனக்கு விளம்பிய சற்குருவே

இருட்சாதித் தத்துவ சாத்திரக் குப்பை

இருவாய்ப் புன்செயில் எருவாக்கிப் போட்டு

அவ்வையார் கீழ்க்கண்டவாறு ஜாதி பேதத்தை சாடியுள்ளார்:

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்

நீதிவழுவா நெறிமுறையில் - மேதினியில்

இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்

பட்டாங் கிலுள்ள படி.

பார்ப்பனச் சனாதன பாரதியார் பல புரட்சிப் பாடல்களுடன், மனித சமத்துவத்தையும் அவ் வப்போது தமது கவிதைகளில் வெளிப்படுத்தியுள்ளார்:

சூத்திரனுக்கு ஒரு நீதி - தண்டச்

சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி

சாத்திரம் சொல்லிடுமாயின் - அது

சாத்திரம் அன்று சதியென்று கண்டோம்.

சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே

தமிழ் மகள் சொல்லியசொல் அமிழ்தமென்போம்

நீதிநெறி யினின்று பிறர்க்கு தவும்

நேர்மையர் மேலவர். கீழவர் மற்றோர்.

சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்

தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!

நீதி உயர்ந்தமதி, கல்வி அன்பு

நிறைய உடையவர்கள் மேலோர்

புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் இயற்றிய புரட்சிப் பாடல்,

இருட்டறையில் உள்ளதடா உலகம் சாதி

இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே

அண்ணல் அம்பேத்கர் அவர்களும், சமத்துவத்திற் காக குரல் கொடுத்த போராளி களுள் முக்கியமானவராவார். ஜாதி பகுத்தறிவுக்கு முரணா னது என்பதால் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்றும், ஜாதி தெய்வீகமானது என இந் துக்கள் நம்புவதாகவும், ஜாதி யில் இணைக்கப்பட்டுள்ள புனிதமே தெய்வீகம். எனவே தெய்வீகம் எனும் கடவுள் ஒழிக்கப்பட்டாலொழிய ஜாதி ஒழியாது என அம்பேத்கர் கூறினார்.

900 ஆண்டுகளுக்கு முன்பே, வைதிக மத ஆச்சாரி யார்களான ஆதிசங்கரரும், இராமானுஜரும் தீண்டா மையை கண்டித்தனர். மனித தருமத்திற்கு முரணான தீண் டாமை வழக்கம் இந்து மதத்திற்கும், சமூகத்திற்கும் தலைக்குனிவை ஏற்படுத்திய மானக்குறை என்றார். காந்தியடிகள் தீண்டாமை ஒழிப்பை தம் வாழ்க்கையில் முதல் பணியாகக் கருதினார்.

தீண்டாமை இந்து மதத் தின் ஒரு பாகமன்று;

பாகமாயிருப்பின், அத் தகைய இந்து மதம் எனக்கு வேண்டாம்; தீண்டாமை எனும் சாத்தான், அரக்கனுடைய சூழ்ச்சியே தவிர வேறில்லை

வேதங்கள், சாஸ்திரங்கள் ஆகாது - எனக் காந்தியார் தெளிவுபடக் கூறினார்.

சீத்தலைச்சாத்தனார், கபிலர், பாம்பாட்டிச் சித்தர், திருமூலர், திருக்கலம்பக ஆசிரியர், கம்பர், பேராசிரியர் சுந்தரம்பிள்ளை, அசோகர், அய்யங்காளி, வைகுண்டசாமி உள்ளிட்ட பலர் மனித பேதங்களைச் சாடியுள்ளனர்.

விவேகானந்தர் (1863-1902) இந்து சமயத்தில் ஜாதி வேறு பாடு கூடாது என்று வலியுறுத் தினார். 15-ஆம் நூற்றாண்டில் தெலுங்கு புலவர் வேமண்ணா, அதற்குமுன் வீரேசலிங்கம் பந்துலு (1849-1919) ஆகியோர் ஜாதியத்தின் பொய்மைகளை எடுத்துக்காட்டி தெலுங்கு மக்களிடையே மறுமலர்ச் சியை ஏற்படுத்தி பார்ப்பன ருக்கான தளங்களை எதிர்த் தனர். மெய்மை அடைவது, புனிதநீர், மந்திரம் போன்ற வற்றை சாடினார். கன்னடப் புலவர் சர்வக்ஞர் பசவர் (1131-1167) கன்னட நாட்டில் தோன் றிய பிராமண, சூத்திரத் தன்மை ஜாதி வேறுபாடுகளை கடுமையாக தாக்கினார். உடலுறுப்பு அனைவருக்கும் ஒன்றுபோல உள்ளநிலையில் உயர்ந்த ஜாதி - தாழ்ந்த ஜாதி என்று கூறுவது பயனில்லை. உள்ளத்தில் எவன் உயர்ந்த வனோ அவனே நல்ல மனிதன் என சிந்தனை செய்யத் தூண் டினார்.

அயோத்திதாசர் (1845-1914): இங்கே வேதங்களை விட் டால் மட்டும் போதாது, ஜாதி களை விட்டால்தான் ஒருவன் பண்புள்ள, ஒழுக்கமுள்ள மனிதனாக வாழ முடியும் என்பதை புத்தர் வழி நின்று வலியுறுத்தியவர் ஆவார். பிராமணியத்தின் சனாதனம், இன நிறவாதம், ஆதிக்கம், மதவாதம், பயங்கரவாதம் எதிரான வன்முறையில்லை, ஆதிக்கமில்லை - சமத்துவம் உண்டு, புரோகிதம் இல்லை, கடவுள் இல்லை, ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்ளும் வழிமுறை - பகுத்தறிவு, சக மனிதனையும் சமமாக பாவிக்கும். நேர்மை, ஜாதி மத, நிற, பால் இனம், நாடு, பொருள் ஆகிய அளவு கோலின்றி சமமாக அறிவுக் கண்ணை கட்டிப் போட்டி ருப்பது பிராமணியமே என சரியாக இனம் கண்டார். பிராமணியத்தை பூரணமாகக் கைவிட்டால்தான் விடுதலை, இல்லையேல் மனித வளர்ச்சி, மனித நேயம் இல்லை என போராடினார்.

இரட்டைமலை சீனிவாசன் (1869-1945): அயோத்திதாச ரின் மனைவியின் மூத்த சகோ தரர் திராவிட மகாஜன சபை தோற்றுவித்தார். பின் பறையர் மகாஜன சபை என அடுத்த ஆண்டிலேயே தோற்றுவித் தார். இவரால்தான் திராவிடர் - ஆதி திராவிடர் என்ற சொல் பயன்பாட்டுக்கு வந்தது. தென் இந்தியர் நலஉரிமைச் சங்கத்தில் இணைந்து செயல்பட்டார். பல வரலாற்று நூல்கள், கல் வெட்டுகள் ஆராய்ந்தவர். ஜாதிக் கொடுமைகள், சாஸ் திர சம்பிரதாயங்களை விரட்ட கல்லூரிப் படிப்பை பாதியில் விட்டு விட்டு பணி யாற்றியவர்.

எம்.சி. இராஜா (1883 - 1947) பழங்குடி மக்களின் பாதுகாவ லராகத் திகழ்ந்தவர். திராவிடர் பள்ளி, இரவுப் பள்ளி நடத் தியவர், சாரண குழு தலைவ ராக இருந்தவர். ஆலய நுழை வுப் போராட்டம் நடத்தியவர். சட்டமன்றம், நாடாளுமன்றங் களில் ஜாதி பேதங்களைக் கண்டித்து பேசியவர். தமிழக அமைச்சராகவும் இருந்தார்.

மேயர் என். சிவராஜ் (1892 - 1924): சட்டக் கல்லூரி பேரா சிரியராக இருந்தவர். மாணவர் விடுதிகள் தோன்றக் கார ணமாக இருந்தவர் சட்டமன்ற உறுப்பினராகவும், சென்னை மாநகராட்சி மேயராகவும் இருந்தார்.

இராஜாராம் மோகன்ராய் (1772- 1833): வங்காளதேசத்தில், அந்தணர் குலத்தில் பிறந்த சீர்திருத்தவாதி; பிரம்ம சமா ஜம் நிறுவியவர், சமய வேற் றுமை கூடாது, குல வேற் றுமை கூடாது. உருவ வழிபாடு கூடாது, சாதிமத எனும் உடன்கட்டை ஏறும் சதி பழக் கத்தை தடுத்தவர். இந்து மக் களை தங்கள் மதத்தில் சேர தொந்தரவு செய்வதை ஒழிக்க ஒரு புதிய சமயத்தை ஏற்படுத் தினார். நாராயண குரு (1854 - 1928): நிற பேதம், இன பேதம், மத பேதம் போன்ற மாறுபாடு களை கண்டித்தவர், ஒன்றே குலம், ஒருவனே கடவுள், ஒரே ஜாதி என்ற சிந்தனை கொண்ட கேரளப் பெரியார். மதம் எதுவானாலும் மனிதன் முன்னேறினால் போதும், எல்லா மதங்களும், உயிர் சத்தும் ஒன்றே என்பார். அவ ரது தத்துவம் ஜாதியை பேசாதே, ஜாதியை கேட் காதே, என்பதுதான். உயிர்ப் பலியிடு தலைத் தடுத்தவர்.

மகாத்மா ஜோதிராவ் புலே (1827 - 1890): மகாராஷ்டிரா - புனே நகரில் முதன் முதலாக சமூக நீதிக்கான, கல்வி வாய்ப்பிற் கான முன்னேற்றப் பணிகள், போராட்டம் தொடங்கிய முன்னோடி. பெண்கள் பள்ளி தொடங்கினார். விதவைகள் மறுமணம் நடத்தி வைத்த இலட்சியக் காவலர். ஜாதியத் தின் முக்கிய அடித்தளமான பார்ப்பனியத்தைக் கடுமை யாகத் தாக்கினார். சமூகநீதி, சமூக சமத்துவம், பகுத்தறிவுக் கொள்கை வழி இயக்கம் சத்ய சோதக் சமாஜ் (உண்மை நாடுவோர் சங்கம்) கண்டார். பார்ப்பனர் அல்லாத முதல் இந்து சீர்திருத்தத் திரும ணத்தை 1873-ல் நடத்திக் காட் டியவர்.

சமூகப் புரட்சியாளர் சாகு மகராஜ் (1894-1922): மராட்டிய மாநிலத்தில் சிவாஜி மரபில் வந்த மிகப் பெரும் புரட்சியா ளர். சமூக நீதியில், பிற்படுத்தப் பட்டவர்களுக்கு 50 விழுக் காடு இடஒதுக்கீடு செய்ய 1902 வகுப்புவாரி உரிமை ஆணையை முதன் முதலில் கொண்டுவந்த பெருமைக்குரி யவர். கல்வியைக் கட்டாய மாக்கி, ஏழை மாணவர் களுக்கு தங்கும் விடுதி அமைத்து, உதவிப் பணமும் வழங்கிய பெருமைக்குரியவர். ஜாதியை நிலைநாட்டி, வகுப்பு வாரி உரிமை கேட்டவர், பிற்காலத்தில் ஜாதி அமைப்பை ஒழிக்க வேண்டும் என்றவர். சூத்திர மன்னர் ஆட்சி நடந்ததால், பார்ப்ப னர்கள் புராணச் சடங்குகள் செய்தனர். அதே சமயம் வேத மந்திரங்கள் கூற மறுத்தவர்.

மேலும் 19-ஆம் நூற் றாண்டு தொடக்கத்தில் பார்ப் பனர் அல்லாதோர் இயக்கம், தென் இந்தியர் நல உரிமைச் சங்கம் என அமைத்து, பிறகு அரசியலுக்கு நீதிக்கட்சியாக உருமாறக் காரணமான, திரா விடர் இயக்க மூவேந்தர்கள் - சர் பிட்டி. தியாகராயர், டாக்டர் சி. நடேச முதலியார், டாக்டர் டி.எம். நாயர் போன் றவர்களின் மனித சமத்துவப் பணிகளைப்பற்றியும், இந்திய தேசிய காங்கிரசில் பார்ப்பன ரல்லா தோருக்காகக் குரல் கொடுத்தும், நிறைவேறாமல் சுயமரியாதை இயக்கம் கண்டு போனதால் மிகப் பெரும் புரட்சி மாறுதல் கண்ட தந்தை பெரியார் அவர்களைப் பற்றியும் அடுத்த இதழில் விளக்கமாகக் காண்போம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு