தமிழர் இன உணர்வைக் கொச்சைப்படுத்தும் ஊடகங்கள் ஜெயா தொலைக்காட்சி, சன் நியூஸ் காட்சி, தினமணி

சென்னையில் பெருகிவரும் வாகனங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது கடந்த சில ஆண்டுகளாக வழக்கமாகிவிட்டது. பொருளா தார வளர்ச்சி ஏற்பட்டுவரும் சூழலில் வாகனங் களைக் கட்டுப்படுத்துவது சற்று கடினமான செயல். ஆனால், போக்குவரத்தைச் சீர்செய்திட புதிய சாலைவழித் தடங்களை உருவாக்குதல், சாலை மேம்பாலங்களை அமைத்தல், ஒரு வழிப் பாதைகளாக மாற்றுதல் ஆகிய பணிகளின் வாயிலாக போக்குவரத்தைச் சீர்செய்திட முடியும். அடுத்தடுத்த ஆண்டுகளில் பெருகும் வாகனங்களைக் கணக்கில் கொண்டு இப்பணி களை அரசு மேற்கொள்ள வேண்டும். கடந்த 2001 முதல் 2006 வரை ஆட்சியில் இருந்த அ.இ.அ.தி.மு.க. அரசு இத்தகைய பணிகளில் அறவே ஈடுபடவில்லை.

சென்னை மாநகர போக்குவரத்தைச் சரிப்படுத்த நிரந்தரமான கட்டமைப்புகளை ஏற்படுத்த எள் அளவும் முனையவில்லை. மாறாக 1996- - 2001இல் கலைஞர் ஆட்சியில் மேற்கொள் ளப்பட்ட மேம்பாலப் பணிகள் சிலவற்றிற்கு தடை யும் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், 2006ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்ற தி.மு.க. அரசு புதிய மேம்பாலப் பணிகளைத் தொடங்கி விரைந்து முடித்து ஓராண்டிற்குள் ளாகவே பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட் டன. இன்னும் சில விரைந்த கட்டுமானப் பணி களில் உள்ளன. இதன் காரணமாக போக்கு வரத்து சீரானது. இது நிரந்தரப் பணி, சென்னை மாநகருக்கு கலைஞர் அரசு செய்த காலத்தால் நிலைக்கும் நல்ல பணி. ஆயினும் அவ்வப்போது ஏற்படும் தற்காலிகச் சூழல்களால் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாததாக உள்ளது. இது தற்காலிகமானது. சில மணிநேரங்களில் சீர் செய் யப்படுவது. இதற்காக போக்குவரத்துக் காவலர் கள் படும்பாட்டை பார்த்துக் கொண்டிருக் கிறோம். இந்நிலையில், கடந்த 24.10.2008 அன்று சென்னையில் பெய்த கனமழையால் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. அன்றைய நாளில் தீபாவளி விடுமுறைக்கு வெளியூர் செல்பவர் கள் அதிகமாகப் புறப்பட்டதால் ஏற்பட்ட நெருக்கடியும் சேர்ந்துகொண்டது. இந்த உண்மைகள் தமிழக பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களுக்கு நன்கு தெரிந்ததுதான். ஆனால் கடந்த 25.10.2008 அன்று ஜெயா தொலைக்காட்சி, சன் நியூஸ் தொலைக் காட்சி, தினமணி ஏடு ஆகியவை மனிதச் சங் கிலியால் போக்குவரத்து நெரிசல் என்று செய்தி கூறின. கடும் மழை மற்றும் தீபாவளி ஆகியவை தான் காரணமாகும். ஏனென்றால், அண்ணா சாலையில் மனிதச் சங்கிலியை முதல்வர் கலை ஞர் பார்வையிட வரும் வரையிலும் அதற்குப் பின்பும் பேருந்துகளும் மற்ற வாகனங்களும் தாராளமாக அனுமதிக்கப்பட்டன. கைகோத்த தமிழர்கள் சாலை ஓரத்திலேயே நின்றார்கள். இந்த உண்மையை மறைத்துவிட்டு ஜெயா, சன்நியூஸ், தினமணி ஆகியவை ஈழத் தமிழர் இன்னல் களைய இன உணர்வோடு கைகோத்த அறப்போரைக் கொச்சைப்படுத்தி மனிதச் சங்கிலியால் மக்கள் பாதிப்பு எனச் சொன்னது அருவறுப்பான போக்கு அல்லாமல் வேறென்னவாக இருக்க முடியும்? தினத்தந்தி (25.10.2008) மிகச் சரியாக மழையினால் போக்குவரத்து பாதிப்பு எனச் செய்தி வெளி யிட்டது. ஆனால் மேற்சொன்ன ஊடகங்கள் பொய்யுரைத்தன. விஜயகாந்த் கட்சியின் மாநாட்டின்போது கூட போக்கு வரத்து நெரி சல் ஏற்பட்டது. ஆனால் அந்த ஊடகங்கள் விஜயகாந்த் மாநாட்டால் மக்கள் அவதி என்று செய்தி வெளியிடவில்லையே ஏன்? இதுதான் ஊடக தர்மமா? இனியும் கூச்ச மில்லாமல் நடுநிலை என்று சொல்லிக் கொள்ள லாமா? தமிழர் இன உணர்வு கிளர்ந்து எழுந்தது கண்டு பொறுக்கமுடியாமல் பொய்ச் செய்திகளை வெளியிட்டு பொறுமியவர்கள் யார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்

பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி ;கல்லூரி வளாகத்தில் ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் சுமார் 200 வகையான மூலிகைச் செடிகளை உடைய மூலிகைப் பண்ணை