பெண்ணுரிமை விதவைப் பெண்களைக் காக்க சட்டம் மட்டும் போதுமா? ஒரு அலசல் பொன்.வெங்கட்

பெண்ணுரிமை

விதவைப் பெண்களைக் காக்க சட்டம் மட்டும் போதுமா?


சட்டீஸ்கர் மாநிலம் செச்சார் கிராமத்தில் கடந்த அக்டோபர் 11 ஆம் தேதியன்று 75 வயதான லால்வதி என்ற பெண்மணி தனது கணவனின் எரியும் சிதையில் பாய்ந்து உயிரை விட்ட செய்தியை அது சதி என்று ஊடகங்கள் கூறின. இது போன்றதொரு நிகழ்ச்சியை பழைய சதி என்று முத்திரை குத்தி போற்றப்-படுவதைக் கண்டு சமூக ஆர்வலர்கள் சோர்-வடைந்து போகின்றனர்.

அது சதியா? இல்லையா? கிராமப்புறத்தைச் சேர்ந்த ஒரு சராசரி இந்து விதவையின் அளவு கடந்த மன வெறுப்பை அது எதிரொலிக்கும் போது, அதை எந்த பெயரிட்டுச் சொன்னால்-தான் என்ன?

டில்லி சமூக ஆய்வு மய்யத்தின் இயக்குநரும், சமூக ஆர்வலருமான ரஞ்சனா குமாரி இது சதியல்ல; முற்றிலும் வேறு வகையிலானது என்று கூறுகிறார். செச்சாரிலிருந்து மாறுபட்ட செய்திகள் வருகின்றன. இறந்தவரின் உறவினர் அனைவரும் இடுகாட்டை விட்டுச் செல்லும்-போது, அந்த விதவை எரியும் கணவரின் சிதையருகே தனியே விடப்பட்டிருந்தார். வயதான பெண்களை அலட்சியப்படுத்தும் மெத்தனத்தையே அது காட்டுகிறது என்று நான் கருதுகிறேன் என்று அவர் கூறுகிறார். சதி- இந்தியாவில் ஒரு விதவை எரிக்கப்-படுவது என்ற நூலின் ஆசிரியையும், பத்திரிகையாளருமான சகுந்தலா நரசிம்மன் செச்சார் நிகழ்ச்சி போன்றவற்றை சதி என்று ஊடகங்கள் மிகைப் படுத்துகின்றன என்று கூறுகிறார். பாரம்-பரியமான பழக்க வழக்கங்களைக் கடைப்-பிடிக்க பல புதிய விதவைகள் வற்புறுத்தப்-படுகின்றன என அவர் கூறுகிறார்.

கணவன் இறந்த பிறகு, உறவினரின் உதவி-யின்றி, அடங்கி ஒடுங்கி வாழ வேண்டிய நிலைக்கு ஆளாகும் விதவையின் எதிர்கால வாழ்க்கை பற்றிய அச்சமே கணவனின் எரியும் சிதையில் பாய்ந்து சிலரை உயிர் விடச் செய்கிறது.

விதவை உயிர் வாழ்ந்தாலும், அவர் உயிர் வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்று தமிழில் ஒரு முதுமொழி கூறுகிறது. ராஜஸ்-தான் மாநிலத்தின் தியோரலா கிராமத்தில் 1987 இல் உடன்கட்டை ஏறிய புகழ் பெற்ற ரூப் கன்வாரின் சதி நிகழ்ச்சியைப் போற்றி வழி-பட்டவர் என்று பழி கூறப்பட்ட சகுந்தலா நரசிம்மன் எரியும் சிதையில் பாய்வதற்கு துணிவு தேவையில்லை; விதவையாக வாழ்வதற்குத்தான் பெண்ணுக்குப் பெரும் துணிவு தேவை என்று ஒரு பெண் கூறினார் என்று கூறுகிறார். கிராமப்புறங்களில் விதவை-கள் எதிர்கொள்ள நேரும் வெறுப்பு மற்றும் மனச் சோர் அளிக்கும் வாழ்க்கை நிலை-யையும், அவர்கள் கீழ்த்தரமாக நடத்தப்-படுவதையும், மகன்களுக்கு மட்டுமே சொத்-துரிமை, விதவைக்கு இல்லை என்னும் ஆணாதிக்க சமூகத்தில் சிக்கித் தவிப்பதையும் இவை-யெல்லாம் அடிக்கோடிட்டுக் காட்டு-கின்றன. வேதங்கள் உடன்கட்டை ஏறுவதை அனுமதிக்கின்றன என்று கூறுவதை சகுந்தலா மறுக்கிறார். கணவன் இறந்த பின்னும் மனைவி உயிர் வாழ முன்வரவேண்டும் என்றுதான் வேதங்கள் கூறுகின்றன. முன்னர் என்ற பொருள் தரும் அக்ரி என்ற சொல் அக்னி என்று தவறாக எடுத்துக் கொள்ளப்-பட்டுள்ளது என்று கூறுகிறார்.

பணம், சொத்து, சொந்தப் பகை, குடும்ப கவுரவம், சில நேரங்களிலில் பாலியல் வன்கொடுமை போன்ற வழக்குகளில் பெண்-களின் பங்கேற்பை அழித் தொழிக்க இந்த வேத வாதமான பாரம்பாரிய பழக்கவழக்கம் என்பது ஆண்களுக்கு ஆதரவாக விளங்கு-வதை எவரும் மறுக்க முடியாது. இது போன்றதுதான் வட, மத்திய இந்திய மாநிலங்களில் காணப்படும் சூன்யக்காரி என்று பெண்களை வேட்டையாடும் வழக்கமும். பிகார், ஜார்க்கண்ட் இந்த இரு மாநிலங்கள் மட்டுமே இந்த வழக்கத்தை சட்டப்படி தடை செய்துள்ளது.

பெண்சிசுக்கொலை, பெண் குழந்தைக் கொலை, சிறுமிகள் திருமணம், சூன்யக்காரி என்று கொடுமைப் படுத்தப்படுதல், வரதட்-சணை சாவுகள், விதவைகள் இழிவாகவும் கொடுமையாகவும் நடத்தப்படுதல் ஆகிய அனைத்துமே இந்தியாவில் பெண்கள் எவ்வாறு கீழ்த்தனமாக நடத்தப்படுகின்றனர் என்பதன் வெளிப் பாடுகளாகும். தியோரா ரூப் கன்வார் உடன் கட்டை நிகழ்ச்சிக்குப் பின் அவருக்குக் கோயில் கட்ட மக்கள் ரூ 75 அலட்டசம் நன்கொடை அளித்தனர். ஆனால் ஒரு விதவைக்கு உதவி செய்ய எவரும் 75 ரூபாய் கூட கொடுக்க முன்வரமாட்டார்கள் என்று சகுந்தலா கூறுகிறார்.

விதவைகளைப் பொருத்தவரை அவர்-களுக்கு உள்ள சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளையும், வயது முதிர்ந்த பெண்-களுக்கான பொருளாதாரப் பாதுகாப்பு பற்றியும் ஆழ்ந்து ஆராய வேண்டியது மிகவும் அவசியம் என்று ரஞ்சன் குமாரி கூறுகிறார்.

பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களைத் தடுக்க பல சட்டங்கள் உள்ளன என்பது உண்மைதான்; ஆனால், அவை-களினால் பயன் ஏதும் விளையவில்லை. ரூப் கன்வார் நிகழ்ச்சிக்குப் பிறகு தற்போதுள்ள சதி தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் வாக்காளர்களின் வாக்கு வங்கியை எதிர்த்துக் கொள்ளத் துணிவற்ற அரசியல்வாதிகளால் இந்த சட்டத்தின் கீழ் இது போன்ற உடன்கட்டை நிகழ்ச்சிகளைத் தடுப்பது, அல்லது நிகழ்வுக்குக் காரணமானவர்களுக்குக் கடும் தண்டனை அளிப்பது போன்ற செயல்களுக்கு முட்டுக்கட்டை போடப் படுகிறது. இதே போன்று, 1929 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் இயற்றப்பட்ட குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டங்கள் உள்ளபோதும், குழந்தைத் திருமணங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன என்பதை 2005-06 ஆம் ஆண்டிற்கான தேசிய குடும்ப நல ஆய்வு தெரிவிக்கிறது. தங்கள் கணவருடன் வாழ சிறுமிகள் மூட்டை கட்டி அனுப்பப்-படுவதையோ, அல்லது அவர்கள் மீதான பாலியல் வன்கொடுமையையோ அல்லது இதர கொடுமையையோ இச்சட்டங்களால் தடுக்க இயலவில்லை. 29 மாநிலங்களில், 20-24 வயதுப் பிரிவில் உள்ள பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், அவர்களுக்கு 18 வயது நிறைவடையும் முன்பே திருமணம் செய்விக்கப்-பட்டுகிறார்கள் என்று மேற்கண்ட ஆய்வு தெரிவிக்கிறது. இத்தகைய குழந்தைகள் திருமண எண்ணிக்கை கிராமப்புறங்களில் 58 . 5 விழுக்காடாகவும், நகர்ப்புறங்களில் 27 . 9 விழுக்காடாகவும் உள்ளது.

சட்டங்கள் மூலமும், சமூகக் கருத்து பிரசாரத்தாலும் இவற்றில் மாற்றங்களைக் கொண்டு வரமுடியும். ஆனால் இத்தகைய மாற்றங்கள் மிகக் குறைந்த அளவில் மட்டுமே இருக்க முடியும். கடந்த பல்லாயிரம் ஆண்டுக் காலமாக நிலவி வரும் பாரம்பரியமான சமூகப் பழக்க வழக்கங்களையும், நம்பிக்கைகளையும் முற்றிலும் மாற்றுவதன் மூலம் மட்டுமே விரும்பத் தகுந்த சமூக மாற்றங்களைக் கொண்டு வரமுடியும் என்று சமூக ஆர்வலர்களும் கல்வியாளர்களும் திடமாக நம்புகின்றனர். மனைவி இறந்த பின் மனைவியு-டன் உயிர் விட எத்தனை கணவர்கள் முன்வருவார்கள்?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்

பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி ;கல்லூரி வளாகத்தில் ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் சுமார் 200 வகையான மூலிகைச் செடிகளை உடைய மூலிகைப் பண்ணை

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்