ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

9 நவம்பர், 2008

அமெரிக்காவுக்கு ஆள் கடத்தல்: சரவண பவன் ராஜகோபால் மகன் கைது

சென்னை: போலி விசாக்கள் மூலம் அமெரிக்காவுக்கு ஆட்களை அனுப்பியதாக சரவண பவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபாலின் மகன் சிவக்குமார் கைதாகியுள்ளார்.

ஜீவஜோதி வழக்கில் சிக்கி மீண்டுள்ள சரவண பவன் ராஜகோபால் குடும்பத்திற்கு புதுச் சிக்கல் எழுந்துள்ளது. அவரது மகன் சிவக்குமார், போலி விசாக்கள் மூலம் அமெரிக்காவுக்கு ஆட்களை கடத்தியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார்.

சரவண பவன் ராஜகோபாலின் மகன் சிவக்குமார். இவர் வெளிநாடுகளில் உள்ள சரவண பவன் கிளைகளின் பணிகளைப் பார்த்துக் கொள்கிறார்.

இந்த நிறுவனத்தின் அமெரிக்க கிளைகளுக்குத் தேவையான ஆட்களை, போலி விசாக்கள் மூலம் அனுப்பி வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அமெரிக்க தூதரகம் சார்பில் போலீஸில் புகார் தரப்பட்டது.

இதையடுத்து போலீஸார் நேற்று இரவு சிவக்குமாரை கைது செய்தனர். அவருடன் ராமு என்பவரும் கைதானார். சிவக்குமார், போலி ஆவணங்களைக் காட்டி விசாக்கள் பெற்று நான்கு பேரை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தது தெரிய வந்தது.

அவர் மேலும் பலரையும் இவ்வாறு அனுப்பி வைத்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இன்று சிவக்குமாரை நீதிபதி முன்பு போலீஸார் ஆஜர்படுத்தவுள்ளனர். பின்னர் போலீஸ் காவலில் எடுத்து அவரை தீவிரமாக விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்புதான் நடிகை புளோரா இதே போன்ற புகாரில் சிக்கி கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலையானார் என்பது நினைவிருக்கலாம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு