ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

10 நவம்பர், 2008

மிக முக்கியமான தகவல்: போர் நிறுத்தம் : விடுதலைப் புலிகள் அறிவிப்பு


மிக முக்கியமான தகவல்:
போர் நிறுத்தம் : விடுதலைப் புலிகள் அறிவிப்பு

சென்னை, நவ. 9- தாங்கள் சிறீ லங்கா அரசுடன் போர் நிறுத் தத்திற்கு தயார் என விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர் (நவம்பர் 8)
நாங்கள் எப்பொழுதும் போர் நிறுத்தத்திற்குத் தயார் என்ற எங்கள் நிலைப்பாட் டைத் திரும்பவும் சொல்ல எங்களுக்குத் தயக்கம் இல்லை, என்று தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் அரசி யல்பிரிவுத் தலைவர் பி.நடே சன் தெரிவித்தார். பன்னாட்டு அரசுகளின் உதவியுடன், சமா தானப் பேச்சுக்கள் நடத்து வதற்கு முன்பாகப் போர் நிறுத் தம் ஏற்படவேண்டும் எனத் தமிழக அரசியல் தலைவர்கள் கூறுவதற்குப் பதில் சொல்லும் வகையில் இது இருக்கிறது.
சிறீலங்கா அரசுதான் ஒரு சார்பாக போர் நிறுத்தத்தை விலக்கிக் கொண்டது, என நடேசன் தமிழ்நெட் இணைய தளம் மூலம் தெரிவித்துள்ளார். (ஜனவரி மாதத்தில் போர் நிறுத்தம் விலக்கிக் கொள்ளப் பட்டது)
நடந்தது என்ன?
போர் நிறுத்த ஒப்பந்தத்தை முதலில் மீறியது இலங்கை அரசுதான்.
போர் வேண்டாம். பேச்சு வார்த்தை மூலம் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று இந்திய அரசு மற்றும் பல தரப்புகளிலிருந்து அழுத்தம் கொடுத்தும் கூட இலங்கை அரசு காதில் வாங்கிக் கொள்ள வில்லை. இராணுவத்துக்குக் கடந்த 3 மாதங்களில் மட்டும் 14,000 பேர் ஆள் எடுத்துள் ளனர். நிதியாண்டில் இராணு வத்துக்குக் கடந்த ஆண்டை விட ஏழு சதவீதம் அதிகமாக நிதி ஒதுக்கியுள்ளனர் என்ப தும் குறிப்பிடத் தக்கது.
போர்நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்ற பல தரப்பு களின் கோரிக்கைகளை ஏற்று விடுதலைப்புலிகளின் தரப்பில் முன் வந்து போர் நிறுத்த அறிவிப்பை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
குறிப்பு: தமிழர் தலைவர் அறிக்கை
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் நேற்று (8.11.2008) விடுத்த அறிக்கையில் கூட கீழ்க்கண்டவாறு குறிப் பிட்டு இருந்தார்.
நார்வே போன்ற நாடுகளின் சமரசப் பேச்சுத் தீர்வுக்கான முன்னோட்டமாக போர் நிறுத்தம், குண்டு வீச்சுகளை நிறுத்திட வற்புறுத்திட வேண் டும். விடுதலைப்புலிகளின் பேச்சாளர் இதற்கு முன்பே தாங்கள் போர் நிறுத்தத்திற்குத் தயார்தான் என்று தெரிவித் துள்ளாரே - என்று நேற்றைய விடுதலையில் தமிழர் தலைவர் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்க தாகும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு