ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

8 நவம்பர், 2008

வாக்கு மீறுகிறது இலங்கை அரசு மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்


வாக்கு மீறுகிறது இலங்கை அரசு
மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?


ஈழத் தமிழர்களை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட இலங்கை அரசு இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ள ஆபத்தை விளக்கி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

1. ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பது போல, இராணுவ நடவடிக்கையைக் கைவிட்டு அரசியல் தீர்வு காண முன்வாருங்கள் என்ற நமது இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கின் கோரிக்கையை சிங்கள அதிபரும் இலங்கை இராணுவ அமைச்சகத் தலைவருமான ராஜபக்சே நேற்று நாடாளுமன்றத்தைக் கூட்டி அந்நாட்டின் இராணுவத்திற்கான நிதி ஒதுக்கீட்டினை (2009 ஆம் ஆண்டிற்கானது) ரூ.7,680 கோடி என்று அறிவித்துள்ளார். புலிகளுக்கு எதிராகப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் செலவும் இராணுவ ஒதுக்கீட்டில் அடங்கும் என்றும் அதிபர் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டைவிட 7 சதவிகிதம் அதிகம் இது.

இதனை எதிர்த்தும், அப்பாவி மக்களைக் கொல்லும் குண்டு வீச்சுகளை (தமிழர் பகுதிகளில்)க் கண்டித்தும் இலங்கையின் தமிழ்த்தேசியக் கட்சியின் 22 உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் (வியாழனன்று 6.11.2008) வெளிநடப்புச் செய்துள்ளனர்!

பட்ஜெட் தொடரைப் புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகள்

பட்ஜெட் தொடர் முழுவதையும் தங்கள் கட்சி முழுமையாகப் புறக்கணிக்கும் என்றும் - அக்குழுவின் தலைவர் ஆர். சம்பந்தன் அவர்கள் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்; இராணுவம் நடத்தும் தாக்குதலைக் கண்டித்துப் போராட்டம் நடத்தப்போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்!

2. இந்து நாளேட்டின் இலங்கைச் செய்தியாளர் கொழும்பி லிருந்து இன்று அனுப்பியுள்ள செய்தியில், (இந்து, 8.11.2008) 18 ஆம் பக்கத்தில் ஐவேநளேகைநைன யெவவடந ளுச டுயமேய என்ற தலைப்பில் வெளியாகியுள்ள செய்தியில், போர் மும்முரமாகியுள்ளதோடு, ஓமந்துரை நுழைவுப்பகுதியில், மக்களுக்கு குறிப்பாக, முல்லைத் தீவில் உள்ள குழந்தைகளுக்கு மருந்துகளும், பால் போன்ற சத் துணவுகளும் எடுத்துச் சென்ற லாரிகளை மூன்றாவது முறையாக மறுத்து, திருப்பி அனுப்பியுள்ளது. இராணுவ அமைச்சின் அனு மதியை ஒரு தரம் பெற்றுச் செல்லும் முறைக்குப் பதிலாக, ஒவ் வொரு தடவைக்கும் அனுமதி பெறவேண்டும் என்ற புதிய நடை முறையை வற்புறுத்தியதோடு, உணவு லாரிகளையும் அனுமதிக்க வில்லை, திருப்பி அனுப்பி விட்டனர் என்ற அதிர்ச்சிக்குரிய செய்தி வெளியாகியுள்ளது!

வாக்குறுதிக்கு முரணான போக்கு

மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்கள் தமிழ் நாடு முதல்வர் கலைஞருக்கு அளித்த வாக்குறுதிக்கு விரோதமான ஒரு நடைமுறையை இலங்கை அரசு பின்பற்றுகிறது என்பதைத் தானே இது காட்டுகிறது?

3. ஜனநாயகப் பாதைக்கு திரும்புங்கள் என்று குண்டுமழையை அப்பாவி சிவிலியன்களான ஈழத் தமிழர்கள்மீது பொழிந்து கொண்டே இதோபதேசம் செய்யும் இராஜபக்சே தமிழில் பேசினால் போதுமா? தமிழர்களைக் காப்பதில் அவர் கடமையாற்றிடத் தவறுகிறார் என்பதை இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் - ஜனநாயகப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழர்களின் பிரதிநிதிகள் அல்லவா? அவர்கள் கூறுவதை நமது மத்திய அரசு புரிந்து கொண்டு, சொல் ஒன்றும், செயல் வேறொன்றும் என்று இப்படி நடந்துகொள்ளலாமா? என்று இலங்கை அதிபரைக் கேட்க வேண்டாமா மத்திய அரசும் - பிரதமரும்?

போர் நிறுத்தத்துக்கு விடுதலைப்புலிகள் ஒப்புக்கொண்டனரே!

நார்வே போன்ற நாடுகளின் சமரசப் பேச்சுத் தீர்வுக்கான முன்னோட்டமாக போர் நிறுத்தம், குண்டு வீச்சுகளை நிறுத்திட வற்புறுத்திட வேண்டும்.

விடுதலைப்புலிகளின் பேச்சாளர் இதற்கு முன்பே தாங்கள் போர் நிறுத்தத்திற்குத் தயார்தான் என்று தெரிவித்துள்ளாரே!

எனவே, இல்லாத ஊருக்குப் போகாத பாதையைக் காட்டும் இலங்கை அதிபர் இரட்டை வேடம் போடுவதை - மத்திய அரசும், பிரதமரும் புரிந்துகொள்ள வேண்டாமா?

இலங்கை சென்ற பிரதமரின் ஆலோசகர் திரு. எம்.கே. நாராயணன் அவர்களையேகூட அலட்சியப்படுத்தி, வாகனம்கூடத் தராமல் அவர் நடந்து டாக்சி பிடித்து திரும்பினார் என்றெல்லாம் செய்திக் கட்டுரைகள் தமிழ்நாட்டில் வருகின்றனவே; இலங்கை - இந்திய அரசினை மதிக்கும் இலட்சணம் இதுதானா? என்றுதானே - அச்செய்தி உண்மையாய் இருக்கும்பட்சத்தில் - கேட்கத் தோன்றும்?

வேதனை! வேதனை!!

எத்தனை நாள் ராஜபக்சேவின் இரட்டை வேடம் தொடரும்?

அதை நம்பி தமிழர்களை அலட்சியப்படுத்தும் மத்திய அரசின் போக்கும் எத்தனைக்காலம் நீடிப்பது?

வேதனை! வேதனை!! தமிழர்கள் எழுச்சியை அலட்சியப் படுத்தாதீர்! நன்றி விடுதலை

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு