ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

9 நவம்பர், 2008

நாளை கமலுக்கு வயசு 54!

கலைஞானி, உலக நாயகன், காதல் இளவரசன் என ரசிகர்களால் பலப் பல பெயர்களால் அழைக்கப்படும் கமல்ஹாசன் நாளை தனது 54வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ஆனால் இந்த ஆண்டு, ஈழத் தமிழர்களின் துயரத்தில் பங்கெடுப்பதற்காக பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம் என்று நேற்றே அவர் அறிவித்து விட்டார்.

களத்தூர் கண்ணம்மாவில் 'லைட்'டாக தோன்றி இன்று கலையுலகின் 'லைட்னிங்' ஆக மாறியிருக்கிறார் கமல்ஹாசன். கலையுலகின் தொடர் கதையாக தொடர்ந்து புதுப் புது அவதாரம் எடுத்து தசாவதானியாக திகழ்ந்து வரும் கமல்ஹாசன் நாளை 54வது வயதை எட்டுகிறார்.

ஒவ்வொரு படமும் ஒரு விதமாக இருக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும் கமல், கேரக்டருக்காக மெனக்கெடுவதிலும், உடலைக் கெடுத்துக் கொள்வதிலும், உருவத்தை கொத்தி குதறிக் கொள்வதிலும் கொஞ்சமும் தயக்கம் காட்டாதவர் - தைரியமாக செய்து காட்டுபவர்.

பணம் தருமா இந்தக் கதை என்று பலரும் பார்த்துப் பார்த்து படம் எடுக்கும் சிலருக்கு மத்தியில், பரீட்சார்த்தமாக படம் எடுப்பதில் நாட்டம் கொண்டவர் கமல்.

லேட்டஸ்டாக வந்த தசாவதாரம் அவரது நடிப்பு புயல் இன்னும் ஓயவி்ல்லை என்பதை நிரூபிப்பதாக அமைந்தது. சக கலைஞரான சரத்குமாரே, கமல்ஹாசன் தசாவதாரத்தில் போட்ட பலராம் நாயுடு கேரக்டரில் பேசுவதைப் போல இமிடேட் செய்து பேசி மகிழும் அளவுக்கு நடிகர்களையும் அசத்திய மகா நடிகன் கமல் என்று சொல்லலாம்.

கமலுக்குத்தான் நாளை 54 வயது பிறக்கிறது. ஆனால் அவரது நடிப்புக்கும் திறமைக்கும் 16 வயதுதான்.

உலக நாயகனை வாழ்த்துவோம்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு