அமெரிக்க அதிபர் தேர்தல் : ஒபாமா வெற்றி
வாஷிங்டன் : அமெரிக்காவின் 44வது அதிபராக ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த முதல் அதிபராக பாரக் ஒபாமா பதவியேற்க இருக்கிறார். இந்த வெற்றியை அமெரிக்காவில் உள்ள அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

உலக மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பாரக் ஒபாமாவிற்கு 338 வாக்குகள் கிடைத்தது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக்கட்சி வேட்பாளர் மெக்கைன் 156 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். வெற்றி பெறுவதற்கு குறைந்த பட்சம் 270 வாக்குகள் மட்டுமே தேவை என்பதால், அமெரிக்காவின் 44வது அதிபராக ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனை அமெரிக்காவில் உள்ள அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். அமெரிக்காவின் முதல் கறுப்பின அதிபர் ஒபாமா என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்

மூக்கறுப்பு கல்வெட்டு பேளூர் சேலம் மாவட்டம்

என் பொண்னு சொன்ன ஜோக் இது பிடிச்சிருக்கான்னு சொல்லுங்க...!