ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

7 நவம்பர், 2008

2012 இல் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கும் அகண்ட அலைவரிசை

2012 இல் அனைத்து அரசு மேல்நிலைப்
பள்ளிகளுக்கும் அகண்ட அலைவரிசை

மத்திய அமைச்சர் ஆ.இராசா அறிவிப்பு

புதுடில்லி, நவ. 7- 2012 ஆம் ஆண்டுக்குள், கிராமப்புற அகண்ட அலைவரிசைத் திட் டத்தின் கீழ், நமது நாட்டில் உள்ள அனைத்து அரசு மேல் நிலைப் பள்ளிகளுக்கும் அகண்ட அலைவரிசை இணைப்பை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.இராசா அறிவித் துள்ளார்.

அவர் புதுடில்லியில் நடைபெற்ற கல்வி வளர்ச்சி யில் தொலைத்தொடர்புத் துறை என்ற தேசிய கருத்த ரங்கை துவக்கி வைத்துப் பேசினார்.

தொலைத் தொடர்புத் துறையின் யுனிவர்செல் சர்வீஸ் ஆர்கனைசேஷன் நிதி, ஒவ் வொரு வட்டம் மற்றும் கிராம அளவில் அகண்ட அலை வரிசை இணைப்பை அதி கரிக்க பெருமளவில் பயன் படுத்தப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார். அகண்ட அலை வரிசை மூலம் கல்வி உள்ளூர் மொழியில் தகவல்களை உரு வாக்குவது, திறன்களை தொகுப்பது, தேவையான பயிற்சி பெற்ற பணியாளர் களை உருவாக்குவது போன்ற அம்சங்களை அமைச்சர் வலி யுறுத்தினார்.

அகண்ட அலைவரிசைக் குத் தேவையான கருவிகளை குறைந்த கட்டணத்தில் கிடைக்கச் செய்வதற்கான நட வடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருவதாக தெரிவித்த அவர், தனிநபர் கணினி போன்ற நுகர்வோருக்கான கருவிகளுடன் அகண்ட அலை வரிசை இணைப்பையும் அளிக் கும் திட்டங்களைத் துவக்க அரசு உத்தேசித்து வருவதாகக் கூறினார்.

மொபைல் தொலைபேசி வாயிலாக பாடங்களை அனுப் பும் திட்டத்தை உருவாக்கி யுள்ளதற்காக இந்திராகாந்தி தேசிய திறந்தவெளிப் பல் கலைக்கழகத்தை அமைச்சர் பாராட்டினர். தென் கொரிய நாட்டிற்குப் பிறகு இத்தகைய வசதியை உருவாக்கியுள்ள நாடு இந்தியாதான் என்று அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அகண்ட அலைவரிசை வசதி கள் மூலம் இப்பல்கலைக்கழ கம் நாட்டின் எந்த பகுதியிலும் எந்தப் நேரத்திலும் தரமான கல்வியை அளிக்க முடியும் என்று இராசா தெரிவித்தார்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு