ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

9 நவம்பர், 2008

மேலும் 2 அமெரிக்க வங்கிகள் முடக்கம்

வாஷிங்டன்: நிதி நெருக்கடியால் மேலும் இரு அமெரிக்க வங்கிகள் திவாலாகிவிட்டன.

ஹூஸ்டனை தலைமையிடமாகக் கொண்ட பிராங்க்ளின் வங்கியும், லாஸ் ஏஞ்சலஸை தலைமையிடமாகக் கொண்ட செக்யூரிட்டி பசிபிக் வங்கி இரண்டும் பெரும் நிதி சிக்கலில் மாட்டியதையடுத்து இரு வங்கிகளையும் அமெரிக்க அரசு கையகப்படுத்திவிட்டது. இரு வங்கிகளின் செய்யப்பட்ட பொது மக்களி்ன் முதலீடுகளை காக்கும் வகையில் இவற்றின் செயல்பாடுகளும் சொத்துக்களும் முடக்கப்பட்டுவிட்டன.

இதன் மூலம் 2008ம் ஆண்டில் மட்டும் திவாலாகிவிட்ட அமெரிக்க வங்கிகளின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

பல்வேறு வங்கிகள் வழங்கிய வீட்டுக் கடன்களின் மீது வெளியிடப்பட்ட பங்குகளில் முதலீடு செய்து, கடனும் திரும்பி வராமல், பங்குகளின் விலையும் சரிந்து போனதில் திவாலாகியுள்ளது பிராங்க்ளின் வங்கி.

இந்த வங்கியின் செயல்பாட்டை முடக்கிவிட்ட அமெரி்க்க நிதியமைச்சகம் இதை டெக்ஸாஸைச் சேர்ந்த பிராஸ்பிரிட்டி வங்கியுடன் இணைந்துவிட முடிவு செய்துள்ளனர்.

அதே போல செக்யூரிட்டி பசிபிக் வங்கியை லாஸ் ஏஞ்சலெஸைச் சேர்ந்த பசிபிக் வெஸ்ட்ர்ன் வங்கியுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு