ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

11 நவம்பர், 2008

கடந்த 17 நாட்களில் நடந்தவை என்ன பொன்.வெங்கட்


அக்டோபர் 14: ஈழத்தமிழர் பிரச்சினை குறித்து முதல்வர் கலைஞர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். இல்லையேல், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக நேரிடும் என தீர்மானம்

அக்டோபர் 15: இலங்கைப் பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கையால் தீர்வு காண முடியாது; பேச்சு வார்த்தை மூலம் அரசியல் தீர்வு காண முடியும் என இலங்கை அரசுக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அறிவுரை.

அக்டோபர் 16: போர் நிறுத்தம் செய்ய முடியாது என இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே கொக்கரிப்பு.

அக்டோபர் 17: இந்தியப் பங்குச் சந்தையில் பெரும் சரிவு; விற்பனைப்புள்ளி 10,000-க்கும் கீழே குறைந்தது. அக்டோபர் 18: இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும்; அவர்களின் நலன்களும் உரிமைகளும் பாதிக்கப்படுகிறது என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தொலைப்பேசியில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபச்சேயிடம் வலியுறுத்தினார்.

அக்டோபர் 19: ஈழத்தமிழர் படுகொலையைத் கண்டித்து திரை உலகினர் இராமேசுவரத்தில் ஊர்வலம் கண்டனக் கூட்டம் நடத்தினர்.

அக்டோபர் 20: தமிழ்த் திரைப்பட முன்னணி இயக்குநர் ஸ்ரீதர் இயற்கை எய்தினார்; ஈழத்தில் கிளிநொச்சி பகுதியில் கண்ணி வெடியில் சிக்கி 25 சிங்களப் படையினர் உயிரிழந்தனர்.

அக்டோபர் 21: மும்பையில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்பட்ட வழக்கில் மகராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரே கைது செய்யப்பட்டார்.

அக்டோபர் 22: நிலவை ஆராய சந்திராயன்-1 என்ற விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

அக்டோபர் 23: இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராகப் பேசியதாக வைகோ, மு.கண்ணப்பன் கைது

அக்டோபர் 24: ஈழத்தில் போரை நிறுத்த வலியுறுத்தி சென்னையிலிருந்து செங்கற்பட்டு வரை 60 கிலோ மீட்டர் பிரமாண்ட மனிதச் சங்கிலி - தமிழர்கள் உணர்ச்சி முழக்கம் எழுப்பினர்.

அக்டோபர் 25: இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் பேசியதாகக்கூறி திரைப்பட இயக்குநர்கள் சீமான், அமீர் இருவரும் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைப்பு.

அக்டோபர் 26: ஈழத்தமிழர்களுக்கு உணவு, மருந்துகள் அனுப்ப இந்தியா முடிவு - இலங்கை ஏற்பு. சென்னையில் முதல்வர் கலைஞரைச் சந்தித்து இலங்கை நிலவரம் குறித்தும் மத்திய வெளி உறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி விளக்கினார்.

அக்டோபர் 27: மும்பையில் துப்பாக்கி முனையில் மாநகரப் பேருந்தைக் கடத்த முயன்ற பிகார் இளைஞர் காவல் துறையினரால் சுட்டுக் கொலை.

அக்டோபர் 28: ஈழத்தமிழர்களுக்கும் நிதி குவிந்தது. முதல்வர் கலைஞர் ரூ.10 இலட்சம் கொடுத்து தொடங்கி வைத்தார். கொழும்பு நகரிலும் மன்னார் ராணுவத் தளத்தின் மீதும் விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதல்.

அக்டோபர் 29: கைது செய்யப்பட்டதிரைப்பட இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகிய இருவருக்கும் இராமநாதபுரம் நீதிமன்றம் நிபந்தனை பிணை வழங்கியது.

அக்டோபர் 30: அஸ்ஸாமில் குண்டுகள் வெடித்து 61 பேர் உயிரிழந்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு