தெனாவட்டு ;கூவாகம் திருவிழாவை இவ்வளவு விபரமாக ஆவணப்படங்களில் கூட பாத்திருக்க முடியாது.
தெனாவட்டு இரும்படிக்கிற தொழில் செய்கிற ஹீரோ, எறும்படிக்கிற மாதிரி வில்லனை அடித்துப் போடுகிறார். தம்பியை அடித்த ஹீரோவை வில்லனின் அண்ணன் துரத்த, காதலியோடு ஓடுகிறார் ஹீரோ. அவரே துணிச்சலாக திரும்பி நின்றால் என்னாகும்? இப்படி இரண்டரை மணிநேர படத்தில் மோதல், ஆக்ஷன் என்று கலவரப் பொங்கலை பரிமாறியிருக்கிறார் இயக்குனர் கதிர். அங்கங்கே தென்படும் காதல் முந்திரியில் மட்டும் கனஜோரான ருசி. கிராமத்திலிருந்து சென்னைக்கு புறப்பட்டு வரும் ஜீவா, ரவிகாளேயிடம் வேலைக்கு சேருகிறார். தொழில் அருவா அடிச்சு கொடுப்பது. இதற்கிடையில் பூனம் பாஜ்வாவிடம் காதல் வயப்படுகிற ஜீவா, தனது காதலியை ஒருவன் நடுரோட்டில் மானபங்க படுத்த முயலும்போது, அவனை நையப்புடைக்கிறார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடக்கும் அவன், ரவிகாளேயின் தம்பி என்று தெரிய வரும்போது, தைரியமாக அவரிடமே போய், “தம்பி தப்பு பண்ணுச்சு. நான்தான் அடிச்சேன்” என்று தலையை கொடுக்கிறார். பிறகென்ன..? தலையை எடுக்க ரவிகாளே துரத்த, காதலியை காப்பாற்ற ஊரைவிட்டே...