இடுகைகள்

ஐடி ஆண்களிடம் அதிகரிக்கும் மலட்டுத்தனம்

படம்
சென்னை: ஆண்களிடையே குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ளவர்களிடையே மலட்டுத்தன்மை அதிகரித்து வருவதாக சென்னையில் நடந்த பாலியல் மருத்துவ மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது. இந்திய பாலியல் மருத்துவ நிறுவனம் மற்றும் ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மையம் சார்பில் ஆண்டு தோறும் சர்வதேச பாலியல் மருத்துவ மாநாடு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு 4-வது மாநாடு சென்னை வடபழனி கிரீன் பார்க் ஓட்டலில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. மாநாட்டை சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எஸ்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். டாக்டர் ராஜமோகன் தலைமை தாங்கினார். பேராசிரியர் டாக்டர் காமராஜ் மாநாட்டில் விவாதிக்கப்படும் பாலியல் பிரச்சினைகள் பற்றி விளக்கிப் பேசினார். முன்னாள் சர்வதேச பாலியல் மருத்துவ சங்க தலைவர் டாக்டர் அடைக்கண் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். டாக்டர்கள் எம்.ஏ.கலாம், ஜார்ஜி காக்கடஸ் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். டாக்டர் கருணாநிதி வரவேற்றார். மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியாக ஆண்-பெண்களின் பாலியல் விருப்பங்கள் பற்றி டாக்டர் விதால் பிரபு பேசினார். அவர் கூறுகையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது ஆண்-...

காதலில் விழ மாத்திரை

படம்
ராதா காதல் வராதா என்று யாரும் இனி பாட்டுப் பாடிக் கொண்டிருக்க தேவையில்லை. காதலில் விழ விரும்புவோருக்காகவே ஒரு ஸ்பெஷல் காதல் மாத்திரை தயாராகி வருகிறது. அதை சாப்பிட்டால் போதுமாம், 'சப்ஜாடாக' காதல் வயப்பட்டு விடலாமாம். கேட்கவே காமடியாக இருக்கிறதா?. ஆனால் உண்மைதான். ஆண்டுக்கு ஆண்டு காதலர் தினத்தன்று பல புதுப்புது 'ஐட்டங்களையும் ஐடியா'க்களையும் இறக்கி விடுவோர், இந்த முறை காதல் மாத்திரையை களத்தில் இறக்கி விட்டுள்ளனர். அதேபோல காதலில் தோல்வியுற்றவர்களுக்கு அந்த உணர்வுகளை மறைக்கவும் ஒரு மாத்திரை வரப் போகிறதாம். இதுகுறித்து அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூறுகையில், விரைவில் காதலில் விழவும், விழுந்து அடிபட்டு காதல் தோல்வியால் அவதிப்படுபவர்களுக்கு அதை மறைக்கவும் மாதிதரைகள் தயாராகி விடும். காதல் என்பது இனிமேல் பஸ் பயணம் மாதிரிதான் இருக்கும். ஒரு ஸ்டாப்பில் ஏறி, அடுத்த ஸ்டாப்பில் இறங்கிக் கொள்வது போன்ற நிலை வந்து விடும். அதற்கு இந்த மாத்திரை கை கொடுக்கும் என்கிறார்கள் அவர்கள். காதல் என்பது மனித மூளையில் ஏற்படும் ஒரு ரசாயன மாற்றம்தான். இந்த மாற்றத்தைத் தூண்டுவிக்கும் வகையில் மாத்த...

ஆண்கள் விரும்பும் ஈர முத்தம்!

படம்
ஆண்களுக்கு எப்போதுமே உதடுகளை குளிப்பாட்டி எடுக்கும் அளவுக்கு முத்தமிடுவதான் பிடிக்கிறது. இதற்கு ஒரு காரணம் இருக்கிறது என்பதை சிபிஐ வைக்காமலேயே ஆராய்ந்து கண்டுபிடித்திருக்கிறார்கள். பெண்களின் உதடுகளில் தங்களது உதடுகளால் அபிஷேகம் செய்யும்போது, பெண்களிடம் உள்ள அன்பின் அளவை அறியும் முயற்சியாகவே ஆண்களுக்கு ஈர முத்தம் பிடிக்கிறது என்று கூறுகிறது அந்த ஆய்வு. ஆண்களின் இந்த முத்தத்தில் காதல் மட்டுமல்ல, கொஞ்சம் ஆராய்ச்சியும் இருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். நம்ம ஆளு வளமையானவளா, செழிப்பானவளவா என்பதை அறியும் ஆராய்ச்சிதானாம் இது. இதுகுறித்து ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளரான ஹெலன் பிஷர் கூறுகையில், வெறும் முத்தத்தோடு நிற்காமல் உதடுகளால் துளாவுவதைத்தான் ஆண்கள் அதிகம் விரும்புகிறார்கள். அந்த முத்தம் எவ்வளவுக்கு ஆழமாக, இருக்கிறதோ அந்த அளவுக்கு ஆண்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். இன்னும் ஒரு காரணமும் அதில் இருக்கிறது. அது, பெண்ணின் உணர்ச்சிகளைத் தூண்டுவிக்கும், டெஸ்டோஸ்டிரானை தங்களது முத்தத்தின் மூலம் பார்ட்னரிடம் அனுப்பி விடும் உத்திதான் அது.  முத்தத்தின் மூலம் தனது காதலி அல்லது மனைவியை வசியப்படுத்த...

செக்ஸ்: இந்தியர்கள் செம திருப்தி!

படம்
செக்ஸ் வாழ்க்கையில், இந்தியர்கள்தான் மிகவும் திருப்தியுடன் இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியர்கள் உலக அளவில் பல துறைகளில் வெளுத்துக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல படுக்கை அறையிலும் அவர்களே 'கிங்' ஆக உள்ளனர் என்று கூறுகிறது அந்த ஆய்வு. இந்தியாவில் 70 சதவீதம் பேருக்கு திருப்திகரமான செக்ஸ் வாழ்க்கை இருப்பதாகவும் அந்தக் கருத்துக் கணிப்பு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த ஆய்வை ஃபிஸர் பார்மச்சூட்டிகல் நிறுவனம் நடத்தியது. இந்தியா உள்பட மொத்தம் 13 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் செக்ஸ் வாழ்க்கையில் திருப்தியுடன் இருப்பவர்கள் பட்டியலில் இந்தியர்களே முதலிடத்தில் உள்ளனர். இருப்பதிலேயே மிகவும் மோசமான செக்ஸ் வாழ்க்கை வாழ்பவர்கள் ஜப்பானியர்கள்தானாம். 10 சதவீதம் ஜப்பானியர்களுக்கே செக்ஸ் வாழ்க்கை திருப்திகரமாக உள்ளதாம் ('செக்ஸில்' வீக் ஆக இருந்தாலும் 'சென்செக்ஸில்' நம்மை விட ஜப்பானியர்கள் டாப் என்பதை மறக்கக் கூடாது). மலேசியர்களைப் பொறுத்தமட்டில், 3 ஆண்களில் 2 பேருக்கும், நான்கு பெண்களில் 3 பேருக்கும் செக்ஸ் வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்ல...

ரொமான்ஸுக்கு ரெட்!

படம்
தலைப்பைப் பார்த்தவுடன் டென்ஷன் வேண்டாம். சிவப்பு நிறம்தான் ரொமான்ஸுக்கு ஏற்றதாம். ஆய்வுகள் கூறுகின்றன இப்படி. ஒவ்வொரு நிறத்திற்கும் ஒரு பொருள் உண்டு. அந்த வகையில் ரொமான்ஸுக்கு ஏற்ற நிறம் சிவப்பு நிறமாம். பளிச்சென நமது பார்ட்னரைக் கவர ஏற்ற நிறம் சிவப்புதானாம். சிவப்பு ரோஜா, சிவப்பு உடைகள், சிவப்பு லிப்ஸ்டிக் என சிவப்பு மயமாக மாறினால் பார்ட்னர்களை வெகு எளிதில் ஈர்த்து விடலாமாம் பெண்கள். நியூயார்க்கின், ரோசெஸ்டர் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில்தான் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வின்போது சிவப்பு நிற உடை உள்பட பல்வேறு நிறத்திலான உடைகளுடன் கூடிய பெண்களின் புகைப்படங்களை ஆண்களிடம் கொடுத்து அவர்களின் கருத்தை அறிந்தனர். பெரும்பாலானவர்களுக்கு சிவப்பு நிற உடையில் இருந்த பெண்களைத்தான் பிடித்திருந்ததாம். இதன் மூலம் மற்ற நிறங்களை விட சிவப்பு நிறம்தான் ஒருவரை அதிகம் ஈர்க்கிறது என்ற முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர். சிம்பன்சி குரங்குகளிடம் ஒரு குணம் இருக்கிறதாம். பெண் துணைகள் 'அந்த' நேரத்தில் கிராக்கி செய்தால், அவர்களைக் கவருவதற்காகவும், ஐஸ் வைத்து 'வேலையை' முடித்துக...

மயிலாப்பூரும் திருமங்கலமாக மாறும்: எஸ்.வி.சேகர்

படம்
மயிலாப்பூரும் திருமங்கலமாக மாறும்: எஸ்.வி.சேகர் மயிலை மாங்கொல்லையில் பொதுக்கூட்டம் நடத்தி மக்கள் முன்னிலையில் எனது ராஜினாமா முடிவை அறிவிப்பேன் என்றும், நான் ராஜினாமா செய்த பிறகு மயிலாப்பூரும் ஒரு திருமங்கலமாக மாறும் என்றும் அதிமுக எம்எல்ஏ எஸ்.வி.சேகர் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது. வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக அம்பா சங்கர் கமிஷன் அமைக்கப்பட்டது. அருந்ததியர்களுக்காக ஜனார்த்தனன் கமிஷன் அமைக்கப்பட்டது.  அதே போல் பிராமணர்களுக்கும் ஒரு கமிஷன் அமைத்து ஆராய வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதியிடம் இன்னும் சில நாட்களில் மனு கொடுக்க உள்ளோம். பிராமணர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க முதல்  அமைச்சர் கருணாநிதியால் தான் முடியும்.  எங்கள் சமூகத்திற்கு நல்லது செய்பவரை ஆதரியுங்கள் என்று ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்வேன்.    மயிலாப்பூர் தொகுதியில் எனக்கு போட்டியிட சீட் தந்தது ஜெயலலிததான். ஆனால் என்னை வெற்றி பெற செய்தது மயிலாப்பூர் தொகுதி மக்கள். தொகுதி மக்களுக்கு என்னென்ன கடமைகள...

இங்கிலாந்து டிவி நடிகை ஜேட்கூடி மரணம்

இங்கிலாந்து டிவி நடிகை ஜேட்கூடி மரணம் பிரபல இங்கிலாந்து டிவி நடிகை ஜேட் கூடி புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தனது வாழ்நாளில் இறுதிக் கட்டத்தில் இருந்த அவர் இன்று மரணம் அடைந்தார்.  பிக் பாஸ் எனும் நிகழ்ச்சியின் மூலம் அவர் மிகவும் பிரபலமானார். ஜேட் கூடி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியை இனவெறியோடு திட்டியதாக சர்ச்சையில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.