கிளிநொச்சியில் விடுதலைப்புலிகள் ஆவேசப் பதிலடி
கிளிநொச்சியில் விடுதலைப்புலிகள் ஆவேசப் பதிலடி 90 சிங்களச் சிப்பாய்கள் பலி ; காயமடைந்த 180 பேருடன் இலங்கை ராணுவம் பின்வாங்கியது பொன்சேகா ஒப்புதல் வாக்குமூலம் கிளிநொச்சியில் விடுதலைப்புலிகள் நடத்திய பதில் தாக்குதலில் சிங்களச் சிப்பாய்கள் 90 பேர் கொல்லப்பட்டனர் . 180 பேர் காயமடைந்தனர் . இதனால் ராணுவம் பின்வாங்கியது . இலங்கை ராணுவத்திடமிருந்து ஏராளமான ஆயுதங்களையும் விடுதலைப்புலிகள் கைப்பற்றினர் . விடுதலைப்புலிகளின் அரசியல் தலைநகரான கிளிநொச்சியை கைப்பற்ற கடந்த மாதமாக சிங்கள ராணுவம் தீவிரத் தாக்குதலை நடத்தி வருகிறது . இந்தத் தாக்குதலின்போது , விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சில இடங்களை சிங்கள ராணுவம் கைப்பற்றினாலும் கிளிநொச்சியை இன்னும் நெருங்க முடியவில்லை . கிளிநொச்சிக்குள் ராணுவத்தை நுழைய விடாமல் விடுதலைப்புலிகள் கடும் எதிர்த்தாக்குதல் நடத்தி வருகிறார்கள் . 2 நேற்று முன்தினம் ...