ஆன்மீகம் அழியாதது - கடவுளுக்குச் சம்பந்தப்பட்டது என்றால், அதன்பேரில் இதழ்களை ஏராளமாக நடத்துவது ஏன்?
ஆசிரியர் விடையளிக்கிறார் கேள்வி : தீவிரவாதத்துக்கு மதம் கிடையாது என்று எல்.கே. அத்வானி கூறியுள்ளதுபற்றி.. -தி. அருணா, ஏலகிரி பதில் : அடேடே அத்வானிஜி எப்போது இதைக் கண்டு பிடித்தார்? நாடாளுமன்றத் தேர்தலில் இஸ்லாமியர் வாக்குகளை வாங்குவதற்கு இப்படி ஒரு தந்திரப் பேச்சா? கேள்வி : தாழ்த்தப்பட்டவர்களுக்கும் கிரிமிலேயர் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கூறியிருக்கிறாரே? -ம. செங்கமலம். எலந்தங்குடி பதில் : ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நீதிக்கு அவரது பங்களிப்பு இதுதானா? வேதனை, வேதனை! பொருளாதார அடிப்படை கூடாது என்பது அரசியல் சட்டப்படி உள்ள நிலை. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும்கூட. அப்படி இருந்தும் அவரே இப்படி சட்ட விரோதமாகப் பேசலாமா? கேள்வி: ஈழத்தில் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள கொடுமைபோல, வெளி நாடுகளில் சீக்கியர்களுக்கும், வங்காளிகளுக்கும் நடந...