இடுகைகள்

த்ரிஷா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஓடோடி வந்த த்ரிஷா, கொடியை தூக்கி கோஷம் போட்டபோது, அதில் நிஜமான அக்கறை தெரிந்தது!

படம்
தீவிரவாதத்திற்கு எதிரான பேரணி ஒன்றை கொடியசைத்து துவங்கி வைக்க சம்மதித்திருந்தார் த்ரிஷா. சென்னையில் நடைபெற்ற இந்த பேரணியில் கலந்து கொள்வதற்காக வெளிநாட்டிலிருந்து அவர் வந்து சேர்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டதாம். தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க பாங்காக் போயிருந்தார் த்ரிஷா. இவருக்கு ஜோடி நாகார்ஜுன். படப்பிடிப்பு முடிந்து விமான நிலையத்திற்கு வந்து பார்த்தால், பெரிய திண்டுக்கல் பூட்டு தொங்கியதாம்! அச்சச்சோ என்று பதறியவரிடம், அங்கிருந்த பாதுகாப்பு போலீசார் விபரத்தை கூறினார்களாம். பாங்காக் நாட்டில் அரசியல் குழப்பம். அந்நாட்டு தலைமையை எதிர்த்து விமான நிலையத்தை முற்றுகையிடப் போவதாக எதிர்க்கட்சிகள் மிரட்ட, திறந்திருந்தால்தானே மிரட்டுவார்கள் என்று முடிவு செய்த போலீஸ், விமான நிலையத்தையே மூடிவிட்டது. அடித்து பிடித்துக் கொண்டு புக்கட் தீவுக்கு வந்து சேர்ந்த த்ரிஷா, அங்கிருந்து கோலாலம்பூரில் ஃபிளைட் பிடித்து சென்னையில் இறங்கினாராம். இப்படியெல்லாம் ஓடோடி வந்த த்ரிஷா, கொடியை தூக்கி கோஷம் போட்டபோது, அதில் நிஜமான அக்கறை தெரிந்தது!

த்ரிஷா வீட்டுக்கு கமலே போனார்; மர்மயோகியை கைவிடவில்லை

படம்
சந்துக்கு வந்த நந்தவனத்தேரு... த்ரில்லானார் த்ரிஷா! நந்தவனத் தேரு சந்துங்குள்ளும் வரும் என்பதற்கு கமல்ஹாசனின் விஜயம் ஒரு உதாரணம். மர்மயோகி தள்ளிப் போனதால் அப்செட் ஆகியிருந்தார் த்ரிஷா. தசாவதாரத்தின் சூடான வெற்றிக்கு பிறகு கமல் இயக்கி நடிக்கும் படம் என்பதாலும், தமிழ் திரையுலகின் டாப் ஹீரோக்களில் ஒருவர் என்பதாலும், கமல் படத்தில் நடிப்பதில் த்ரிஷாவுக்கு பரம திருப்தி. இதுவரை த்ரிஷா வாங்காத சம்பளத்தையும் கொடுத்து கையோடு 100 நாட்கள் டேட்சையும் வாங்கியிருந்தார் கமல். இந்த நேரத்தில் சந்தை பொருளாதாரம், சறுக்கலில் விட்டது மர்மயோகியை. படமே நிறுத்தப்பட்டு விட்டது என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கமல், “இந்த படத்தை கைவிடவில்லை. தள்ளிப் போட்டிருக்கிறோம். அவ்வளவுதான்” என்று விளக்கம் கொடுத்தார். இந்நிலையில் மிகுந்த அப்செட் ஆகியிருந்த த்ரிஷாவை தேற்ற வேண்டிய பெரும் கடமையும் அவருக்கு இருந்தது. திடீரேன்று ஒருநாள் த்ரிஷா வீட்டுக்கே வந்தாராம் கமல். திக்குமுக்காடி போனார் த்ரிஷ். இந்த படம் ஏன் தாமதம் ஆகிறது என்று விளக்கமாக கூறியவர், “படத்தை மீண்டும் ...

வீக் எண்ட் என்றால், கோலாகல பார்ட்டிகளை அரங்கேற்றுகிறார்கள் ,ஸ்ரேயா, த்ரிஷா, இலியானா ,நடிகைகளும் கும்மாளம் போடுவார்களாம்.

படம்
எங்க ஊர்ல இப்படியில்லை.... விஷால் வருத்தம் “எங்க ஊர்ல இப்படியெல்லாம் கிடையாது. இங்கேதான் இரண்டு பேர் சிரிச்சு பேசினாலே காதல்னு கிசுகிசு கிளப்புறாங்க” இப்படி புலம்பி தவித்திருக்கிறார் புரட்சித்தளபதி விஷால். இவர் எங்க ஊரு என்று சொன்னது டோலிவுட்டை. வீக் எண்ட் என்றால், கோலாகல பார்ட்டிகளை அரங்கேற்றுகிறார்கள் தெலுங்கு தேசத்தில். முன்னணி ஹீரோவிலிருந்து, காமெடி நடிகர்கள் கூட இந்த பார்ட்டிகளில் கலந்து கொள்வார்களாம். அதுமட்டுமல்ல, ஸ்ரேயா, த்ரிஷா, இலியானா என்று டாப் மோஸ்ட் நடிகைகளும் கும்மாளம் போடுவார்களாம். இந்த பார்ட்டிகளில் தவறாமல் கலந்து கொள்கிற ஹீரோக்களில் ஒருவர் விஷால். அந்த பார்ட்டிகளின் போதுதான் இவருக்கும் த்ரிஷாவுக்கும் நெருக்கமே அதிகரித்தது என்கிறார்கள். சில நேரங்களில் இந்த வைபவத்திற்கு போக முடியாமல் சென்னையில் மாட்டிக் கொள்ளும்போது ரிலாக்சுக்காக இங்கேயே கூடும் இந்த ஜோடிகளின் மீதுதான் காதல் பழி விழுந்திருக்கிறது. செல்வராகவன் இயக்கவிருக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆ...