இடுகைகள்

தமிழ் நடிகர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ரஜினியின் பேர கேட்டாலே! ஆங்கில பதிப்பில் இல்லாத பல பகுதிகள் தமிழ் பதிப்பில் கனிமொழி எம்.பி வெளியிட

படம்
சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாழ்க்கை வரலாற்றை அவரது ஒப்புதலோடு எழுதியவர் டாக்டர் காயத்திரி ஸ்ரீகாந்த். தி நேம் இஸ் ரஜினிகாந்த் என்று தலைப்பிடப்பட்ட அந்த ஆங்கில புத்தகத்தின் தமிழ் பதிப்பின் வெளியீட்டு விழா இம்மாதம் 30 ந் தேதி சென்னையில் நடைபெறுகிறது. தலைப்பு- ரஜினியின் பேர கேட்டாலே! ஆங்கில பதிப்பில் இல்லாத பல பகுதிகள் தமிழ் பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரஜினியின் வெற்றிகள் குறித்தும், அது எவ்வாறு ரஜினியின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது குறித்தும் கட்டுரையாகவே எழுதியிருக்கிறாராம் காயத்திரி ஸ்ரீகாந்த். ரஜினி என்ற மந்திரச் சொல்லுக்கு இருக்கிற ஈர்ப்பு விசை குறித்தும் தமிழ் பதிப்பில் சுவையாக அலசியிருக்கிறாராம் நூலாசிரியர். கனிமொழி எம்.பி வெளியிட, முதல் பிரதியை பெற்றுக் கொள்கிறார் தொழில் அதிபர ் மீனா ரெட்டி. ரஜினியின் மகள் சௌந்தர்யா, இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்

இனமொழி உணர்வின்றி இளையவர் கூட்டம் திரைப்படக் கவர்ச்சியால் வீணானது!

படம்
தமிழின உணர்வுக்குத் தளையா ? தமிழர்தம் தாயகத்தில் தமிழனை வெறும் சுவைஞனாக்கி சுரண்டியது தமிழ்த்திரை தமிழுணர்வு தவறியும் தலையெடுக்க விடாமல் தடுத்தனர் திரைத்துறைப் பார்ப்பனர் திரைப்படக் கவர்ச்சியால் தமிழனல் லாதார் தலைவனாக சித்தரிக்கப் பட்டார் திரைத்துறையே தமிழக அரசியலைத் தீர்மானம் செய்யும் வல்லமை பெற்றிருந்தது இனமொழி உணர்வின்றி இளையவர் கூட்டம் திரைப்படக் கவர்ச்சியால் வீணானது ! இனமொழி உணர்வுள்ள இயக்குநர் பாரதி அரசுசீமான் தமிழுணர்வால் தடமமைத்தார் ஆற்றுநீர்ச் சிக்கலில் அடவாடிசெய்யும் அண்டை மாநிலத்தைக் கண்டித்தார் வேற்று மொழியினர் விரவிய தமிழ்த்திரையில் தமிழின விடியலை முன்னெடுத்தார் ! ஈழ...

கண்கெட்ட பின் கூலிங்கிளாஸ்! கார்த்திக்கும் படப்பிடிப்பும்.. தயாரிப்பாளர்களுக்கு நாக்கு வெளியே தள்ளியது

படம்
கண்கெட்ட பின் கூலிங்கிளாஸ்! கார்த்திக்கும் படப்பிடிப்பும்... மறுபடியும் ஒரு அக்னி நட்சத்திரமாக ஜொலிப்பாரா கார்த்திக்? மணிரத்னம் இயக்கியவரும் ராவணன் படத்தில் நடித்து வருகிறாராம். நீண்ட காலம் கழித்து நடிக்க வந்திருக்கும் இவர், படப்பிடிப்புக்கு ஒழுங்காக வருவதுதான் ஆச்சர்யம் என்கிறார்கள். கார்த்திக் மட்டும் ஒழுக்கசீலராக இருந்திருந்தால், அவரது மார்க்கெட்டை யாராலும் அசைத்திருக்க முடியாது என்ற பரவலான பேச்சை இப்போதும் பல சினிமா கம்பெனிகளில் கேட்கலாம். தமிழ் சினிமா ரசிகர்களை தனது துறுதுறு நடிப்பால் கட்டி வைத்திருந்த கார்த்திக்கிடம், இல்லாத ஒரே விஷயம் பஞ்சுவாலிடி! காலை 9 மணிக்கு வரச்சொன்னால், மதியம் மூன்று மணிக்கு வந்து மேக்கப் ரூம் எங்கேயிருக்கு என்று கேட்பவர் அவர். 60 நாட்களில் முடிகிற படப்பிடிப்பு இவர் ஓருவராலேயே இரட்டிப்பு செலவை தந்ததால் பல தயாரிப்பாளர்களுக்கு நாக்கு வெளியே தள்ளியது. கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்டப்பட்டார் கார்த்திக். அரசியலுக்குள் காலடி வைத்த இவருக்கு அங்கேயும் இதே பிரச்சனை. ஏதோ பிரஸ்மீட்டை கேன்சல் செய்கிற மாதிரி பொதுக்கூட...