இடுகைகள்

ஜெயலலிதா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஊழல் மலிந்த அரசியல் வாழ்வு நடத்திவரும் ஜெயலலிதா - பார்வையில் பெரும் ஊழலா? எந்த முறைகேடும் இல்லை: ஜெயலலிதாவுக்கு ஆ.இராசா பதில்

படம்
"அலைவரிசை ஒதுக்கீட்டில் எந்த முறை கேடும் நடைபெறவில்லை. ஊழல் மலிந்த அரசியல் வாழ்வு நடத்தி வரும் ஜெயலலிதாவிற்கு எல்லாமே ராட்சத ஊழ லாகத்தான் தெரியும்" என்று மய்யத் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ஆ. இராசா வெளியிட்டுள்ள அறிக் கையில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது: இரண்டு முறை மாநிலத்தின் முதலமைச்சராக இருப்பவர் - ஆங்கிலம் தன் வாய்க்கு மட் டுமே வசப்படும் என்று கருதிக் கொண்டிருப்பவர். டான்சி நிலத்தை அடி மாட்டு விலைக்கு வாங்கியதில் தன் மனசாட்சிப்படி கழுவாய் தேடிக் கொள்ள வேண்டும் என நீதிமன்றத்தால் அறிவுறுத் தப்பட்டவர். இன்றும் நீதிமன் றத்தில் வழக்குகளை இழுத் தடித்துக் கொண்டு மக்கள் பணத்தில் ஊதாரி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் ஜெயலலிதாவின் - அலை வரிசை குறித்த அறிக்கை விவரமற்ற வேடிக்கையான பேத்தலாக இருப்பதில் ஆச்சரி யமில்லை என்றாலும், அவ ருக்கு சுருக்கமான பதில் தரு ...