கணிசமானோர் இன்னமும் பழக்க தோஷத்தில் சன் டிவிதான் பார்க்கிறார்கள். ஆனால் இரசிக்கவில்லை.
முதுமை எப்போது வரும்? வயதானால் வரும் தோல்விகள் வரும்போதும் வரும் சன் டிவி இரண்டாவது வகை . தற்போது சேனல் போட்டிகளில் தோற்றுக் கொண்டிருக்கிறது . இன்னும் வீழ்ந்துவிடவில்லை . ஆனாலும் மண்ணை கவ்விக் கொண்டிருக்கிறது . முதல் காரணம் - தி.மு.க லேபிளை இழந்தது. அதில் கணிசமானோர் இன்னமும் பழக்க தோஷத்தில் சன் டிவிதான் பார்க்கிறார்கள் . ஆனால் இரசிக்கவில்லை . 2வது காரணம் - மதியம் முதல் இரவு வரை அழுகாச்சி சீரியல்கள் டி . ஆர் . பியில் இடம் பிடிக்க தாய்மார்கள் உதவினாலும் , வீட்டில் உள்ள ஆண்கள் குறிப்பாக இளைஞர்கள் வெறுக்க ஆரம்பித்து விஜய்டிவி பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள் . இந்த இடைவெளியில்தான் ஜோடி நம்பர் -1 ஜெயிக்க ஆரம்பித்தது 3வது காரணம் - மாற்றிக் கொள்ள முடியாத பழைய ஸ்டைல் புரோகிராமிங் ஃபார்மட் முதல் டிரையலர் வரை இன்னும் அதே பழைய ஸ்டைல் . நேற்று வந்த சேனல்கள் கூட அசத்தல் கட்டிங்குகளால் கலக்கும்போது , இங்கே இன்னமும் தூரன் கந்தசாமியின் குரலில் ஜவ்வுமிட்டாயாக இழுத்துக் கொண்டிருக்கிறார்கள் . நடுவில் செட் , கலர் , டிரையலர் என மாற...