இடுகைகள்

கலைஞர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

"ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீடு செய்யப்பட்டதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை; ஒரு "டிவி'யும், ஒரு பத்திரிகையும் தொடர்ந்து தவறான செய்திகளையே வெளியிட்டு வருகிறது

படம்
சென்னை : " மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை மூலம் , " ஸ்பெக்ட்ரம் ' ஒதுக்கீடு செய்யப்பட்டதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை ; ஒரு " டிவி ' யும் , ஒரு பத்திரிகையும் தொடர்ந்து தவறான செய்திகளையே வெளியிட்டு வருகிறது ' என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார் . தொலைத்தொடர்புத் துறையில், உரிமம் வழங்குவதில் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் யெச்சூரி மற்றும் பா.ஜ., தலைவர்கள் கூறி வருகின்றனரே? மத்திய அமைச்சர் ராஜா , சென்னையிலும் , டில்லியிலும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து , இந்தப் பிரச்னை குறித்து விவரமாகவும் , விளக்கமாகவும் பல் வேறு ஆதாரங்களுடன் பதில் அளித்துள்ளார் . அவரது விளக்கத் திற்கு பிறகும் வேண்டுமென்றே ஒரு பத்திரிகை , இதுகுறித்து தொடர்ந்து தவறான செய்திகளையே திருப்பி திருப் பிச் சொன்னால் , அது உண்மையாகி விடாதா என்ற எண்ணத்துடன் தங்களுக்கு தெரிந்த சிலரைப் பிடித்து , வெளியிடச் செய்து வருகிறது . தொலைத்தொடர்புத் துறையில் உரிமங்கள் மற்றும் அலைவரிசை ஒதுக்கீட்டில் முதலில் வி...

என்னை சாதனையாளர் என்று குறிப்பிடு வதை விட, நான் பல சோதனைகளைக் கண்டவன் -கலைஞர்

படம்
எனது உச்சக்கட்ட சாதனை: மனிதனாகவே வாழ முடியாத அநீதிக்குத் தள்ளப்பட்ட அருந்ததியர்க்கு அளிக்கும் இட ஒதுக்கீடே! முதல்வர் கலைஞர் பெருமிதம் - சென்னை சாந்தோம் கலைவிழா மன்றம் சார்பில் 2008 ஆம் ஆண்டிற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா நேற்று மாலை சாந்தோமில் நடைபெற்றது. இவ்விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருதினைப் பெற்ற முதல்வர் கலைஞர் தனது ஏற்புரையில், என்னுடைய சாதனை கள் ஒன்று, இரண்டு . . . என்று வரிசைப்படுத்தித் தொடர்ந்தாலும் கூட, என்னுடைய உணர்விற்கு ஏற்ப, தமிழர்கள் உண்மை யிலேயே வாழ்த்துவதற்கேற்ப அமைந்தது எந்தச் சாதனை என்றால் அது இலங்கைத் தீவிலே தமிழன் அமைதியாக வாழ ஒரு வழி கண்டாகிவிட்டது என்ற அந்தச் செய்திதான் நான் முதன் மையாகவும், கடைசியாகவும் செய்கின்ற சாதனை என்றும் குறிப்பிட்டார். மேலும் அவர் பேசுகையில், மனிதனாகவே வாழ முடியாத நிலையில் உள்ள அருந்ததியர்களுக்கு சமூக நீதி அளித்தேன் என்ற அந்தச் சாதனை முற்றுப் பெறவிருக்கிறது என்று குறிப்பிட்ட...

ஜெயலலிதா எழுதிய கடிதம் பற்றி கண்ணீர்க் கட்டுரை வெளியிட்டுள்ள விகடன் இதழ், அடேடே

படம்
சிந்தனை செய் மனமே! சி.பி.எம். கட்சியின் "இன்றைய" நிலைபற்றி கலைஞர் அவர்களின் கேள்வி பதில் கேள்வி: பிரதமர் இந்திரா காந்தி அம்மையாருக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம் பற்றி கண்ணீர்க் கட்டுரை வெளியிட்டுள்ள விகடன் இதழ், அடேடே; ஜெயலலிதாவை எந்த அளவுக்குத் தூக்கிப் பிடித்திருக்கிறது பார்த்தீரா? கலைஞர்: அன்னை இந்திரா காந்திக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம் எம்.ஜி.ஆர். அவர்கள் சென்னை மருத்துவமனையில் நோயுற்றுப் படுத்திருந்தபோது! இதே ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். அவர்கள் அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து சென்னை வந்த பிறகு, அன்றைய பிரதமர் ராஜிவ்காந்தி அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினாரே - அந்தக் கடிதத்தில் தானே, எம்.ஜி.ஆர். தனது செல்வாக்கு வளருவது கண்டு பொறாமைப்படுகிறார் என்றும் - இனி அவர் முதல்வராக இயங்க முடியாதென்றும் - தன் கைப்படவே ஆங்கிலத்தில் ஒரு கடிதம் எழுதி; அக்கடிதம் மக்கள் குரல் பத்திரிகையில...

நாட்டை ஆளும் பயிற்சி அளிப்பதுதான் கல்வி, அரசியல் வளர்ச்சிக்காக மாணவரைத் தூண்டிவிட வேண்டாம் கலைஞர் வேண்டுகோள்

படம்
நாட்டை ஆளும் பயிற்சி அளிப்பதுதான் கல்வி, அரசியல் வளர்ச்சிக்காக மாணவரைத் தூண்டிவிட வேண்டாம் அண்ணா நூற்றாண்டு விழாவில் கலைஞர் வேண்டுகோள் - பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா நேற்று கோவையில் எழுச்சி பொங்க நடைபெற்றது. பல்லா யிரக்கணக்கானோர் திரண்டிருந்த இந்த விழாவில் உரையாற்றிய முதல்வர் கலை ஞர், அண்ணா விரும்பிய இளைஞர் எழுச்சிக்கு மாறாக இன்றைக்கு பள்ளி, கல்லூரி களில் நடைபெறும் விரும்பத் தகாத நிகழ்வுகள் கண்டு வேதனையுறுகிறேன். எதிர் காலத்தில் நாட்டை ஆளக் கூடிய பயிற்சி அளிப்பதற்குத் தான் கல்லூரிகள் உள்ளன என்பதை அவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். மாணவர் களைத் தூண்டி விட்டு தங் களின் அரசியலை வளர்த்துக் கொள்ளலாம் என்று யாரும் கருதாமல் நாட்டிலே கலவ ரத்தை உருவாக்கக் காரணமாக இருக்க வேண்டாம் என்று உருக்கமுடன் வேண்டுகோள் விடுத்தார். அவர் ஆற்றிய உரை வருமாறு: பேரறிஞர் அண்ணா அவர் களுடைய நூற்றாண்டு விழாவை தமிழகமெங்கும் சிறப்புறக் கொண்டாட தி.மு.க., தலைமைக் கழகம் மு...