"எய்ட்ஸ்' நோயால் 1981ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை ஏறத்தாழ 2 கோடியே 50 லட்சம் பேர் மரணமடைந்துள்ளனர்
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு " எய்ட்ஸ் ' என்ற வார்த்தையே இல்லை . இன்று இந்த உலகத்தில் எந்த பகுதியிலும் இந்த வார்த்தையை தெரியாதவர் அரிது . " எய்ட்ஸ் ' நோயால் 1981 ம் ஆண்டு முதல் 2007 ம் ஆண்டு வரை ஏறத்தாழ 2 கோடியே 50 லட்சம் பேர் மரணமடைந்துள்ளனர் . இதில் ஆப்ரிக்காவில் மட்டும் 75 சதவீத மரணங்கள் நிகழ்ந்துள்ளன . தற்போது 3 கோடியே 30 லட்சம் பேருக்கு எச் . ஐ . வி ., தொற்றுள்ளது . எய்ட்ஸை குணமாக்கும் மருந்து இல்லை . எனவேதான் வருமுன் காப்போம் ' எனும் பழைய பழமொழிதான் இந்நோய் தடுப்பில் முக்கியத்துவம் பெறுகிறது . ஆனால் வரும் முன் தடுத்துவிடுவது முற்றிலும் சாத்தியமில்லை . ஊசி மூலமாகவோ ரத்தப்பரிமாற்றம் வழியாகவோ இந்த வைரஸ் பரவும் . என்றாலும் இதற்கு சிறிய அளவிலான வாய்ப்புதான் உள்ளது . " எச் . ஐ . வி ., தொற்றுக்குள்ளானவரிடம் பாலுறவு கொள்வதன் வாயிலாகத்தான் இந்நோய் அதிகமாக பரவுகிறது . இதிலிருந்து தற்காத்துக் கொள்ள இரண்டு வழிகளே உள்ளன . ஒன்று - பாலுறவை தவிர்த்துவிடுதல் . மற்றொன்று பாதுகாப்பான உறவு . இருவரில் ...