இடுகைகள்

தமிழ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அப்பாவின் ஆசை

படம்
அப்பாவின் ஆசை என் பையன் அதிக மதிப்பெண் பெறவில்லையே...! வருந்தினேன் ஏங்கினேன்.....! குழந்தையே இல்லையென்று ஏங்குவோரை காணும் வரை..! எனக்கும் ஆசைதான்... அவனோடு நண்பணாக பழக வேண்டுமென்று இளமை துள்ளளோடு அவனின் குரும்புகள் கோபத்தை கொடுத்தலும் அவன் என் பையன்...! அவனின் மனநிலைக்கு நான் மாறிக் கொள்கிறேன்.....! அன்புள்ள அப் பா

10 ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய என் முதல் கவிதை..........

படம்
10 ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய என் முதல் kகவிதை..........! என் முதல் கவிதை உன் உள் மனதில் பதிந்திருக்கும் பாலுணர்வு புதையல்கள் அகழ்தெடுக்கப்பட்டால் அவை.......! நிச்சயம் தங்கங்களாக அல்ல.....! நிச்சயம் தரங்கெட்டவகளாகத்தான் இருக்கும்.....! மனித நேயமென்ற உணர்வால் அவற்றை புதைத்துவிட்டு புத்தன் போல் வேடமிகிறாய்.......! வாய்ப்பு கிடைக்கும் வரை யாவரும் யோக்கியனே......!

அறிவியலும் மதமும் ஒன்றாகிவிடமுடியுமா?

படம்
அறிவியலும் மதமும் ஒன்றாகிவிடமுடியுமா? நமது நாட்டில் மதத் தலைவர்களும், அறிவியல் படித்தவர்களும் அறிவியலையும் மதத்தையும் ஒன்றுபடுத்திப் பார்க்கின்ற முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அறிவியல் பற்றிய செய்திகள் புராணங்களில் இருப்பதாகக் காட்டிக் கொள்வதில் மதவாதிகள் அடிக்கடி முனைப்புக் காட்டுகின்றனர். விண்கலம்,-செயற்கைக்கோள், குளோனிங் பற்றிய செய்தி-கள் புராணங்களில் உள்ளன என்பதற்குப் பலமான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் மதமும் அறிவியலுமே உண்மையினைக் கண்டறிவதற்கான நெறி-முறைகள் எனும் விவாதத்தினை உருவாக்கி வருகின்றனர். இந்தக் கூற்றே உண்மைக்குப் புறம்பானது என்பதே உண்மை நிலை. மதத்தலைவர்களும் சாமியார்களும் தங்களது கூற்றுக்கு வலிமை சேர்க்க அறிவியல் கற்ற தங்களது சீடர்களைப் பயன்படுத்தத் தயங்குவது இல்லை. அத்தகைய வேடதாரிகள், சிந்தனைக்குத் தடை விதிக்கும் மெய் அறிவியலை (Meta Physics) ஆதரிக்க இயற்பியலாளரை (Physicists) மேற்கோள் காட்டவும், ஒரு தொப்பி கீழே விழுவதற்கு விளக்கமாக நியூட்டனையே தவறாகப் பயன்படுத்தவும் தவறுவது இல்லை. ஏன் இந்த நிலை? விஞ்ஞான உலகிலிருந்து வரும் ஓர் ஆதரவுச் சொல்கூட ம...

என் இனிய தமிழ் மக்களே ? என் முதல் பதிவு

படம்
என் இனிய தமிழ் மக்களே ?   என் முதல் பதிவு நன்பர் முரளி கிருக்ஷ்ன்னன் உதவிஉடன் தட்டு தடுமாரி விசை பலகையில் தட்டினே ன்     கொஞ்சம் நம்பிகை வந்தது அட நான் கூட ஒரு பதிவாளான் மிட்டாய் கிடைத குழந்தையின் மகிழ்ச்சி       ஆலோசனை வழங்கி ஆதரவு தாருங்கள். தமிழ் வெங்கட்

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்

படம்
ரசிகர்கள் நல்ல விமர்சகர்களாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் நல்ல படங்கள் அதிகமாக வரும். மேலும் நல்ல படங்களை அடையாள காண செக்ஸ் படங்களையும் தரம் பிரித்து அனுமதிக்க வேண்டும் என்றார் கலைஞானி கமல்ஹாசன்.  வெள்ளி விழா கண்ட சுப்பிரமணியபுரம் படத்தை இயக்கியவர் இயக்குநர் சசிகுமார். அவரது அடுத்த படம் பசங்க. ஆனால் இந்தப் படத்தை இவர் இயக்கவில்லை. தயாரிப்போடு நிறுத்திக் கொண்டார். சிறுவர்களை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தப் படத்தை இயக்குநர்கள் சேரன், தங்கர்பச்சான் ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்த பாண்டிராஜ் இயக்குகிறார். படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் படம் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று காலை நடந்தது. பாடல்களை, இசைமேதை பாலமுரளிகிருஷ்ணா வெளியிட, கலைஞானி கமல்ஹாசன் பெற்றுக்கொண்டார். டிரைலரை கமல்ஹாசன் வெளியிட, இயக்குநர் அமீர் பெற்றுக்கொண்டார். விழாவில் கமல் பேசியது ஒவ்வொரு ரசிகரையும் சிந்திக்க வைப்பதாக இருந்தது. அவரது பேச்சின் ஒரு பகுதி:  "என் படங்களைப் பார்த்துதான் புதிதாக வருகிறவர்கள் படம் எடுப்பதாக, அமீர் பேசும்போது சொன்னார். இதை, என் தகுதிக்கு மீறிய பாராட்டாகவே எடுத்த...

நடிகர் ராதாரவி அதிமுகவில் இருந்து விலகல்:கலைஞரை சந்தித்தார்

படம்
நடிகர் ராதாரவி அதிமுகவில் இருந்து விலகல்:கலைஞரை சந்தித்தார் நடிகரும், முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.வுமான ராதாரவி இன்று மாலை 5 மணியளவில் முதலமைச்சர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 1/2 மணி நேரம் நீடித்தது.  சந்திப்புக்கு பிறகு வெளியே வந்த நடிகர் ராதாரவி செய்தியாளர்களிடம், அ.தி.மு.க.வில் தனக்கு உரிய மரியாதை தரப்படவில்லை என்றும், தி.மு.க.வில் விரைவில் இணைய இருப்பதாகவும் தெரிவித்தார்.

காமெடியாகிப் போன சீரியஸ் வசனங்கள்

படம்
வசனங்களுக்காகவே ஓடிய படங்கள் உண்டு. வசனங்களாலயே, தியேட்டரை விட்டு ஓடிய படங்களும் உண்டு. அதேப்போல், வழி மாறிய வசனங்களும் உண்டு. சீரியஸாக வெளிவந்து, பின்னால் நகைச்சுவையாக பேசப்படும். சில வசனங்கள் நன்றாக ரசிக்கப்பட்டு, பிரபலமடைந்து, பலரால் பல இடங்களில் பேசப்பட்டு, பின்பு சிரிப்பிற்குரியதாக ஆக்கப்படும். சில வசனங்கள் சரியாக கையாளப்படாததால், சுட சுட கிண்டலுக்குள்ளாக்கப்படும். அப்படி என் நினைவுக்கு வந்த சில வசனங்கள். இதெல்லாம் அந்தந்த படங்களில் சீரியஸ் வசனங்கள். இப்படி காமெடி செய்வார்கள் என்று வசனமெழுதும்போது நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள். பாச மலர் -  என் கண்ணையே உங்கிட்ட ஒப்படைக்கிறேன். அதுல ஆனந்தக் கண்ணீரை மட்டும் தான் நான் பார்க்கணும். உணர்ச்சிமயமான வசனம். கால ஓட்டத்தில், இன்று இதை இயல்பாக சொன்னாலும் சிரிக்கத்தான் செய்வார்கள். முதல் மரியாதை -  ஐயா! எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். சொன்னவருக்கு நல்ல ஸ்டைல். சிலர், எனக்கு உண்மை தெரிஞ்சாகணும்ன்னு சாதாரணமாக ஆரம்பித்தாலும் முடிக்கும்போது அவர் ஸ்டைலில் முடித்து விடுவார்கள். நாயகன் -  நீங்க நல்லவரா? கெட்டவரா? மணிரத்னம் பட வசனங்களில் ஒரு த...

எனக்கு மின்னஞ்சலில் வந்தது..

படம்
எனக்கு மின்னஞ்சலில் வந்தது..  கலைநயமான படங்கள்  ரசியுங்கள். The most beautiful house in the world Situated in Barcelona, Spain                                                                   The most beautiful city in the world Vancouver, Canada                                                                 The most beautiful boy in the world For 2007 held in Australia and he is from Pakistan and he is 1yr & 9months old. The most beautiful girl in the world Held in France and her name is Fatima from Morrocco The most beautiful eyes in the world from Afghanistan                                                                                                                     The most beautiful waterfall in the world Niagra Falls in U.S. & Canada   The most beautiful bridge in the world JAPAN The most beautiful horse in the world Arabian The most beautiful plant in the world It is shaped like a water bubble                                                                     ...