இடுகைகள்

தமிழ் நியூஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ் மீடியாவும் கூப்பாடும் தலைப்பிற்கு மன்னிக்கவும்.

படம்
தமிழ் மீடியாவும் கூப்பாடும் தலைப்பிற்கு மன்னிக்கவும். அது எந்த வகையிலும் நான் மிக மரியாதை கொண்டுள்ள தமிழுக்கோ அல்லது நிஜ தமிழர்களுக்கோ விடும் பாணமல்ல. ஆனால் தமிழரென்று சொல்லிக் கொண்டு தமிழரின் பண்பாட்டையே சிறிது சிறிதாக சுரண்டி, கலப்படம் செய்து அதன் பயனாக பெரும்பாலான தமிழர்கள் தங்கள் நிஜ அடையாளம் எது எனத் தெரியாத நிலைக்கு ஆக்கிய புண்ணியவான்களைத் தான் சாடுகிறது இத்தலைப்பு. முதலில் திரைப்படம். 'டேய்ய்ய் வாஆடா' எனக் கத்தும் நடிகர் யார்? எனக் கேட்டால் தமிழன் குழம்பி விடுவான். ஏனென்றால் எல்லாருமே அப்படித்தான் கத்துகிறார்கள். அது கதாநாயகனாகட்டும், நாயகியாகட்டும், மிக முக்கியமாக நகைச்சுவை நடிகர்கள் (!) என்று தங்களை அழைத்துக் கொள்ளும் நபர்களாகட்டும், இவர்களால் கத்தாமல் ஒரு காட்சியில் நடிக்க முடியாது. எந்த நகைச்சுவைக் காட்சியானாலும் அது கடைசியில் அடி உதையில் தான் போய் முடிய வேண்டும் என்பதை ஒவ்வொரு தமிழரும் எதிர்பார்க்கிறார். அது அவ்வாறு முடியாமல் போனால் அவர் படும் ஏமாற்றம் கொஞ்சநஞ்சமல்ல. நகைச்சுவை காட்சியில் அடி உதை இன்றியமையாதது என்பதைத் தமிழ் திரைப்பட உலகம் ஏனோ மிக ஆழமாக நம்புகிறது. அ...

வழக்குரைஞர்களில் பலர் வரம்பை மீறலாமா?

படம்
சென்னை உயர்நீதிமன் றத்தில் கடந்த சில வாரங்களில் பல்வேறு விரும் பத்தகாத நிகழ்வுகள் ஏற்பட்டதன் விளை வாக, வழக்கறிஞர்களின் நீதி மன்றப் புறக்கணிப்பு தொடர் கிறது. உச்சநீதிமன்றத்தால் நிய மிக்கப்பட்ட (வெளி மாநில) ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலை மையில் விசாரணை நடை பெற்று - புயல் வேகத்தில் அவர் சென்னை வந்து 2 நாள்கள் விசாரித்து, உச்சநீதிமன்றத் தில் 5 ஆம் தேதி அறிக்கை யைத் தாக்கல் செய்து அது 6.3.2009 அன்று உச்சநீதிமன் றத்திற்குத் தரப்பட்டுள்ளது. அவ் வறிக்கை இணைய தளத்திலும், செய்தி ஏடுகளிலும் வெளி வந்துள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு: 1. சென்னை உயர்நீதிமன் றத்தில் சுப்பிரமணியசாமி வந்து, சிதம்பரம் நடராஜர் கோயில் வழக்கில் தன்னை ஒரு கட்சி ஆடுபவராக இணைத்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக வந்த போதிலிருந்து தொடங்கி யுள்ளது என்பது சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. மூல காரணங்கள் 2. சென்னை உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி பொறுப்பு வகித்தவர் மற்றும் சில நீதிபதிகளின் மெத்தனம் அல்லது மென்மையான போக்கே இதற்கு மூல காரண மாகவே - அந்நிலை தொடர்வ தற்குக் காரணமாகவே அமைந் துள்ளது. 3. வழக்குரைஞர்களில் பலர் - ச...

யாழ்ப்பாணம் மாவட்ட தமிழ் எம்பி சிவாஜிலிங்கத்தை 72 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்தியா

படம்
யாழ்ப்பாணம் மாவட்ட தமிழ் எம்பி சிவாஜிலிங்கத்தை 72 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்தியா உத்தரவிட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இப்போது இந்தியாவில் உள்ள சிவாஜிலிங்கம் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து விளக்கி வருகிறார். இவர் புலிகள் ஆதரவு தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்பியாவார். இந் நிலையில் 72 மணி நேரத்தில் அவர் இந்தியாவிலிருந்து வெளியேற வேண்டும் என்றும், இல்லாவிட்டால் நாடு கடத்துவோம் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இத்ததகவை இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தனது இணையத் தளத்தில் நேற்று வெளியிட்டது. ஆனால், கொழும்பு திரும்பினால் தன்னை இலங்கை அரசு கொலை செய்து விடும் என்பதால் தான் இந்தியாவிலேயே தங்கியிருக்க அனுமதிக்குமாறு சிவாஜிலிங்கம் அடைக்கலம் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தனக்கு இந்திய அரசிடம் இருந்து இதுபற்றி தகவல் ஏதும் வரவில்லை என்றும், இது இலங்கை அரசால் திட்டமிட்டு பரப்பப்படும் புரளியாக இருக்கலாம் என்றும் சிவாஜிலிங்கம் தெரிவித்ததாக இலங்கை தமிழ் இணைய...

போர் தீவிரமடைந்துள்ள நிலையில் சமாதானப் பேச்சுக்கள் பற்றிய எதிர்பார்ப்புக்கள் எட்டாத தொலைவில் உள்ளன. பா.நடேசன்

படம்
தமிழீழ விடுதலைப் புலிகளையும் தமிழ் மக்களையும் பிரித்துப் பார்த்து குரூரமாக திருப்தியடைய சில சக்திகள் விரும்புகின்றன. ஆனால், அவையெல்லாம் கற்பனைகளாகவே இருக்கும். தமிழரின் தலைமைச் சக்தி புலிகள் இயக்கம்தான் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சுவிசிலிருந்து மாதம் இருமுறை வெளிவரும் 'நிலவரம்' (12.12.08) வார இதழுக்கு பா.நடேசன் வழங்கிய நேர்காணலில் மேலும் தெரிவித்துள்ளதாவது: கிளிநொச்சி மீதான முற்றுகை இறுக்கப்பட்டுள்ளது. எப்படியாவது கிளிநொச்சியைக் கைப்பற்றியே ஆவதெனச் சிங்களம் சூளுரைத்துள்ள நிலையில், என்ன விலை கொடுத்தாவது கிளிநொச்சியைக் காப்பாற்றியே தீர்வதென விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. களநிலவரம் உண்மையில் எவ்வாறாக இருக்கின்றது? சிங்களப் படைகளின் சிறப்பு டிவிசன்கள் இரண்டின் படையணிகள் கிளிநொச்சிக்கான சமரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதனால் கிளிநொச்சியின் மேற்கே பலமுனைகளில் கடும் சண்டைகள் நாள்தோறும் நடக்கின்றன. சிங்களப் படைகளின் முயற்சியை முறியடிக்கும் எதிர்ச்சமரில் புலி வீரர்கள் தீரத்துடன் போராடி வருகின்றனர். ...

தலிபான்கள் அதிரடி தாக்குதல்-150 நேட்டோ வாகனங்கள் எரிப்பு-3 பேர் பலி

வட மேற்கு எல்லைப்புற மாகாணத்தில், ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்படவிருந்த நேட்டோ படையினரின் 150 வாகனங்களை தலிபான் தீவிரவாதிகள் அதிரடித் தாக்குதல் நடத்தி தீவைத்து எரித்தனர். 3 பேர் கொல்லப்பட்டனர். அல் பைசல் என்ற இடத்தில் உள்ள ஒரு டிப்போவில் இந்த வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினருக்காக இவை அனுப்பப்படவிருந்தன. இந்த நிலையில் திடீரென பயங்கர ஆயுதங்களுடன் உள்ளே புகுந்த 100க்கும் மேற்பட்ட தலிபான் தீவிரவாதிகள் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். ராக்கெட்களையும், கனரக ஆயுதங்களையும் பயன்படுத்தி அங்கிருந்த 150 வாகனங்களை தாக்கி எரித்தனர். டேங்கர்கள், லாரிகள் உள்ளிட்டவற்றையும் அவர்கள் தீவைத்துக் கொளுத்தினர். மொத்தம் பத்து ராக்கெட்களை வீசியும், பெட்ரோல், மண்ணெண்ணையைக் கொண்டும் இந்த தாக்குதலி்ல அவர்கள் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் டிப்போ வாட்ச்மேன் உள்ளிட்ட 3 பேர் கொல்லப்பட்டனர். நேட்டோ படையினர் மீது தலிபான்கள் நடத்திய மிகப் பெரிய தாக்குதலாக இது கருதப்படுகிறது.

அய்ந்து மாநிலங்களில் மூன்றில் காங்கிரசு வெற்றி ராஜஸ்தானைக் கோட்டைவிட்டது பாஜக

படம்
அய்ந்து மாநிலங்களில் மூன்றில் காங்கிரசு வெற்றி ராஜஸ்தானைக் கோட்டைவிட்டது பாஜக மத்திய பிரதேசம் , சட்டீஸ்கரில் மட்டுமே பாஜக ஆட்சி இடதுசாரிக் கட்சிகளின் முயற்சிக்கு மூக்கறுப்பு டில்லி , ராஜஸ்தான் , மிசோராம் , சட்டிஸ்கர் , மத்தியப்பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்றத்திற்கான தேர்தல் நடந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன . அவற்றில் டில்லி , ராஜஸ்தான் , மிசோராம் ஆகிய மூன்று மாநிலங்களில் காங்கிரசுக் கட்சி பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றுள்ளது . ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த இரண்டு முறையாக வெற்றி பெற்று ஆட்சியில் இருந்த பாஜகட்சி படுதோல்வி அடைந்து ஆட்சியை இழந்துள்ளது . சட்டீஸ்கர் மாநிலத்தில் காங்கிரசும் பாஜகட்சியும் சமபலத்தில் இடங்களைப் பெற்றுள்ளன . இந்த மாநிலத்தில் பாஜகட்சி தற்போது ஆளுங்கட்சியாக உள்ள நிலை யில் மீண்டும் ஆட்சி அமைப்பது சந்தேகமே ! மத்தியப் பிரதேச மாநிலத்தில் மட்டுமே மதவெறிக் ...

ஓடோடி வந்த த்ரிஷா, கொடியை தூக்கி கோஷம் போட்டபோது, அதில் நிஜமான அக்கறை தெரிந்தது!

படம்
தீவிரவாதத்திற்கு எதிரான பேரணி ஒன்றை கொடியசைத்து துவங்கி வைக்க சம்மதித்திருந்தார் த்ரிஷா. சென்னையில் நடைபெற்ற இந்த பேரணியில் கலந்து கொள்வதற்காக வெளிநாட்டிலிருந்து அவர் வந்து சேர்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டதாம். தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க பாங்காக் போயிருந்தார் த்ரிஷா. இவருக்கு ஜோடி நாகார்ஜுன். படப்பிடிப்பு முடிந்து விமான நிலையத்திற்கு வந்து பார்த்தால், பெரிய திண்டுக்கல் பூட்டு தொங்கியதாம்! அச்சச்சோ என்று பதறியவரிடம், அங்கிருந்த பாதுகாப்பு போலீசார் விபரத்தை கூறினார்களாம். பாங்காக் நாட்டில் அரசியல் குழப்பம். அந்நாட்டு தலைமையை எதிர்த்து விமான நிலையத்தை முற்றுகையிடப் போவதாக எதிர்க்கட்சிகள் மிரட்ட, திறந்திருந்தால்தானே மிரட்டுவார்கள் என்று முடிவு செய்த போலீஸ், விமான நிலையத்தையே மூடிவிட்டது. அடித்து பிடித்துக் கொண்டு புக்கட் தீவுக்கு வந்து சேர்ந்த த்ரிஷா, அங்கிருந்து கோலாலம்பூரில் ஃபிளைட் பிடித்து சென்னையில் இறங்கினாராம். இப்படியெல்லாம் ஓடோடி வந்த த்ரிஷா, கொடியை தூக்கி கோஷம் போட்டபோது, அதில் நிஜமான அக்கறை தெரிந்தது!

உள்ளூரில் நடக்கும் வன்முறையின் தலையை நசுக்க முடியாத நாம், வெளிநாட்டுப் பயங்கரவாதிகளை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?

படம்
மத்திய நிதித்துறை அமைச்சராகவிருந்த மாண்புமிகு ப . சிதம்பரம் அவர்கள் இந்தியாவின் உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று இருக்கிறார் . இதற்குமுன் உள்துறை இணை அமைச்சராகவிருந்த அனுபவம் அவருக்கு உண்டு . கிட்டத்தட்ட 20 ஆண்டுகாலம் மத்தியில் அமைச்சராகவும் இருந்திருக்கிறார் . தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர் ஒருவர் மிக முக்கியமான ஒரு துறைக்குப் பொறுப்பு ஏற்றிருப்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும் . உலகில் வன்முறைகள் அதிகம் நடக்கும் 20 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைக்கப்பட்டுள்ளது . இத்தகைய ஒரு சூழ்நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் உள்துறை அமைச்சராகப் பணி யாற்றிடப் பணிக்கப்பட்டுள்ளார் . அதுவும் மக்களவைக்கு மிக விரைவில் பொதுத்தேர்தல் நடத்தப்படவிருக்கும் ஒரு காலகட்டத்தில் இந்தப் பொறுப்பு அவரிடம் வந்து சேர்ந்திருக்கிறது . புதிய பொருளாதாரக் கொள்கை என்ற புரவியின்மீது சவாரி செய்தவர் . அதன்மூலம் இந்தியப் பொருளாதாரம் நசிந்து போனதுதான் மிச்சம் என இடதுசாரிகளால் மிகவும் கடுமையாக விமர்சிக...

காவிக்கு வழியில்லை என்றால், வடநாடாக இருந்தால் கோவணம், கோவணமும் கிடைக்கவில்லையென்றால் - உச்சக் கட்டம் - நிர்வாண சாமியார்

படம்
மத தீவிரவாத சக்திகளான ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார்க் கும்பலை நாட்டில் நடமாட விடாதீர்கள். இதில் கட்சி வேற்றுமை இருக்கக் கூடாது. மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார். சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு: சாமியார் பெயரை மாற்றிக் கொண்டு சாமியார் என்றாலே போலிதான். இதில் போலிச் சாமியார் என்று சொல்லவேண்டிய அவசியம் இல்லை. சாமியார் ஆசிரமம் நடத்துவதாக சொல்லிக்கொண்டு பெயரை மாற்றிக் கொள் கின்றான். யார் மகந்த் என்று கேட்டால் அமிர்தானந்த். நம்ம ஊர் மஞ்சக்குடி அய்யர் எப்படி தயானந்த சரஸ்வதி ஆனார்கள் பாருங்கள் - அதுமாதிரி - இவர் யார்? தயானந்த பாண்டே வடநாட்டுப் பார்ப்பனர். இவருடைய பெயர் என்...

மாறன் - கருணாநிதி சந்திப்பு ஏன்?

படம்
ஒன்றரை ஆண்டு கால மோதலுக்குப் பின்னர் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு . கருணாநிதி தனது மனசாட்சியின் முரசொலி மாறனின் மகன்கள் கலாநிதி மற்றும் தயாநிதி மாறன் ஆகியோரை சந்தித்துப் பேசியது ஏன் என்பதற்கான பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன . முரசொலி மாறனின் மறைவுக்கு பிறகு மாறன் குடும்பத்தினருக்கும் கருணாநிதி குடும்பத்திற்கும் இடையே உறவில் விரிசல் ஏற்பட்டு விட்டது . இந்த விரிசல் தினகரன் நாளிதழில் வெளியிடப்பட்ட கருத்து கணிப்பு மற்றும் அதனைத் தொடர்ந்து மதுரையில் தினகரன் நாளிதழ் தாக்கப்பட்ட பிறகு பிளவாக மாறியது . தினகரன் பிரச்சனைக்கு முன்பே இரு குடும்பத்தினருக்கும் இடையே உறவில் இருந்த விரிசலை சமீபத்தில் கலாநிதி மாறன் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் வெளிப்பட்டது . சமீபத்தில் கருணாநிதி சன் டிவி பற்றியும் மாறன் சகோதரர்கள் பற்றியும் அறிக்கை வெளியிட அதைத் தொடர்ந்து கலாநிதி கடிதம் எழுதி அதை பத்திரிகைகளுக்கு அளத்தார் . இதனால் மோதல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென மாறன் சகோதரர்கள் இன்ற...