இடுகைகள்

தேர்தல் 2009 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாமகவின் கடந்த கால 'தாவல்கள்' வரலாறு!

படம்
1999ம் ஆண்டு அரசியல் கட்சியாக உருவெடுத்தது முதல் பாமக இதுவரை கிட்டத்தட்ட ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு கூட்டணி என்ற கணக்கில் அணிகளை மாற்றி வந்துள்ளது.  2001 ... 2001ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்தார் டாக்டர் ராமதாஸ். அந்தத் தேர்தலில் 20 சீட்களில் வெற்றி பெற்று சாதனை படைத்தது பாமக. ஆனால் தேர்தல் முடிந்த சில வாரங்களிலேயே அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது பாமக. காரணம்: ஜெயலலிதா முதல்வராக பதவியேற்ற பின் அவரை சந்திக்க கோட்டைக்கு சென்றார் ராமதாஸ். முதல்வர் அறைக்கு பக்கத்தில் உள்ள விருந்தினர் அறையில் உட்கார்ந்திருந்தார்.. உட்கார்ந்திருந்தார்.. உட்கார்ந்திருந்தார்.. ஆனால், ஜெயலலிதா அவரை சந்திக்கவே இல்லை. காரணம் அவர் ஜெயலலிதாவை சந்திக்கப் போனது பாமகவுக்கு  ராஜ்யசபா  சீட் கோரி. இதையடுத்து அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறினார் ராமதாஸ். அடுத்த சில நாட்களில் திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட அவரை சிறையில் போய் சந்தித்து திமுக கூட்டணிக்கு வந்தார். 2004... 2004ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றது பாமக. இந்த முறை ...

இப்போதைக்கு மதில் மேல் பூணையாய் இருக்கிறது சிறுத்தைகளின் நிலை

படம்
: அதிமுக கூட்டணிக்கு விடுதலைச் சிறுத்தைகளை இழுக்க பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தீவிரமாக இறங்கியுள்ளார். மீண்டும் திருமாவளவனுடன் அவர் இதுகுறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். தமிழக லோக்சபா தேர்தல் படு சூடாக இருக்கிறது. இதற்குக் காரணம், பாமக, தேமுதிக ஆகிய இரு முக்கிய கட்சிகளும் தங்களது நிலைப்பாட்டை இதுவரை தெளிவாக அறிவிக்காததே. இதன் காரணமாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளும் தங்களது கூட்டணியை இன்னும் இறுதி செய்ய முடியவில்லை. ஆனால் தற்போது பாமக ஒரு முடிவுக்கு வந்து விட்டதாக தெரிகிறது. அதிமுகவுடன் அணி சேரும் முடிவுக்கு ஒரு வழியாக பாமக வந்துள்ளதாக தெரிகிறது. அந்தக் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்படவுள்ளதாகவும், தொகுதிகள் குறித்து அதிமுக தரப்புடன் பாமக தரப்பு ரகசியமாக பேசி முடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தான் மட்டும் அதிமுகவுக்குப் போகாமல் திருமாவளவனையும் உடன் அழைத்துச் செல்ல விரும்புகிறார் ராமதாஸ். ஆனால் திருமாவோ, திமுக அணியை விட்டு வர முடியாது என கூறி வருகிறார். கடந்த சட்டசபைத் தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் தனக்கும், தனது கட்சியினருக்கும் ஏற்பட்ட அவமானத்தை அவர் ராமதாஸிட...

ஜார்க்கண்ட்டில் லாலுவுக்கு காங். 'அல்வா'!

பீகாரில் லாலு காட்சியுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை என்று காங்கிரஸ் கட்சி கூறி விட்டது. இதையடுத்து அங்கு அதிக தொகுதிகளில் போட்டியவுள்ளது. பீகாரில் மொத்தம் 40 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இவற்றைப் பிரித்துக் கொள்வதில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதாதளத்திற்கும், பாஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சிககும் இடையே பிரச்சினை இருந்து வந்தது. இதை காங்கிரஸ் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தது. பிரச்சினை தீர்ந்து சுமூகமாக பிரிவினை ஏற்படும். நமக்கும் கணிசமான தொகுதிகள் கிடைக்கும் என காங்கிரஸ் காத்திருந்தது. ஆனால் லாலு பெரிய ஆப்பாக வைத்து விட்டார் காங்கிரஸுக்கு. பாஸ்வானுக்கு 12, நமக்கு 25 என அறிவித்த லாலு, காங்கிரஸுக்கு வெறும் 3 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கியுள்ளார். இதனால் காங்கிரஸ் அதிர்ச்சி அடைந்தது. லாலு பிரசாத் யாதவ் நம்பி்க்கைத் துரோகம் செய்து விட்டார் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் கண்டனம் தெரிவி்த்தார். இந்த நிலையில் பீகாரில் லாலு கட்சியுடன் இனி கூட்டணி இல்லை என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. மேலும் கூடுதல் தொகுதிகளிலும் போட்டியிடப் போகிறது. குறைந்தது 20 தொகுதிகளில் அது போட்டியிடும் எனத் தெரிகிறது...