இடுகைகள்

தமிழ் செய்திகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மயிலாப்பூரும் திருமங்கலமாக மாறும்: எஸ்.வி.சேகர்

படம்
மயிலாப்பூரும் திருமங்கலமாக மாறும்: எஸ்.வி.சேகர் மயிலை மாங்கொல்லையில் பொதுக்கூட்டம் நடத்தி மக்கள் முன்னிலையில் எனது ராஜினாமா முடிவை அறிவிப்பேன் என்றும், நான் ராஜினாமா செய்த பிறகு மயிலாப்பூரும் ஒரு திருமங்கலமாக மாறும் என்றும் அதிமுக எம்எல்ஏ எஸ்.வி.சேகர் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது. வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக அம்பா சங்கர் கமிஷன் அமைக்கப்பட்டது. அருந்ததியர்களுக்காக ஜனார்த்தனன் கமிஷன் அமைக்கப்பட்டது.  அதே போல் பிராமணர்களுக்கும் ஒரு கமிஷன் அமைத்து ஆராய வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதியிடம் இன்னும் சில நாட்களில் மனு கொடுக்க உள்ளோம். பிராமணர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க முதல்  அமைச்சர் கருணாநிதியால் தான் முடியும்.  எங்கள் சமூகத்திற்கு நல்லது செய்பவரை ஆதரியுங்கள் என்று ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்வேன்.    மயிலாப்பூர் தொகுதியில் எனக்கு போட்டியிட சீட் தந்தது ஜெயலலிததான். ஆனால் என்னை வெற்றி பெற செய்தது மயிலாப்பூர் தொகுதி மக்கள். தொகுதி மக்களுக்கு என்னென்ன கடமைகள...

இரு கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீசி அவர்களது வாழ்வைக் கெடுத்த 3 வாலிபர்களை சுட்டுக் கொன்றுவிட்டனர்.

படம்
இரு கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீசி அவர்களது வாழ்வைக் கெடுத்த 3 வாலிபர்களை ஆந்திர போலீசார் சுட்டுக் கொன்றுவிட்டனர். வாரங்கல் மாவட்டத்தில் உள்ள ககதிய இன்ட்டியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரியில் பயிலும் ஸ்வப்னிகா, பிரனீதா ஆகியோர் தங்களது டூ வீலரில் கல்லூரியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்களை பைக்கில் வந்த கல்லூரி மாணவர்களான சஞ்சய், ஹரிகிருஷ்ணா, ஸ்ரீனிவாச ராவ் ஆகியோர் வழிமறித்து ஆசிட் ஊற்றிவிட்டுத் தப்பினர். இதி்ல் இரு மாணவிகளின் முகம், உடல் வெந்துபோனது. இருவருமே மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 3 மாணவர்களையும் ஆந்திர போலீசார் கைது செய்தனர். இதையடுத்து மூவரையும் சம்பவம் நடந்த இடத்துக்கு நேற்றிரவு விசாரணைக்காக கொண்டு சென்றனர். எந்த இடத்தில் வைத்து ஆசிட் ஊற்றினார்களோ அதே இடத்தில் வைத்து மூவரையும் போலீசார் சுட்டுக் கொன்றனர். மூவரும் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றதால் சுட்டிக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மாணவிகள் மீது ஆசிட் வீசப்பட்டது குறித்து ஆந்திர முதல்வர் ராஜசேகர் ர...

நடிகர், டான்ஸ் மாஸ்டர், இயக்குனர் பிரபுதேவாவின் மகன் விஷால் (13) உடல் நலக்குறைவால் இறந்தா

படம்
Wednesday, December 3, 2008 நடிகர், டான்ஸ் மாஸ்டர், இயக்குனர் பிரபுதேவாவின் மகன் மரணம் நடிகர், டான்ஸ் மாஸ்டர், இயக்குனர் பிரபுதேவாவின் மகன் விஷால் (13) உடல் நலக்குறைவால் இறந்தார். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 6 மாதங்களாக மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. ஆனால், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி விஷால் மரணம் அடைந்தார். விஷாலின் உடல் சென்னை ராஜாஅண்ணாமலைபுரத்தில் உள்ள பிரபுதேவாவின் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு நடிகர்கள் விஜய், பிரகாஷ்ராஜ், ஸ்ரீமன், அருண்பாண்டியன், ஆதித்யா, நடிகை குஷ்பு உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். பிரபு தேவா-லதா தம்பதிக்கு விஷால் தவிர ரிஷி, ராகவேந்திரா, ஆதி தேவா ஆகிய மகன்கள் உள்ளனர்.

மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் தொடங்கிய 9 மணி நேரத்துக்குப் பிறகுதான் பாதுகாப்புப் படையினர் அங்கு செல்ல முடிந்தது

படம்
மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய போது , தேசியப் பாதுகாப்புப் படை வீரர்களை விரைவாக அங்கு அனுப்ப அப்போது விமானம் இல்லை என்ற குற்றச்சாற்று எழுந்துள்ள நிலையில் , மத்திய போர்ப்படைக்காக 2 விமானங் களை விரைவில் வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது . முடிந்த அளவு விரைவில் அவை வாங்கப்பட்டு , துணைப் போர்ப் படை மற்றும் தேசிய பாதுகாப்புக் காவல்களின் பணிகளுக்குக் பயன்படுத்தப்படும் . எல்லைப் பாதுகாப்புப்படை இந்த விமானங்களைப் பேணிக் காக்கும் . இந்தப் போர்ப்படையிடம் மட்டுமே விமானப் படைப் பிரிவு உள்ளது . விமானங்கள் வாங்குவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன . இந்த விமானங்கள் அனைத்தும் டில்லி அருகே நிறுத்தப்பட்டி ருக்கும் . அவசரத் தேவை ஏற்படும் போது அவை அனுப்பி வைக் கப்படும் . மேலும் டில்லியில் அதிரடிப் படையினர் அருகிலேயே இருப்பதால் விமானங்களை குறிப்பிட்ட இடத்திற்கு விரைவில் கொண்டு செல்ல இயலும் என்று கருதப்படுகிறது . மும்பையில் பயங்கர...

இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான போரை நிறுத்திட பிரதமரிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனு

படம்
இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான போரை நிறுத்திட பிரதமரிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனு - இலங்கைப் போரில் கொடுமைக்கு உள் ளாக்கப்பட்டு வரும் தமிழர் களின் பிரச்சினையில் உடனடி யாகத் தலையிட்டு , தமிழர்க ளுக்கு எதிராக நடைபெற்று வரும் போரை நிறுத்தவும் , அவர்கள் கவுரவமாக வாழ் வதை உறுதி செய்யும் வகையில் , அவர்களது துயர்களைக் களைய மேலும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் மன் மோகன்சிங்கை நேற்று சந்தித்த தமிழகத்தைச் சேர்ந்த நாடா ளுமன்ற உறுப்பினர்கள் மனு ஒன்றை அளித்து வலியுறுத்தி னார்கள் . அந்த மனுவில் கூறப்பட் டுள்ளதாவது : இலங்கையில் இலங்கைத் தமிழர்கள் மீது நடத்தப் பட்டு வரும் கொடுமைகளுக்கு தீர் மானகரமானதும் , நிரந்தர மானதுமான அரசியல் தீர்வு காணப்படும் என்ற மிகுந்த நம்பிக்கையுடன் இந்த மனுவை பிரதமர் அவர்களிடம் சமர்ப் பிக்க தமிழ் நாட்டிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களா கிய நாங்...

பாக். தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கலாம்: அமெரிக்கா

படம்
மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகள்தான் முழுக்காரணம் என்பது உறுதியாக தெரிய வந்தால் , பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கலாம் . இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது என்று அமெரிக்கா அச்சம் தெரிவித்துள்ளது . இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகளின் பேச்சை மேற்கோள் காட்டி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் , இந்த தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு சம்பந்தம் இருப்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை . ஆனால் , அமெரிக்க உளவுப் பிரிவு மற்றும் தீவிரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகளின் கூற்றுப்படி , பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பாதான் மும்பை தாக்குதலுக்குக் காரணமாக இருக்க முடியும் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன . லஷ்கர் அமைப்புக்குத்தான் கடல் மார்க்கமாக ஊடுறுவும் திறமை உள்ளது . மும்பையில் நடந்த திட்டமிட்ட தாக்குதலைப் பார்க்கும்போது லஷ்கர் அமைப்புதான் இதைச் செய்திருக்க முடியும் என்று நம்புவதற்கு இடம் உள்ளது என்று தெரிவித்துள்ளனர்

டெஹல்கா.காம் இணையதளத்தின் ரகசிய ஆடியோ பதிவில் சிக்கியுள்ளார் வீரபாண்டி ஆறுமுகம்.

டெஹல்கா.காம் இணையதளத்தின் ரகசிய ஆடியோ பதிவில் சிக்கியுள்ளார் வீரபாண்டி ஆறுமுகம். இதுகுறித்து சிவில் உரிமை பாதுகாப்பு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சேலம் பஸ் நிலையம் அருகே அங்கம்மாள் காலனியில் 31 ஏழை மக்கள் வசித்து வந்த நிலத்தை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் அடியாட்கள் வெளியேற்றி அதை கைப்பற்றினார்கள். அந்த நிலத்தின் மதிப்பு 25 கோடி ரூபாயாகும். பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்காக எங்கள் மையம் அமைச்சர் மீது வழக்குத் தொடர்ந்து போராடி வருகிறது. இதில் இருந்து ஒதுங்கி செல்ல வேண்டும் என்பதற்காக சேலத்தைச் சேர்ந்த கூடுதல் துணை நீதிபதி மற்றும் கூடுதல் அரசு வழக்கறிஞர் ஆகியோர், அமைப்பின் பொதுச் செயலாளர் ஹரிபாபுவுடன் நடத்திய உரையாடலை டெகல்கா.காம் இணைய தளம் ரகசிய கேமரா மூலம் பதிவு செய்து அம்பலப்படுத்தி உள்ளது. அமைச்சர்களின் ஆட்களோடு சமரசம் செய்து கொண்டு, அங்கம்மாள் காலனி தொடர்பாக போடப்பட்ட வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று அவர்கள் கூறியது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. துணை நீதிபதியும், அரசு வழக்கறிஞர் ஒருவரும், ஹரிபாபுவுடன் நடத்திய உரையாடலை ரகசிய கேமரா மூலம் டெகல்கா.காம் பதிவு செய்துள்ளது. அபகரி...

கொக்கரக்கோ நாயகன் படத்தின் ரிசல்ட்டை கண்டு அதிர்ந்து போயிருக்கிறார்கள்.

படம்
கொக்கரக்கோ சத்தத்தில் கோடம்பாக்கத்தையே மிரட்டிய இயக்குனரும், அப்படத்தில் நடித்த ஹீரோவும் மேற்படி படத்தின் ரிசல்ட்டை கண்டு அதிர்ந்து போயிருக்கிறார்கள். போட்ட பணத்தில் பாதியை கூட வசூல் செய்யவில்லையாம் கொக்கரக்கோ! படத்தை நல்ல விலைக்கு தள்ளிவிட்டு ஒதுங்கிக் கொண்ட அப்படத்தின் தயாரிப்பாளர், இன்னும் கொஞ்ச நாளைக்கு பழைய தொழிலான விநியோகத்தையே பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம். இதற்கிடையில், கொக்கரக்கோ நாயகன் தன்னை தேடி வரும் தயாரிப்பாளர்களிடம், இப்போது வேண்டாம். சிக்ஸ் முகம் வந்ததும் அட்வான்ஸ் வாங்கிக் கொள்கிறேன் என்று திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கிறாராம். கொக்கரக்கோவுக்கு முன்பே கொண்டு வந்த அட்வான்சை வாங்கியிருக்கலாம். அப்போதும் இந்த படம் வரட்டும். வந்தபின் அட்வான்ஸ் வாங்கிக் கொள்கிறேன் என்றார். இப்போது சிக்ஸ் முகத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் ரிசல்ட்டாவது நல்லபடியாக அமையட்டும் என்கிறார்கள் கொக்கரக்கோவை வைத்து படம் இயக்க விரும்பும் தயாரிப்பாளர்கள். இதற்கிடையில் ஆணானப்பட்ட உச்ச நடிகர், உலக நடிகர், புதுக்கட்சி நடிகர் என்று எல்லாரையும் சோதனைக்...

பிள்ளையைக் கொடுப்பது கடவுள் செயல் என்றால், கள் ளத்தனமாகக் கூடி பிள்ளை களைப் பெறுகிறார்களே - அதற்கும் ஆண்டவன்தானே காரணம்?

படம்
நாட்டுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான சூழ்நிலையில் கூட அரசியல் ஆதாயம் தேடுவதற்காக அத னைப் பயன்படுத்திக் கொள் ளும் பாஜகட்சியின் போக்கைக் காங்கிரசுக் கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ள . உலகமே இந்திய நாட்டின் பக்கம் கவலையுடன் இருக்கும் போது பாஜக மட்டும் அரசைக் குறைகூறி வருகிறது . மும்பைத் தாக்குதல் தொடர்பாக மோச மான விளம்பரங்களை டில்லி செய்தித்தாள்களில் வெளியிடும் பாஜகட்சியையும் அதன் குஜ ராத் முதல் அமைச்சரையும் வன்மையாகக் கண்டித்துள் ளனர் . கலவரம் நடந்த நேரத் தில் எந்த ஒரு மாநில அர சையோ , மய்ய அரசையோ காங்கிரசு குறை கூறியது கிடை யாது . ஆனால் பிரதமர் கனவில் மிதக்கும் அத்வானி இதனைச் செய்கிறார் என்று மய்ய அமைச்சர் கபில் சிபில் கூறி யுள்ளார் . அக்ஷார்தம் கோயிலில் 2002 இல் நடந்த குண்டு வெடிப் பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகையை இதுவரை அளிக் காத குஜராத் முதல் அமைச்சர் மோடி இப்போது ஒரு கோடி ரூபாய் உதவி என அறிவித்திருப் பது வேடிக்கைதான் என்று வீரப்ப மொய்லி கூறியுள்ளார் . ...

தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடுகள் தீயைக் கக்கும் தலையங்கத்தைத் தீட்டி தம் ஆற்றாமையை வெளிப் படுத்திக் கொண்டன

படம்
1993 தேர்தலில் ஜனதா தளத் தேர்தல் அறிக்கை வெளிவந்தது . தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடு அதில் மிக முக்கியமாகக் குறிப் பிடப்பட்டு இருந்தது . பொறுக் குமா பார்ப்பனர்களுக்கு ? தினமணி , இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடுகள் தீயைக் கக்கும் தலையங்கத்தைத் தீட்டி தம் ஆற்றாமையை வெளிப் படுத்திக் கொண்டன . துரதிர்ஷ்ட வசமாக ஜனதா தளத்தின் தேர்தல் அறிக்கை நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் மீது கவனம் செலுத்தவில்லை . தனியார்த் துறைகளிலும் மண்டல் கமிஷனை அமல் படுத்தக் கோருவது பெரும் பான்மை மக்களை அந்நியப் படுத்தும் என்று எழுதியது தினமணி . பிற்படுத்தப்பட்ட மக்களும் , தாழ்த்தப்பட்ட மக்களும் பெரும் பாலான மக்கள்தானே . இந்த நிலையில் , தனியார்த் துறை களில் இட ஒதுக்கீடு என்பது எப்படி பெரும்பான்மை மக்களை அந்நியப்படுத்தும் ? வி . பி . சிங் பிரதமர் பதவியை விட்டு விலகினாலும் அதற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு , ஜனதா தளம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் மறக் காமல் - கொண்ட கொள்கை யில் சிறிதும் நழுவாமல் , தனி யார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடு என்ற சமூகநீதிக்கு...

இந்தியர்கள் ஒரு காலத்தில் குடிநீர் இல்லாமல் திண்டாட வேண்டி வரலாம்

படம்
இமாலயத்தில் உள்ள 3 முக்கியப் பனிமலைகளை குடைந்து பார்த்த போது அதில் பனி தொடர்ந்து இருப்பதற்கான கதிர்வீச்சு சமிக்ஞைகள் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது தற்பொழுது ஏற்பட்டுவரும் தட்பவெப்ப மாற்றங்களால் அங்கு பனி சேருவதில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், குறைந்தது அரை பில்லியன் (50 கோடி) இந்தியர்கள் ஒரு காலத்தில் குடிநீர் இல்லாமல் திண்டாட வேண்டி வரலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இல்லாமல் போன அந்தக் கதிர்வீச்சு அரை நூற்றாண்டுக்கு முன்னர் நடத்தப்பட்ட அணு குண்டு சோதனையின் விளைவாய் ஏற்படுவது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். திபெத்தில் உள்ள நைமோனான்யி போன்ற பனிமலைகளால்தான் சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா போன்ற நதிகள் வற்றாத ஜீவ நதிகளாக இருந்து வருகின்றன. இதே நதிகள், சில இடங்களில், சில மாதங்களில் தண்ணீர் இல்லாமல் வற்றியிருப்பதன் காரணமும் இதுவாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் பனிமலைகளில் புதிதாக பனி உருவாவதில்லை என்பது பிரச்சனைகளை மேலும் மோசமாக்கலாம் என்று ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் ஒஹையோ பல்கலைக் கழக புவியியல் வி...

ஈழத் தமிழர் போராட்டம் குறித்து 'குமுதம்' ரிப்போர்ட்டரில் தவறான தகவல்கள்

ஈழத் தமிழர் போராட்டம் குறித்து 'குமுதம்' ரிப்போர்ட்டரில் தவறான தகவல்கள் 'யுத்த சரணம்' எனும் தலைப்பில் திரு பா.ராகவன் என்பவரால் குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதப்பட்டு வரும் தொடர் தப்புத் தவறுமான தகவல்களை உள்ளடக்கமாகக் கொண்டு இருக்கிறது என்று ஆலமரம் என்ற இணைய தளத்தில் வெளிவந்துள்ள இக்கட்டுரை அம்பலப் படுத்தியுள்ளது படியுங்கள். பா.ராகவன் குமுதம் ரிப்போர்ட்டரில் எழுத தொடங்கியி ருக்கின்ற "யுத்தம் சரணம்" என்ற தொடர் பெருத்த ஏமாற்றத்தை யும், எரிச்சலையும் ஏற்படுத்துகிறது. இரண்டு பாகங்களே வெளியாகி இருக்கின்றன. அந்த இரண்டு பாகங்களும் பல தகவல் பிழைகளுடன், குழப்பங்களுடன் வெளியாகி உள்ளன. இத்தனைக்கும் இது இன்னும் 1948 நிகழ்வுகளுக்கோ, 1990க்கு முன்பான சூழலுக்கோ செல்ல வில்லை. கடந்த இரண்டு வருடங்களில் நிகழ்ந்த நிகழ்வுகள் குறித்து தான் இந்தத் தொடர் தற்பொழுது பேசுகிறது. அதிலேயே இத்தனை பிழைகள் என்றால் இலங்கையின் குழப்பமான ஆரம்பகாலம், போராளிக் குழுக் களுக்குள் நிகழ்ந்த சண்டை, இந்தியாவின் தலை...

ஈழத் தமிழர் போராட்டம் குறித்து 'குமுதம்' ரிப்போர்ட்டரில் தவறான தகவல்கள்

படம்
ஈழத் தமிழர் போராட்டம் குறித்து ' குமுதம் ' ரிப்போர்ட்டரில் தவறான தகவல்கள் ' யுத்த சரணம் ' எனும் தலைப்பில் திரு பா . ராகவன் என்பவரால் குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதப்பட்டு வரும் தொடர் தப்புத் தவறுமான தகவல்களை உள்ளடக்கமாகக் கொண்டு இருக்கிறது என்று ஆலமரம் என்ற இணைய தளத்தில் வெளிவந்துள்ள இக்கட்டுரை அம்பலப் படுத்தியுள்ளது படியுங்கள் . பா . ராகவன் குமுதம் ரிப்போர்ட்டரில் எழுத தொடங்கியி ருக்கின்ற " யுத்தம் சரணம் " என்ற தொடர் பெருத்த ஏமாற்றத்தை யும் , எரிச்சலையும் ஏற்படுத்துகிறது . இரண்டு பாகங்களே வெளியாகி இருக்கின்றன . அந்த இரண்டு பாகங்களும் பல தகவல் பிழைகளுடன் , குழப்பங்களுடன் வெளியாகி உள்ளன . இத்தனைக்கும் இது இன்னும் 1948 நிகழ்வுகளுக்கோ , 1990 க்கு முன்பான சூழலுக்கோ செல்ல வில்லை . கடந்த இரண்டு வருடங்களில் நிகழ்ந்த நிகழ்வுகள் குறித்து தான் இந்தத் தொடர் தற்பொழுது பேசுகிறது . அதிலேயே இத்தனை பிழைகள் என்றால் ...