இடுகைகள்

அமெரிக்கா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இங்கிலாந்து டிவி நடிகை ஜேட்கூடி மரணம்

இங்கிலாந்து டிவி நடிகை ஜேட்கூடி மரணம் பிரபல இங்கிலாந்து டிவி நடிகை ஜேட் கூடி புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தனது வாழ்நாளில் இறுதிக் கட்டத்தில் இருந்த அவர் இன்று மரணம் அடைந்தார்.  பிக் பாஸ் எனும் நிகழ்ச்சியின் மூலம் அவர் மிகவும் பிரபலமானார். ஜேட் கூடி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியை இனவெறியோடு திட்டியதாக சர்ச்சையில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜமாத் உத் தாவா;தங்களது அமைப்பின் பெயரை மீண்டும் மாற்றிக் கொண்டு செயல்பட எந்தத் தடையும் இல்லை

படம்
தீவிரவாத அமைப்புகளை தடை செய்வது, அதன் தலைவர்களை வீட்டுக் காவலில் வைப்பது போன்ற கண்துடைப்பு வேலைகள் எல்லாம் உதவாது. அந்த அமைப்புகளை அடியோடு ஒழித்துக் கட்டும் வேலைகளை பாகிஸ்தான் செய்ய வேண்டும் என அமெரிக்காவிடம் இந்தியா கூறியுள்ளது. டெல்லி வந்துள்ள அமெரிக்க துணை வெளியுறவு அமைச்சர் ஜான் நெக்ரோபாண்டேவிடம் பேசிய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இதைத் தெரிவித்தார். மேலும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலீஸ்ஸா ரைசுடனும் பிரணாப் தொலைபேசியில் பேசினார். அமெரிக்காவிடம் பிரணாப் விளக்கம்: அவர்களிடம், லஷ்கர் ஏ தொய்பாவின் இன்னொரு முகமான ஜமாத் உத் தாவாவின் தலைவர் ஹபீஸை கைது செய்து வீட்டுக் காவலில் வைப்பதாலோ, அதன் சில அலுவலங்களுக்கு சீல் வைப்பதாலோ மட்டும் நிலைமை மாறிவிடாது, அவர்கள் தங்களது அமைப்பின் பெயரை மீண்டும் மாற்றிக் கொண்டு செயல்பட எந்தத் தடையும் இல்லை என்பதை முகர்ஜி சுட்டிக் காட்டினார் . தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கர மேனன் ஆகியோரையும் நெக்ரோபாண்டே சந்தித்துப் பேசினார். ஜெர்மன் அமைச்சர் வருகை: இதற்கிடையே ஜெர்மன் உள்துறை அமைச்சர்...

மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் ;பாகிஸ்தான்

படம்
மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் என பாகிஸ்தான் அதிகாரிகள் தன்னிடம் ஒப்புக் கொண்டதாக அங்கு உயர் மட்ட ஆலோசனைகள் நடத்திவிட்டு இந்தியா வந்த அமெரிக்க முப்படைகளின் கூட்டுத் தளபதியான அட்மிரல் மைக்கல் முல்லன் கூறியுள்ளார் . பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆண்டனி மற்றும் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் எம் . கே . நாராயணனிடம் முல்லன் இந்தத் தகவலைத் தெரிவித்ததாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கி்ன்றன . பாகிஸ்தானில் அவர் அதிபர் சர்தாரி , ராணுவத் தளபதி , ஐஎஸ்ஐ தலைவர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியது குறிப்பிடத்தக்கது . அப்போது மும்பையைத் தாக்கிய தீவிரவாதிகள் தங்கள் நாட்டினர் அல்ல என அவர் கூறினர் . ஆனால் , அவர்கள் பாகிஸ்தானியர்கள் தான் என்பதற்கான பல ஆதாரங்களை முல்லன் காட்டியதையடுத்து அவர்கள் தங்கள் நாட்டரவே என்றும் அவர்கள் அனைவரும் லஷ்கர் ஏ தொய்பாவினரே என்றும் அந் நாட்டு ராணுவ , ஐஎஸ்ஐ அதிகாரிகள் ஒப்புக் கொண்டுவிட்டனர் . இந்தத் தகவலை டெல்லி வந்த அவர் ஆண்டனி , ...