இடுகைகள்

பொது லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அடுத்த இரண்டு ஆண்டுகளில் 25 லட்சம் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று, அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கபட்டுள்ள பராக் ஒபாமா அறிவித்துள்ளார்.

படம்
வாஷிங்டன் : அமெரிக்காவில் நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அடுத்த இரண்டு ஆண்டுகளில் 25 லட்சம் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று , அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கபட்டுள்ள பராக் ஒபாமா அறிவித்துள்ளார் . இது சம்பந்தமாக நேற்று வாஷிங்டன்னில் வெளியிட்டுள்ள குடியரசு கட்சியின் வாராந்திர அறிக்கையில் ஒபாமா கூறியிருப்பதாவது: அமெரிக்காவில் நிலவும் பொருளாதாரம் மீண்டும் சரியாமல் இருப்பதற்கு , விரைவும் , துணிவும் மிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் . இதற்காக அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளில் 25 லட்சம் பணியிடங்களை உருவாக்குவதற்கான திட்டங்களை தயாரிப்பதற்கு எனது ஆலோசகரிடம் தெரிவித்துள்ளேன் . இந்த திட்டம் ஒரேயடியாக செயல்படுத்த முடியாது . இது ஒரு நீண்ட கால திட்டமாகும் . இந்த திட்டத்தினால் குறுகிய காலத்திற்கு அல்லாமல் நீண்ட காலங்கள் பொருளாதாரத்தை பிடித்து நிறுத்துவதாக அமையும் . பொருளாதார சரிவை மீட்பதற்கு கடுமையான தடைகளை எதிர் கொள்ளவேண்டும் . அதற்குறிய அடிப்படை திட்டங்களை தயார் செய்யுங்கள் என்று உத்தரவிட்டுள்ளேன் . இந்த திட்டங்களால் நல்ல வளர்ச்ச...

எட்டாம் வகுப்பு படிக்கும் மகனின் முயற்சியால், அந்த பெண்ணிடம் இருந்து உடல் உறுப்புகள்தானமாக பெறப்பட்டன.

படம்
தாயிடம் இருந்து கண் , சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன . எட்டாம் வகுப்பு படிக்கும் மகனின் முயற்சியால் , அந்த பெண்ணிடம் இருந்து உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன . கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் யூனியன் வெள்ளையக் கவுண்டம் பட்டியைச் சேர்ந்த தச்சு தொழிலாளி மருதை (39). அவரது மனைவி சாந்தி (32). அவர்களுக்கு சுரேஷ்குமார் (14) என்ற எட்டாம் வகுப்பு படிக்கும் மகனும் , கோமதி (7) என்ற இரண்டாம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர் . கடந்த நான்கு நாள் முன்னர் சாந்திக்கு காய்ச்சல் , தலைவலி ஏற்பட்டது . திருச்சி சூப்பர் பஜார் ஜி . வி . என் ., மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் . அவருக்கு மூளைக்காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு , மேல்சிகிச்சைக்காக , ஏ . பி . சி ., தனியார் மருத்துவமனையில் சேர்ந்தனர் . பரிசோதித்த டாக்டர்கள் , சாந்தி மூளைச்சாவு நிலையை அடைந்து விட்டார் என்று தெரிவித்தனர் . " சாந்தியை உயிரோடு பார்க்க முடியாது ' என்று அவரது குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்தனர் . அவரது மகன் சுரேஷ்குமார் , "...

பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி ;கல்லூரி வளாகத்தில் ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் சுமார் 200 வகையான மூலிகைச் செடிகளை உடைய மூலிகைப் பண்ணை

படம்
பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி : தமிழர் தலைவர் தலைமையில் தனித்தன்மையோடு மருந்தியல் துறையில் மகத்தான சாதனை! பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் கீழ் இயங்கும், பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரியானது சமூக சீர்திருத்த சிற்பி பெரியார் அவர்களின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு, பெண்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்தையே மூச்சாகக் கருதும் நிறுவனர் தமிழர் தலைவர் டாக்டர்.கி.வீரமணி அய்யா அவர்களின் வழி காட்டுதலின் பேரில், கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் முன்னேற்றத்திற்காக 1982 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பெண்களுக்காக இந்நாட்டில் முதன் முறையாகத் தொடங்கப்பட்ட இம் மருந்தியல் கல்லூரி தொடர்ந்து 25 ஆண்டுகள் சாதனை புரிந்து இன்று வெள்ளி விழா கொண்டாடுவதில் பெருமிதம் கொள்கிறோம். இயற்கை எழில் நிறைந்த சூழலில் 7 ஏக்கர் நிலப்பரப்பில் திருச்சிராப்பள்ளியின் ...