இடுகைகள்

பாரதிராஜா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிரபாகரன் என்ற பெயரை சொல்லக்கூடாதா? எனது நாக்கை வெட்டிக் கொள்வேனடா திரைப்பட இயக்குனர் பாரதிராஜா

படம்
ஈழத்தமிழர் இன்னல் நீங்க போர் நிறுத்தம் ஒன்றே தீர்வு என்ற தலைப்பில் புதுச்சேரியில் கருத்தரங்கு நடந்தது. இதில் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா கலந்து கொண்டு பேசினார். அவரது உரை வருமாறு- மனித இனம் அழிந்து கொண்டுள்ளது. நீ இறையாண்மையை பற்றி பேசிக் கொண்டிருக்கிறாய். புலியை காப்பாற்ற பாம்புகளும் , கழுதைகளும் தேவையில்லை. ஈவெரா இருந்தால் பாம்பை அடையாளம் காட்டியிருப்பார். புலிக்கு இடைஞ்சல் பண்ணாதே. இலங்கை தமிழர்கள் தற்காத்துக் கொள்வதற்காக போரிட்டுக் கொண்டுள்ளனர். பிரபாகரனின் பெயரை சொல்லாதே என்கின்றனர். ஓர் இனத்தை உலகம் முழுவதும் அடையாளம் காட்டியவன். வீரமானவன். அவனது பெயரை உச்சரிக்க கூடாது என்றால் எனது நாக்கை வெட்டிக் கொள்வேனடா. பிரபாகரன் என்ற பெயரை சொல்லக்கூடாதா? ஒரு வீரனின் வீரன் என்று சொல்லக் கூடாதா? என்னை மிரட்டாதீர்கள். ஈழத்தமிழர்கள் பிரச்சனை பற்றி பேசினால் இறையாண்மை போய்விடும் என்கிறார்கள். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு கர்நாடக அமைச்சகம் எதிர்ப்பு தெரிவிப்பது இறையான்மைக்கு எதிரானது இல்லையா? முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் இன்னும் பேசிக் கொண்டி...