எங்கே போனே செல்லம்? காத்திருக்கும் விஜய்
எங்கே போனே செல்லம்? காத்திருக்கும் விஜய் காலம் மட்டுமல்ல, கால்ஷீட்டும் பொன் போன்றது என்பதை பிறருக்கு உணர வைத்தவர் பிரகாஷ்ராஜ். ஒரு விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த எஸ்.ஏ.சந்திரசேகர், பிரகாஷ்ராஜ் டேட்ஸ் கிடைக்கறது பெரிய விஷயம். அவரோட டேட்ஸ் கிடைச்சிருப்பதால் நான் சீக்கிரம் போயாகணும் என்று பாதியிலேயே ஓடினார் தான் இயக்கிக் கொண்டிருந்த பந்தயம் படப்பிடிப்பை தொடர! பிரகாஷ்ராஜின் சொந்தப்படமான வெள்ளித்திரையை இயக்கிய டைரக்டரும், வசனகர்த்தாவுமான விஜி, இவரது கால்ஷீட் சொதப்பலால் மனம் நொந்து சாபம் விட்டதெல்லாம் தமிழ் சினிமாவின் சந்து பொந்துகள் கூட அறிந்த சங்கதி. இவ்வளவு ஏன்? தற்போது இவரது தயாரிப்பில் உருவாகி, விரைவில் வெளியாக இருக்கும் ‘அபியும் நானும்’ படப்பிடிப்புக்கே இவர் ஒழுங்காக வராமல் படமே தாமதமாகி தள்ளிப் போய் கொண்டிருக்கிறது. இப்படி தன் படங்களுக்கே தண்ணி காட்டும் பிரகாஷ், ஊரார் படங்களுக்கு உடுக்கடிக்க மாட்டாரா என்ன? வில்லு படத்தில் இவரும் விஜயும் சேர்ந்து வரும் காட்சிகள் சுமார் 20 நாட்கள் படம் பிடிக்க வேண்டுமாம். கொடுத்திருந்த தேதிகளில் ...