இடுகைகள்

பெரியார் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

செய்தி தரும் சிந்தனை பக்தி வந்தால் - புத்தி மட்டுமல்ல வேலையும் போய்விட்டது

படம்
செய்தி தரும் சிந்தனை பக்தி வந்தால் - புத்தி மட்டுமல்ல வேலையும் போய்விட்டது பொது மருத்துவமனையில் இரண்டுபேர் மருத்துவத்திற்காகச் சேர்க்கப் பட்டனர் . ஒருவர் வேலூர் கிருஷ்ணமூர்த்தி , மற்றவர் வங்காளத்தைச் சேர்ந்த தபஸ்பால் . மருத்துவம் பலனின்றி இருவரும் 23 ஆம் தேதி இறந்துவிட்டனர் . மறுநாள் திங்கள்கிழமை காலை 8 மணிக்கு வங்காளத்து தபஸ்பாலின் உறவினர் சத்யஜித்பால் உடலை வாங்க வந்தார் . பிண வறையில் அடையாளம் காட்டிவிட்டு வெளியே வந்தார் . முழுவதும் மூடப்பட்ட பிணம் ஒப் படைக்கப்பட்டது . எடுத்து சென்று எரித்து விட்டார் . இரண்டு மணிநேரம் கழித்து வேலூர் கிருஷ்ணமூர்த்தியின் மகன்கள் வந்தனர் . அடையாளம் காட்டப் பிணவறைக்குச் சென்றனர் . பிணத்தைக் காணவில்லை . பதறிப் போன மருத்துவமனை ஊழியர்கள் ஏதோ சந்தேகத்தில் சத்யஜித் பாலிடம் விசாரித்தனர் . உடலை உடனே எரித்துவிட்டதை அவர் சொல்லிவிட்டார் . ஆக வேலூர் கிருஷ்ணமூர்த்தி வங்காள...

காவிக்கு வழியில்லை என்றால், வடநாடாக இருந்தால் கோவணம், கோவணமும் கிடைக்கவில்லையென்றால் - உச்சக் கட்டம் - நிர்வாண சாமியார்

படம்
மத தீவிரவாத சக்திகளான ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார்க் கும்பலை நாட்டில் நடமாட விடாதீர்கள். இதில் கட்சி வேற்றுமை இருக்கக் கூடாது. மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார். சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு: சாமியார் பெயரை மாற்றிக் கொண்டு சாமியார் என்றாலே போலிதான். இதில் போலிச் சாமியார் என்று சொல்லவேண்டிய அவசியம் இல்லை. சாமியார் ஆசிரமம் நடத்துவதாக சொல்லிக்கொண்டு பெயரை மாற்றிக் கொள் கின்றான். யார் மகந்த் என்று கேட்டால் அமிர்தானந்த். நம்ம ஊர் மஞ்சக்குடி அய்யர் எப்படி தயானந்த சரஸ்வதி ஆனார்கள் பாருங்கள் - அதுமாதிரி - இவர் யார்? தயானந்த பாண்டே வடநாட்டுப் பார்ப்பனர். இவருடைய பெயர் என்...

கலைஞர் குடும்பத்தில் ஏற்பட்ட பிளவுகள் அகன்றது என்ற சேதி நாட்டுக்கும், திராவிட இயக்கத்துக்கும் பயன் தருவதாகும்

படம்
கலைஞர் குடும்பத்தில் ஏற்பட்ட பிளவுகள் அகன்றது என்ற சேதி நாட்டுக்கும், திராவிட இயக்கத்துக்கும் பயன் தருவதாகும் பிறந்த நாளில் யாம் பெற்ற பேறு - இன்பம் இதுவே! தமிழர் தலைவர் விடுத்துள்ள பிறந்த நாள் சேதி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் தம் பிறந்த நாள் செய்தியாக அளித்துள்ள அறிக்கை வருமாறு: எனக்கு இன்று 76-வது பிறந்த நாள். வயது ஏறுவது இயற்கை; வாழ்க்கையை லட்சிய நோக்கோடு வாழ்வதுதான் முக்கியம். தனக்கு மட்டுமே வாழ்க்கை என்றெண்ணாது சமுதாயத்திற்காக அதன் முன்னேற்றத்திற்கும் உழைப்பதே உயர் தனிக்குறிக்கோள் என்று கருதி வாழ்வதே பயனுறு வாழ்வு என்பதை நம் அறிவுக்கு தந்தை பெரியார் போதித்ததோடு, சாதித்தும் வாழ்ந்தும் காட்டியுள்ளார். அய்யாவிடம் கற்ற பாடம் அவர்தம் தொண்டர்களுக்குத் தொண்டனான தோழனான எனது வாழ்க்கையும் அவர்கள் விட்ட பணி தொடருவதே குறிக்கோள் என்ற அடிப்படையிலேய...

படிப்பது - பகுத்தறிவை வளர்ப்பதற்கேயன்றி, பிளவுபடுத்தும் ஜாதிச் சாக்கடையில் வீழ்வதற்கல்ல!

படம்
படிப்பது ஜாதியை வளர்ப்பதற்கல்ல ! சென்னை சட்டக்கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் ஜாதி அடிப்படையில் நடந்த மோதல்கள் உள்ளபடியே வெட்கப்படத் தக்கதாகும் . எதிர்கால உலகைப் படைக்கக்கூடியவர்கள் என்று கணிக்கப்படக்கூடிய மாணவர்கள் - அதுவும் சட்டம் படிக்கும் மாணவர்களின்அறிவு எந்தத் தரத்தில் இருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கும்பொழுது வெட்கமும் , வேதனையும் கலந்து நம்மைத் தாக்குகின்றன ; தலையைத் தொங்கப் போடவும் வைக்கிறது . தாழ்த்தப்பட்ட மாணவர்களும் , பிற்படுத்தப்பட்ட மாணவர் களும் கல்வி , வேலை வாய்ப்புகளில் வாய்ப்புகள் அளிக்கப்பட்டு வளர்ச்சிப் பாதையில் புலிப் பாய்ச்சலாக அமையவேண்டும் என்பதற்காக தந்தை பெரியார் பாடுபட்டார் . அவர் கண்ட இயக்கம் அன்று முதல் இந்தச் சமூக விழிப்புணர்வுப் பணியினைத் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறது . தாழ்த்தப்பட்டவர்களும் சரி , பிற்படுத்தப்பட்டவர்களும் சரி , பார்ப்பனிய வருணாசிரம அடிப்படையில் உரிமைகள் மறுக்கப்பட்டவர்கள்தாம் . கல்விப் பக்கம் அவ...

,கொடிய நோய்களால் பாதிக்கப்படுபவர் களிடம் சூனியம்தான் கார ணம் என்ற மூட நம்பிக்கை அதிகரித்துள்ளது

படம்
வழிகாட்டுகிறது அசாம் அரசு : சூனியம் மூடநம்பிக்கையை எதிர்த்து பள்ளியில் பாடம் : சூனியம் குறித்து மக்களிடம் உள்ள மூட நம்பிக்கையை நீக்கும் வகையில் அது பற்றி தொடக்கப்பள்ளி பாடத்திட்டதில் பாடமாக சேர்க்க வேண்டும் என்ற தேசிய பெண்கள் கமிஷன் யோச னையை அசாம் அரசு ஏற்றுக் கொண்டுள்ளது . சூனியம் வைக்கும் பெண் கள் என்று சந்தேகிக்கப்படுப வர்களை பலர் சேர்ந்து அடித்து கொன்ற சம்பவங்கள் , வடமாநிலங்களில் அடிக்கடி நடக்கும் ஒரு நிகழ்ச்சியாகவே மாறிவிட்டது . அந்தளவுக்கு சூனியம் என்றாலே அந்த மக்களுக்கு பயம் . குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் இந்த மூட நம்பிக்கை அதிகம் உள்ளது . அசாம் மக்களிடமிருந்து இந்த மூட நம்பிக்கையை அகற்றும் வகையில் , தொடக்க கல்வி பாடத்திட்டத்தில் சூனி யம் பற்றிய பாடத்தை சேர்க்க வேண்டும் என்று தேசிய பெண்கள் கமிஷன் வலியுறுத் தியது . தேசிய பெண்கள் கமிஷன் உறுப்பினர் நீவா கொன்வார் கூறுகையில் , தொற்று நோய் போல் சூனியம் பற்றிய மூட நம்பிக்கையும் மக்களிடம் வேகமாக பரவி வருகிறது . இத...

பெரிய பெரிய ஆயுதங் களையும், இயந்திரங்களை யும், மோட்டார்களையும் கண்டுபிடித்த அயல் நாடு களில் ஆயுத பூசை இல்லையே ஏன்?

படம்
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜைகளால் பலன் உண்டா? சரஸ்வதி பூசை என்பது ஒரு அர்த்தமற்ற பூசையாகும். கல்வியையும், தொழிலையும் மையமாக வைத்து ஒரு பெண்ணை தெய்வமாக்கி அதற்கு சரஸ்வதி என்று பெயரிட்டு அதை பூசை செய் தால் நாம் கல்வியை அதிக மாக கற்கவும், பெரிய பதவி களில் உயரவும் முடியும் என சொல்லி நம்மை பார்ப்பனப் பதர்கள் ஆண்டாண்டாய் ஏமாற்றி வந்தனர். கல்வியினை கற்க சொந்த முயற்சி எடுத்துக் கொள்ளா மல் கடவுளை (கல்லை) நம்பிக்கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு, நாம் அந்த சாமியின் பேராலும், பூசையின் பேராலும் கொடுக்கும் பணத் தைக் கொண்டே நம்முடைய உழைப்பை கொண்டே பார்ப்பனர்கள் படித்து பெரிய படிப்பாளியாகிக் கொண்டு நம்மை படிப்பு வராத மக்கு கள் என சொல்லிக் கொண்டு இருக்கின்றனர். இந்த சரஸ்வதி பூசை கொண்டாடும் பக்தர்களே, மாணவ - மாணவியரே, சற்று சரஸ்வதி எனும் சாமியின் சொந்த யோக்கியதையைக் கவனித்தால் அவை பார்ப் பனர்களின் புராணக் கதை களின் படியே மிக மிக ஆபாச மானதாகும். அதாவது...

சுயமரியாதை இயக்கம் தொடங்குவதற்கு முன் பெரியார் வகித்த கவுரவப் பதவிகள்

படம்
சுயமரியாதை இயக்கம் தொடங்குவதற்கு முன் பெரியார் வகித்த கவுரவப் பதவிகள் 1. 1915 -1919 ஈரோடு - வியாபார சங்கத் தலைவர் 2. தெ.இ. வியாபாரச் சங்க நிர்வாக சபை அங்கத்தினர் 3. 5 - ஜில்லாகளுக்கு இன்கம்டாக்ஸ் டிரிபியூனல் கமிஷனர் 4. ஈரோடு டவுன் ரீடிங்ரூம் செக்ரட்டரி. 5. பழைய மாணவர் சங்க செக்ரட்டரி 6. ஹைல்கூல் போர்டு செக்ரட்டரி 7. ஹைஸ்கூல் போர்டு தலைவர் 8. 1914 - கோவை ஜில்லா காங்கிரசு மாநாடு செக்ரட்டரி 9. 10 ஆண்டுகள் ஆனரரி மாஜிஸ்ரேட் 10. ஈரோடு தாலுக்கா போர்டு பிரசிடென்ட் 11. ஈரோடு முனிசிபல் சேர்மன் 12. ஜில்லா போர்டு மெம்பர் 13. வாட்டர் ஒர்க்ஸ் கமிட்டி செக்ரட்டரி 14. பிளேக் கமிட்டி செக்ரட்டரி 15. கோவை ஜில்லா 2-வது சர்க்கிள் தேவஸ்தான கமிட்டி செக்ரட்டரி - 10-ஆண்டு 16. கோவை ஜில்லா தேவஸ்த...

ஆன்மீகம் அழியாதது - கடவுளுக்குச் சம்பந்தப்பட்டது என்றால், அதன்பேரில் இதழ்களை ஏராளமாக நடத்துவது ஏன்?

படம்
ஆசிரியர் விடையளிக்கிறார் கேள்வி : தீவிரவாதத்துக்கு மதம் கிடையாது என்று எல்.கே. அத்வானி கூறியுள்ளதுபற்றி.. -தி. அருணா, ஏலகிரி பதில் : அடேடே அத்வானிஜி எப்போது இதைக் கண்டு பிடித்தார்? நாடாளுமன்றத் தேர்தலில் இஸ்லாமியர் வாக்குகளை வாங்குவதற்கு இப்படி ஒரு தந்திரப் பேச்சா? கேள்வி : தாழ்த்தப்பட்டவர்களுக்கும் கிரிமிலேயர் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கூறியிருக்கிறாரே? -ம. செங்கமலம். எலந்தங்குடி பதில் : ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நீதிக்கு அவரது பங்களிப்பு இதுதானா? வேதனை, வேதனை! பொருளாதார அடிப்படை கூடாது என்பது அரசியல் சட்டப்படி உள்ள நிலை. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும்கூட. அப்படி இருந்தும் அவரே இப்படி சட்ட விரோதமாகப் பேசலாமா? கேள்வி: ஈழத்தில் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள கொடுமைபோல, வெளி நாடுகளில் சீக்கியர்களுக்கும், வங்காளிகளுக்கும் நடந...

விடுதலைப்புலிகளைப்பற்றி வாய் கிழிய முழங்கும் அறிக்கை அரசி நமது நாட்டின் இராணுவத்தையே இந்து மயமாக்கும் கொடுமை கண்டு வாய் திறக்காதது ஏன்? ஏன்? ஏன்?

படம்
இன்றைய கேள்வி ? ஏன் ? ஏன் ? ஏன் ? அப்பாவிகளான ஈழத் தமிழர்கள் சிங்கள இராணுவ குண்டு மழையிலிருந்து காப்பாற்றப்படவேண்டும் ; சொந்த மண்ணிலேயே அம்மக்கள் ஏதிலிகளாகி , காடுகளிலும் , வனாந்தரங்களிலும் பசி , பட்டினியோடு நாளும் செத்துக் கொண்டுள்ள நிலையில் , போர் நிறுத்தம் ஏற்படவும் , தமிழர்களுக்கு நிவாரண உதவி போய்ச் சேரவேண்டு மென்றும் குரல் கொடுத்தால் , அப்படிப் பேசுகிறவர்கள் அனைவரும் விடுதலைப்புலிகளின் தீவிரவாதத்திற்குத் துணை போகிறவர்கள் என்று அறிக்கை விடும் அறிக்கை அரசி ஜெயலலிதா அவர்கள் கடந்த இரு வாரங்களுக்கு மேல் மகாராட்டிரத்தில் மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்தையொட்டிய புலன் ஆய்வில் , இந்துத்துவ , ஆர் . எஸ் . எஸ் . சாமியார் சாத்வி பிரக்யாக்சிங் , இராணு வத்தின் முக்கிய பொறுப்பிலிருந்து பல்வேறு வெடிகுண்டு பயிற்சிப் பாசறைகளை நடத்திய லெப்டினன்ட் கர்னல் புரோகித் , மகந்த் என்ற பெயரில் உலவி இந்து இராணுவப் பயிற்சி அளித்த தயானந்த் பாண்டே என்ற பார்ப்பனர் போன்றவர்களின் தீவிரவாதங்கள் பகல் வெளிச்சம்போல் தெர...

இந்து மிலிட்டரி ஸ்கூல் நடத்தி இந்தியாவில் இந்து மதப் போர்வையில் தீவிரவாதிகளைத் தயாரித்து அனுப்புகிறார்கள்.

படம்
நாடெல்லாம் பரவ வேண்டும்; வீடெல்லாம் பேசவேண்டும்; ஏடெல்லாம் எழுதவேண்டும் வன்முறை - வெடிகுண்டு கலாச்சாரம் கொண்ட மதவெறிச் சக்தியோடு யார் கூட்டு சேர்ந்தாலும் அவர்களை அடையாளங்கண்டு அரசியலில் காணாமல் போகச் செய்வோம்! சென்னை கூட்டத்தில் தமிழர் தலைவர் அறைகூவல் - வன்முறை, வெடிகுண்டு கலாச்சாரம் கொண்ட மதவெறிச் கும்பலோடு எந்த அரசியல் கட்சி கூட்டு சேர்ந்தாலும் அவைகளை மக்களுக்கு அடையாளம் காட்டி புறந்தள்ளுவோம். அவர்கள் அரசியலில் காணாமல் போவர் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார். சங் பரிவார்க் கும்பலும் - வெடிகுண்டு கலாச்சாரமும் என்ற தலைப்பில் சிறப்புக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் - நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் 20.11.2008 அன்று இரவு 7 மணிக்குத் தொடங்கி சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்த...

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேசினாலே அவர்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்ட நிலை கடந்த அ.தி.மு.க ஆட்சியில் இருந்தது.கி.வீரமணி பிரத்யேக பேட்டி

படம்
கி.வீரமணி பிரத்யேக பேட்டி கலைஞர் அரசு இருப்பதால்தான் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுக்க முடிகிறது! -திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பிரத்யேக பேட்டி பெயர்தான் பெரியார் திடல். ஆனால், பெரியார் என்ற முத்தை தன்னகத்தே கொண்டுள்ள கடல் அது! அங்கே அய்யாவின் கனவை நிறைவேற்றும் நவீன தொழிற்சாலையாக பணிகளை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள் அவரின் பக்தர்கள். அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக அய்யாவின் கொள்கைகளை பாதுகாத்துக் கொண்டிருக்கிற திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி அவர்களை சந்திக்க காத்திருக்கிறோம். ஐந்து நிமிடத்தில் தரிசனம் கொடுக்கிறது அந்த கருப்பு சூரியன்! எல்லா கேள்விகளுக்கும் முகம் சுளிக்காமல் வந்து விழுகின்றன கூர்மையான பதில்கள். இந்து முன்னணி தலைவர் இராம.கோபாலன் முதல்வர் கலைஞரை சந்தித்து கீதை நூலை கொடுத்தார். அப்போது கலைஞர், நீங்கள் எழுதிய கீதையின் மறுபக்கம் நூலை கொடுத்து அவரை படிக்க சொன்னார். பகுத்தறிவு தொடர்பான எத்தனையோ நூல்கள் இருக்க, குறிப்பாக நீங்கள் எழுதிய புத்தகத்தை கலைஞர் கொடுத்தது உங்...

சென்னையில் இருப்பதால், மக்கள் விரோத ஏடான இந்து ஆங்கில நாளிதழ் எந்தவிதப் பெருமையையும் கொண்டாட முடியாது

"இந்து" ஆங்கில நாளிதழைவிட வேறு எவராலும் சென்னையை அதிகமாகக் கெடுக்க முடியாது சென்னையில் இருப்பதால், மக்கள் விரோத ஏடான இந்து ஆங்கில நாளிதழ் எந்தவிதப் பெருமையையும் கொண்டாட முடியாது. சென்னை- அரசு பொது மருத்துவமனையில் புரட்சிக் கவிஞர் கனக சுப்புரத்தினம் (பாரதிதாசன்) இறந்தபோது, இந்த நாளிதழ் அச்செய்தியை இறப்புச் செய்திகள் என்ற தலைப்பில் பிரசுரித்தது. பிற்படுத்தப்பட்ட ஜாதியில் பிறந்த ஒரு கவிஞர் மீது அவ்வளவு வெறுப்பு இதற்கு. பழைய மவுண்ட் ரோடு என்ற பெயர் அண்ணா சாலை என்று மாற்றப்பட்டபோது, இந்து நாளேடு தனது இதழில் எந்த இடத்திலும் அண்ணா சாலை என்ற முகவரியைக் குறிப்பிட்டதே இல்லை. அதற்கு பதிலாக தி இந்து, சென்னை-2 என்றே குறிப்பிட்டு வருகிறது. போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால், நடைபாதைக் கோயில்கள் அனைத்தையும் அகற்றவேண்டும் என்று முன்னாள் சென்னை மாநகர மேயர் வேலூர் நாராயணன் உத்தரவிட்டபோது, இந்த நாளிதழ் இந்த முயற்சிக்கு எதிராக நின்றதுடன், ஏதுமறியா மக்களிடையே மத உணர்வுகளைத் தூண்டும் விதத்தில் செய்திகளை வெளியி...

பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் கல்வித் திட்டத்தில் வரலாற்றுத் தவறுகள் ஆர்.எஸ்.எஸ். பள்ளிகளின் அபாயகரப் போக்கு!

ஆர்.எஸ்.எஸ். பள்ளிகளின் அபாயகரப் போக்கு! காலங்கடந்தாலும் மிக முக்கியமான செயலில் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சரகம் இறங்கியுள்ளது வரவேற்கத்தக்கதாகும். ஆர்.எஸ்.எஸ். நாடு தழுவிய அளவில் ஆயிரக்கணக்கான பள்ளிகளை நடத்தி வருகிறது. சரசுவதி சிசு மந்திர், பிரகாஷன், வித்யா பாரதி போன்ற பெயர்களில் இவை நடத்தப்படுகின்றன. இந்தக் கல்வி நிறுவனங்களில் வரலாறுகளை திரித்து, மாணவர்கள் மத்தியில் இந்துத்துவா வெறியைத் திணிக்கும் வகையிலும் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள்மீது வெறுப்பு நச்சு விதைகளை ஊன்றும் வகையிலும் பாடத் திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்ற குற்றச்சாற்றுகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களால் எழுப்பப்பட்டன. இதன் அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் கல்வி நிறுவனங்களின் பாடத் திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்குமாறு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு அர்ஜூன்சிங் ஆணை பிறப் பித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். பள்ளிகளில் ஏதோ இப்பொழுதுதான் இந்த வகையில்...

"சங்கராச்சாரியாரின் விலை என்ன? "கத்தரிக்காய், புடலங்காய், வெங்காயம் வாங்குவதுபோல

"சங்கராச்சாரியாரின் விலை என்ன? " கடைகளில் கத்தரிக்காய், புடலங்காய், வெங்காயம் வாங்குவதுபோல சங்கராச் சாரி பதவியையும் விலைக்கு வாங்கலாம் என்று சொன் னால், சொல்கின்றவர்களைப் பார்த்து நகைப்பார்கள்தான். உண்மையைத் தெரிந்து கொண்டால், முதலில் நகைத் தற்காக வெட்கப்படவே செய்வார்கள். மாலேகான் குண்டுவெடிப் பில் சம்பந்தப்பட்டுள்ள தயா னந்த பாண்டே என்பவர் யார் தெரியுமா? எட்டு ஆண்டுகளுக்கு முன் இந்திய இராணுவத்தில் விமானப் படையில் பணி யாற்றியவர். அதன்பின் வாரணாசிக்கு (காசிக்கு) வந்தார் - சுற்றுமுற்றும் பார்த் தார். சாமியார் தொழில் நல்ல வளமான தொழில் என்பதை உணர்ந்தார். சபலம் தட்டியது. என்ன செய்தார் தெரி யுமா? வாரணாசியில் உள்ள ஒரு மடத்துக்கு ரூபாய் 15 லட்சம் கொடுத்து அந்த மடத்தின் சங்கராச்சாரியார் பதவியை விலைக்கு வாங்கி விட்டாராம்! சங்கராச்சாரி பதவி என்றால், ஏதோ விலை மதிக் கப்பட முடியாத பெரும் பதவி யல்ல; விலைக்கு வாங்கக் கூடிய கத்திரிக்காய் போன் றதுதான் என்பது இதன் மூலம் வி...