இப்போதைக்கு மதில் மேல் பூணையாய் இருக்கிறது சிறுத்தைகளின் நிலை
: அதிமுக கூட்டணிக்கு விடுதலைச் சிறுத்தைகளை இழுக்க பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தீவிரமாக இறங்கியுள்ளார். மீண்டும் திருமாவளவனுடன் அவர் இதுகுறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். தமிழக லோக்சபா தேர்தல் படு சூடாக இருக்கிறது. இதற்குக் காரணம், பாமக, தேமுதிக ஆகிய இரு முக்கிய கட்சிகளும் தங்களது நிலைப்பாட்டை இதுவரை தெளிவாக அறிவிக்காததே. இதன் காரணமாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளும் தங்களது கூட்டணியை இன்னும் இறுதி செய்ய முடியவில்லை. ஆனால் தற்போது பாமக ஒரு முடிவுக்கு வந்து விட்டதாக தெரிகிறது. அதிமுகவுடன் அணி சேரும் முடிவுக்கு ஒரு வழியாக பாமக வந்துள்ளதாக தெரிகிறது. அந்தக் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்படவுள்ளதாகவும், தொகுதிகள் குறித்து அதிமுக தரப்புடன் பாமக தரப்பு ரகசியமாக பேசி முடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தான் மட்டும் அதிமுகவுக்குப் போகாமல் திருமாவளவனையும் உடன் அழைத்துச் செல்ல விரும்புகிறார் ராமதாஸ். ஆனால் திருமாவோ, திமுக அணியை விட்டு வர முடியாது என கூறி வருகிறார். கடந்த சட்டசபைத் தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் தனக்கும், தனது கட்சியினருக்கும் ஏற்பட்ட அவமானத்தை அவர் ராமதாஸிட...