நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலவில் காலடி வைத்தார் என்ற அறி வியலையும் படித்துவிட்டு கிரகணம் பிடிப்பதற்கு முன்னா லேயே குளித்து முடித்துவிட்டு சாப்பிட்டு விட வேண
கவிஞர்கள் தாராபாரதி, கவிமுகில் நூல்கள் பல்கலைக் கழகங்களில் ஆய்வு செய்யப்பட வேண்டியவை சென்னை நூல் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் பேச்சு கவிஞர் தாராபாரதி, கவிஞர் கவி முகில் நூல்கள் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்யப்பட வேண்டிய நூல்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறினார். கவிஞர் தாராபாரதி அறக்கட்டளையின் எட்டாம் ஆண்டு விழா கவிஞர் கவி முகிலின் நூல்கள் வெளியீட்டு விழா 21.11.2008 அன்று மாலை 5 மணிக்கு சென்னை - தியாகராயர் நகரில் உள்ள சர்.பிட்டி தியாகராயர் அரங்கத்தில் மிகச் சிறப்பானதொரு எழுச்சி விழாவாக இலக்கிய விழாவாக இன உணர்வுப் பெருவிழாவாக நடைபெற்றது. சுப்பு ஆறுமுகம் பேரன் - கலைமகன் முதலாவதாக இசை அரங்கில் இன்னிசை தொடங்கி நடை பெற்றது. கலைமாமணி சுப்பு ஆறுமுகம் அவர்களின் பெயரன் தி.கலைமகன் தாத்தாவைப் போல இன்னிசை நிகழ்ச்சியை நடத்தி அனைவருடைய கரவொலியையும் பெற்றார். அவரைத் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பாராட்டி நினைவுப் பரிசினை அன...