இடுகைகள்

தூய குடிநீர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியர்கள் ஒரு காலத்தில் குடிநீர் இல்லாமல் திண்டாட வேண்டி வரலாம்

படம்
இமாலயத்தில் உள்ள 3 முக்கியப் பனிமலைகளை குடைந்து பார்த்த போது அதில் பனி தொடர்ந்து இருப்பதற்கான கதிர்வீச்சு சமிக்ஞைகள் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது தற்பொழுது ஏற்பட்டுவரும் தட்பவெப்ப மாற்றங்களால் அங்கு பனி சேருவதில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், குறைந்தது அரை பில்லியன் (50 கோடி) இந்தியர்கள் ஒரு காலத்தில் குடிநீர் இல்லாமல் திண்டாட வேண்டி வரலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இல்லாமல் போன அந்தக் கதிர்வீச்சு அரை நூற்றாண்டுக்கு முன்னர் நடத்தப்பட்ட அணு குண்டு சோதனையின் விளைவாய் ஏற்படுவது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். திபெத்தில் உள்ள நைமோனான்யி போன்ற பனிமலைகளால்தான் சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா போன்ற நதிகள் வற்றாத ஜீவ நதிகளாக இருந்து வருகின்றன. இதே நதிகள், சில இடங்களில், சில மாதங்களில் தண்ணீர் இல்லாமல் வற்றியிருப்பதன் காரணமும் இதுவாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் பனிமலைகளில் புதிதாக பனி உருவாவதில்லை என்பது பிரச்சனைகளை மேலும் மோசமாக்கலாம் என்று ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் ஒஹையோ பல்கலைக் கழக புவியியல் வி...

இந்தியாவின் 2 லட்சத்து 17 ஆயிரம் கிராமங்களில் தூய குடிநீர் இல்லை

பிற மாநிலங்களில் இந்தியாவின் 2 லட்சத்து 17 ஆயிரம் கிராமங்களில் தூய குடிநீர் இல்லை என்று உச்சநீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிடைக்கும் நீர் ரசாயனப் பொருள்களால் மாசுபடுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 31 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள குடிநீரில் ஃபுளோரைடு கூடுதலாக உள்ளது. இவை அரியானா, டில்லி, ராஜஸ்தான், குஜராத் மற்றும் ஆந்திர மாநிலங்களில் உள்ளன. பழங்குடி மக்கள் நிறைந்த மாநிலமாக சட்டிஸ்கர் மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை அம்மாநில முன்னாள் பா.ஜ.க. அரசு செலவு செய்யவே இல்லை என சோனியா காந்தி தெரிவித்துள்ளார். இந்த வகையில் 8 ஆயிரம் கோடி ரூபாயைச் செலவு செய்யவில்லை. இந்திய எகிப்து நாடுகள் அய்ந்து ஒப்பந்தங்கள் செய்து கொண்டுள்ளன. விண்வெளி ஆய்வில் கூட்டு முயற்சி, வான்வெளியை அமைதிக்குப் பயன் படுத்துதல், வர்த்தகக் கூட்டுறவு போன்ற ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டுள்ளன. ...