இடுகைகள்

வீரமணி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வழக்குரைஞர்களில் பலர் வரம்பை மீறலாமா?

படம்
சென்னை உயர்நீதிமன் றத்தில் கடந்த சில வாரங்களில் பல்வேறு விரும் பத்தகாத நிகழ்வுகள் ஏற்பட்டதன் விளை வாக, வழக்கறிஞர்களின் நீதி மன்றப் புறக்கணிப்பு தொடர் கிறது. உச்சநீதிமன்றத்தால் நிய மிக்கப்பட்ட (வெளி மாநில) ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலை மையில் விசாரணை நடை பெற்று - புயல் வேகத்தில் அவர் சென்னை வந்து 2 நாள்கள் விசாரித்து, உச்சநீதிமன்றத் தில் 5 ஆம் தேதி அறிக்கை யைத் தாக்கல் செய்து அது 6.3.2009 அன்று உச்சநீதிமன் றத்திற்குத் தரப்பட்டுள்ளது. அவ் வறிக்கை இணைய தளத்திலும், செய்தி ஏடுகளிலும் வெளி வந்துள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு: 1. சென்னை உயர்நீதிமன் றத்தில் சுப்பிரமணியசாமி வந்து, சிதம்பரம் நடராஜர் கோயில் வழக்கில் தன்னை ஒரு கட்சி ஆடுபவராக இணைத்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக வந்த போதிலிருந்து தொடங்கி யுள்ளது என்பது சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. மூல காரணங்கள் 2. சென்னை உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி பொறுப்பு வகித்தவர் மற்றும் சில நீதிபதிகளின் மெத்தனம் அல்லது மென்மையான போக்கே இதற்கு மூல காரண மாகவே - அந்நிலை தொடர்வ தற்குக் காரணமாகவே அமைந் துள்ளது. 3. வழக்குரைஞர்களில் பலர் - ச...

காவிக்கு வழியில்லை என்றால், வடநாடாக இருந்தால் கோவணம், கோவணமும் கிடைக்கவில்லையென்றால் - உச்சக் கட்டம் - நிர்வாண சாமியார்

படம்
மத தீவிரவாத சக்திகளான ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார்க் கும்பலை நாட்டில் நடமாட விடாதீர்கள். இதில் கட்சி வேற்றுமை இருக்கக் கூடாது. மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார். சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு: சாமியார் பெயரை மாற்றிக் கொண்டு சாமியார் என்றாலே போலிதான். இதில் போலிச் சாமியார் என்று சொல்லவேண்டிய அவசியம் இல்லை. சாமியார் ஆசிரமம் நடத்துவதாக சொல்லிக்கொண்டு பெயரை மாற்றிக் கொள் கின்றான். யார் மகந்த் என்று கேட்டால் அமிர்தானந்த். நம்ம ஊர் மஞ்சக்குடி அய்யர் எப்படி தயானந்த சரஸ்வதி ஆனார்கள் பாருங்கள் - அதுமாதிரி - இவர் யார்? தயானந்த பாண்டே வடநாட்டுப் பார்ப்பனர். இவருடைய பெயர் என்...

கலைஞர் குடும்பத்தில் ஏற்பட்ட பிளவுகள் அகன்றது என்ற சேதி நாட்டுக்கும், திராவிட இயக்கத்துக்கும் பயன் தருவதாகும்

படம்
கலைஞர் குடும்பத்தில் ஏற்பட்ட பிளவுகள் அகன்றது என்ற சேதி நாட்டுக்கும், திராவிட இயக்கத்துக்கும் பயன் தருவதாகும் பிறந்த நாளில் யாம் பெற்ற பேறு - இன்பம் இதுவே! தமிழர் தலைவர் விடுத்துள்ள பிறந்த நாள் சேதி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் தம் பிறந்த நாள் செய்தியாக அளித்துள்ள அறிக்கை வருமாறு: எனக்கு இன்று 76-வது பிறந்த நாள். வயது ஏறுவது இயற்கை; வாழ்க்கையை லட்சிய நோக்கோடு வாழ்வதுதான் முக்கியம். தனக்கு மட்டுமே வாழ்க்கை என்றெண்ணாது சமுதாயத்திற்காக அதன் முன்னேற்றத்திற்கும் உழைப்பதே உயர் தனிக்குறிக்கோள் என்று கருதி வாழ்வதே பயனுறு வாழ்வு என்பதை நம் அறிவுக்கு தந்தை பெரியார் போதித்ததோடு, சாதித்தும் வாழ்ந்தும் காட்டியுள்ளார். அய்யாவிடம் கற்ற பாடம் அவர்தம் தொண்டர்களுக்குத் தொண்டனான தோழனான எனது வாழ்க்கையும் அவர்கள் விட்ட பணி தொடருவதே குறிக்கோள் என்ற அடிப்படையிலேய...

மண்டல் அமலாக்கம் என்பது வெறும் சம்பளத்திற்கான வேலை வாய்ப்பு மட்டுமல்ல. அதிகார வர்க்கத்தில் நமக்கு பங்கு கிடைக்க வேண்டும் என்பதுதான்.

படம்
வீரமணியிடமிருந்து பெறும் உணர்ச்சி: வி.பி. சிங் நான் என்னுடைய நன்றியை வெளிப் படையாக நண்பர் வீரமணி அவர் களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்பு கிறேன். ஏனெனில், மண்டல் ஆணையை நான் நடைமுறைக் குக் கொண்டு வந் தேன். அப்போது, வடபுலமே எனக்கு எதிராக கிளிர்ந்தெ ழுந்தது. ஆனால், ஒரு மாபெரும் கருங்கற் கோட்டையாக, மாபெரும் எஃகுக் கூடாரமாக நின்று எனக்கு நீங்கள் ஆதரவு அளித்ததை இப்போது நினைவு கூர்கிறேன். இரண்டு நாட்களாக நான் தமிழகத் திலே உலா வந்து கொண்டிருக்கிறேன். நான் எங்கே சென்றாலும் திராவிடர் கழகத் தோழர்கள் கருப்புச் சட்டையு டனும், திராவிடர் கழகக் கொடியுடனும் நின்று வரவேற்கிற காட்சியினை காண் கின்றேன். அது என் மனதை விட்டு அக லாத காட்சியாக இருந்து கொண்டிருக்கிறது. மிகப் பெரிய தலைவர் தந்தை பெரி யார்தாம் வாழ்ந்த காலத்திலே, இந்த நாட்டிலே இருக்கக் கூடிய சமுதாயக் கொடுமைகளைக் கண்டு மனம் வெதும் பினார். அதன் காரணமாக இந்த சமூக அநீதியை - கொடுமையை துடைத்தெறிய ...

மும்பையில் நேற்றிரவு நடைபெற்ற பயங்கரவாதம் கண்டிக்கத்தக்கது!

படம்
மும்பை நகரில் நேற்றிரவு நடைபெற்ற பயங்கரவாதம் மனித நேயமற்ற அசல் காட்டுமிராண்டித்தனம் ! வெறுக்கத்தகுந்தது ; வன்மையான கண்டனத்திற்குரியது . பிணைக் கைதிகளாக பலரும் பிரபல ஓட்டல்களில் ; பல முக்கிய காவல் துறையினர் , அதிகாரிகள் சாவு ! 100 பேருக்குமேல் உயிரிழப்பு ; 200 பேர் படுகாயம் ! மாநகரமே ஸ்தம்பித்துள்ள நிலையில் , ஓட்டலில் தீயணைப்பு வீரர்கள் நுழைந்து தீயை அணைத்தனர் . இராணுவம் உடனே நுழைந்து தீவிரவாதிகள்மீது தாக்குதல் ; விடிவு ஏற்படுத்த தொடர் முயற்சி என்ற செய்தி நெஞ்சை உலுக்குகிறது ! கண்டிக்கப்பட வேண்டிய செயல் ! முதலாவதாக செய்யவேண்டியது இன்று அதிகாலை 3 மணியளவில் , தொலைக்காட்சியில் கண்டு உறக்கமில்லை ; காரணம் , நாடு இப்படி செல்லுகிறதே என்ற வேதனை ! மத்திய - மாநில உளவுத் துறையினர் முன்கூட்டியே இதனை மோப்பம் பிடித்திருக்கவேண்டாமா ? உடனடியாக பிரதமர் தலையிட்டு மத்திய - மாநில காவல்துறை - குறிப்ப...

அகதி முகாம்கள்பற்றி தேவையற்ற பீதியைப் பரப்புதல் இந்நேரத்தில் தேவைதானா?

படம்
இன்று காலை வந்த " ஜனசக்தி " நாளேட்டில் நீலகிரி மாவட்ட கூடலூரில் ஈழத் தமிழர் ஒருவரைப்பற்றி அவருக்கு நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கையொப்பமிட்டு , அவர் ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார் . அவருக்கு ஏற்கனவே வரை தங்க அனுமதிக்கப்பட்டது . மீண்டும் இங்கே தங்க 10.3.2008 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது . மேலும் நீங்கள் இங்கே தங்கியிருப்பது விரும்பத்தக்கது அல்ல என்பதால் , உடனே ஒரு வாரத்திற்குள் நீங்கள் வெளியேற வேண்டும் ; இல்லையானால் , உங்களை கட்டாயமாக நாட்டைவிட்டு அனுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கூடலூர் கொத்திர வாயல் எண் 5/476 என்பதில் தங்கியுள்ள வசந்தன் என்ப வருக்கு தனிப்பட்ட முறையில் அனுப்பப்பட்ட கடிதத்தை ஜனசக்தி வெளியிட்டுள்ளது . 14.2.2008 ஒரு வாரத்திற்குள் இந்தியாவைவிட்டு வெளியேறும்படி அகதிகளுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்றும் ஜனசக்தி கொட்டை எழுத்துகளில் தலைப்பிட்டு கூறுகிறது . குறிப்பிட்ட நபர் இலங்கையில் உள்ள - அண்மையில் விடுதலைப்புலிக...

நண்பர்களே, வல்லமை - வெற்றியைக் குவிக்கும் ஆற்றல் எவரோ தருவதல்ல; நம்முள் உள்ள ஒன்று!

படம்
வாழ்க்கையில் நம்மில் பலரும் விதைக்காமலே அறுக்க ஆசைப்படுகிறோம் . உழைக்காமலேயே பெருஞ்செல்வம் திடீரென நமக்குக் கிடைக்கவேண்டும் என்று எண்ணி ஏங்குகிறோம் . பசு மாட்டை நமக்கு ஒருவர் தானமாகக் கொடுத்தால்கூட அதற்குத் தீனி போடாமலேயே அதனிடம் சென்று கறக்க முயற்சிக்காமலேயே , புராணங்களில் வருவதுபோல தானே பாலைச் சொரிந்து தேவைப்படும் அளவிற்குத் தரவேண்டும் என்று முட்டாள்தனமாக விரும்புகிறோம் ! காணி நிலத்தைத் தந்து விடுகிறார் நமக்கு ஒருவர் . மகிழ்ச்சி . அது , தானே விளையுமா ? மண்ணைப் பண்படுத்தி உழ வேண்டாமா ? அகல உழுவதிலும் ஆழமாக உழவேண்டாமா ? உழுதால் மட்டும் போதுமா ? விதைக்க வேண்டாமா ? அதுவும் பருவத்தே விதைக்க வேண்டாமா ? ஆடிப்பட்டம் தேடிவிதை என்ற பழமொழி நினைவுக்கு வரவில்லையா ? எந்த வெற்றியும் கடுமையாக உழைக்காமல் நம்மிடம் வந்து முத்தம் கொடுக்காது ! ஏன் இப்படி கூறவேண்டியிருக்கிறது என்றால் , இன்றைய ...

மனித மலத்தைத் தலையில் சுமப்பவர்கள் அவர்கள் 3 விழுக்காடு இட ஒதுக்கீடு அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும்!

படம்
பார்ப்பனர்கள் வகுத்த ஜாதி அடுக்குமுறையில் கடைகோடியில் இருப்பவர்கள் அருந்ததியர்கள் மனித மலத்தைத் தலையில் சுமப்பவர்கள் அவர்கள் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அம்மக்களுக்கு 3 விழுக்காடு இட ஒதுக்கீடு அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும் ! அண்ணா நூற்றாண்டிலே மகத்தான சாதனை தி . மு . க . மகுடத்தில் ஜொலிக்கும் மற்றொரு வைரக்கல் ! அருந்ததியர்களுக்கு கல்வி , வேலை வாய்ப்பில் 3 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை அறிவித்த முதல்வர் கலைஞர் அவர்களின் சாதனை நம் நாட்டின் சமூகக் கொடுமைகளிலேயே மிகவும் கோரமானது , அக்கிரமமானது வர்ணாசிரம - ஜாதி அடுக்குமுறையாகும் ! பிறவி அடிப்படையில் ஜாதிகளைப் பிரித்த சூழ்ச்சியைவிட அதனை ஒன்றன்பின் ஒன்று என்று கீழான அடுக்குகளாக்கியது தான் வெறுக்கத்தகுந்த கொடுமையாகும் ! பார்ப்பனர் வகுத்த ஜாதி அடுக்குமுறை மேல்ஜாதி என்று ஆக்கிக் கொண்ட ஜாதியினரான பார்ப்பனர் அதற்கு அடுத்து ...

ஆன்மீகம் அழியாதது - கடவுளுக்குச் சம்பந்தப்பட்டது என்றால், அதன்பேரில் இதழ்களை ஏராளமாக நடத்துவது ஏன்?

படம்
ஆசிரியர் விடையளிக்கிறார் கேள்வி : தீவிரவாதத்துக்கு மதம் கிடையாது என்று எல்.கே. அத்வானி கூறியுள்ளதுபற்றி.. -தி. அருணா, ஏலகிரி பதில் : அடேடே அத்வானிஜி எப்போது இதைக் கண்டு பிடித்தார்? நாடாளுமன்றத் தேர்தலில் இஸ்லாமியர் வாக்குகளை வாங்குவதற்கு இப்படி ஒரு தந்திரப் பேச்சா? கேள்வி : தாழ்த்தப்பட்டவர்களுக்கும் கிரிமிலேயர் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கூறியிருக்கிறாரே? -ம. செங்கமலம். எலந்தங்குடி பதில் : ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நீதிக்கு அவரது பங்களிப்பு இதுதானா? வேதனை, வேதனை! பொருளாதார அடிப்படை கூடாது என்பது அரசியல் சட்டப்படி உள்ள நிலை. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும்கூட. அப்படி இருந்தும் அவரே இப்படி சட்ட விரோதமாகப் பேசலாமா? கேள்வி: ஈழத்தில் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள கொடுமைபோல, வெளி நாடுகளில் சீக்கியர்களுக்கும், வங்காளிகளுக்கும் நடந...

இந்து மிலிட்டரி ஸ்கூல் நடத்தி இந்தியாவில் இந்து மதப் போர்வையில் தீவிரவாதிகளைத் தயாரித்து அனுப்புகிறார்கள்.

படம்
நாடெல்லாம் பரவ வேண்டும்; வீடெல்லாம் பேசவேண்டும்; ஏடெல்லாம் எழுதவேண்டும் வன்முறை - வெடிகுண்டு கலாச்சாரம் கொண்ட மதவெறிச் சக்தியோடு யார் கூட்டு சேர்ந்தாலும் அவர்களை அடையாளங்கண்டு அரசியலில் காணாமல் போகச் செய்வோம்! சென்னை கூட்டத்தில் தமிழர் தலைவர் அறைகூவல் - வன்முறை, வெடிகுண்டு கலாச்சாரம் கொண்ட மதவெறிச் கும்பலோடு எந்த அரசியல் கட்சி கூட்டு சேர்ந்தாலும் அவைகளை மக்களுக்கு அடையாளம் காட்டி புறந்தள்ளுவோம். அவர்கள் அரசியலில் காணாமல் போவர் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார். சங் பரிவார்க் கும்பலும் - வெடிகுண்டு கலாச்சாரமும் என்ற தலைப்பில் சிறப்புக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் - நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் 20.11.2008 அன்று இரவு 7 மணிக்குத் தொடங்கி சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்த...