இடுகைகள்

ஈழ சேதிகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இலங்கையில் போர் தீவிரம் விடுதலைப்புலிகள் ஆவேச பதிலடி தாக்குதல் 38 சிங்கள ராணுவத்தினர் பலி

படம்
இலங்கையில் போர் தீவிரம் விடுதலைப்புலிகள் ஆவேச பதிலடி தாக்குதல் 38 சிங்கள ராணுவத்தினர் பலி! இலங்கையில் விடுதலைப்புலிகள் வசம் உள்ள கிளிநொச்சியை கைப்பற்ற ராணுவம் முழு வீச்சில் ஈடு பட்டு உள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல் விடுதலைப்புலிகள் வசம் இருந்த பூநகரி என்ற முக்கியமான கடற்படைத் தளத்தை கைப்பற்றிவிட்டதாக கடந்த சனிக்கிழமை அன்று ராணுவம் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து முக மாலையில் கண்டல் பகுதி வழியாக ராணுவத்தின் 55 வது படைப் பிரிவை சேர்ந்த ராணுவ வீரர்கள் நேற்று முன் தினம் முன்னேறினர். பீரங்கிக் குண்டு, ஏவுகணை, ஆட்டிலறி குண்டுகள் போன்ற ஆயுதங்களுடன் தாக்கினர். அவர்களை விடுதலைப்புலிகள் தடுத்து நிறுத்தி கடுமையாக பதிலடி கொடுத்தனர். 8 மணிநேர சண்டை ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணி முதல் பிற்பகல் 12.40 மணி வரை சுமார் 8 மணி நேரத் துக்கு இந்த சண்டை நீடித்தது. இறுதியில், பழைய இடத் துக்கே ராணுவத்தினர் விரட்டி அடிக்கப்பட்டனர். இந்த தாக் குதலில் 20 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 80 பேர்...