புதிய சாதனையாக உலக பேட்மின்டன் தர வரிசைப் பட்டியலில் 10வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார் சாய்னா
டெல்லி : உலக பேட்மின்டன் தர வரிசைப் பட்டியலில் 10 வது இடத்திற்கு முன்னேறி இந்தியாவின் சாய்னா நேஹ்வால் புதிய சாதனை படைத்துள்ளார் . இந்த ஆண்டு சாய்னாவுக்கு வெகு சிறப்பான ஆண்டு . ஒலிம்பிக் போட்டியில் அவர் காலிறுதி வரை முன்னேறி அசத்தினார் . சைனீஸ் தைபே ஓபன் போட்டியில் அவர் வெற்றி பெற்றார் . சிங்கப்பூர் சூப்பர் சீரிஸ் போட்டியில் அரை இறுதி வரை முன்னேறினார் . சைனா மாஸ்டர்ஸ் சூப்பர் சீரிஸ் போட்டியில் வெற்றி வாகை சூடினார் . இந்த நிலையில் புதிய சாதனையாக உலக பேட்மின்டன் தர வரிசைப் பட்டியலில் வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார் சாய்னா . இந்த சாதனையைப் படைத்த முதல் இந்திய வீராங்கனை சாய்னாதான் என்பது குறிப்பிடத்தக்கது 10