இடுகைகள்

வடிவேலு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அரசியலில் குதிக்க வேண்டும் என்று பேசி கொண்டிருக்கும் வடிவேலு, இந்த படத்தில் ஒரு அரசியல்வாதியாகவே நடிக்கிறார்.

படம்
மலையாளத்தில் வெளிவந்து வெற்றி நடைபோட்ட சிந்தாமணி கொலை கேஸ் என்ற படத்தை தமிழில் எல்லாம் அவன் செயல் என்ற பெயரில் ரீமேக் செய்கிறார்கள். அதில் சுரேஷ்கோபி நடித்த கேரக்டரில், புதுமுகம் ஆர்கே நடிக்கிறார். பெரும் தொழிலதிபரான இவர், சினிமாவுக்கு வந்தது பணம் சேர்ப்பதற்காக இல்லையாம். இளைஞர்களை ஒன்று திரட்டி ஒவ்வொருவரையும் தொழிலதிபாராக்க வேண்டும் என்பதுதான் என் லட்சியம் என்கிறார் இந்த புதிய நடிகர்! அதற்கு சினிமா உதவுமே என்பதால்தான் நடிகர் அவதாரம் எடுத்தாராம். எல்லாம் அவன் செயல் படத்தின் கதை என்ன? மருத்துவக்கல்லூரியில் பணக்கார பெண்கள் 9 பேர் படிக்க வருகிறார்கள். அதே கல்லூரியில் மெரிட்டில் சீட் வாங்கிக் கொண்டு வருகிறாள் ஏழைப் பெண் ஒருத்தி. இந்த ஒன்பது பெண்களும், இந்த ஏழைப் பெண்ணுக்கு ஏற்படுத்தும் கொடுமைகள்தான் படம். சமீபத்தில் சென்னையில் நடந்த சட்டக்கல்லூரி கலவரத்தில், அடிவாங்கும் அந்த மாணவனை பார்த்து துடிக்காத இதயமே இருந்திருக்க முடியாது. யாராவது இந்த வன்முறையை தடுத்திருக்க கூடாதா என்று ஏங்க வைத்த மாதிரியேதான் இப்படத்தில் வரும் சம்பவமும் என்கிறார் ஆர்கே. இப்படத்தில் வழக்கறி...

வடிவேலுவின் ஹீரோ ஆசை. போதும்டா சாமி

படம்
வடிவேலு கேட்ட நாலரை கோடி ஆளை மாற்றிய சிம்புதேவன் ப்ரீயா இருந்தா வாடா மச்சான், இங்கே ஒருத்தன் சிக்கியிருக்காங்கிற ரேஞ்சுக்கு புண்ணாக்கிவிட்டது வடிவேலுவின் ஹீரோ ஆசை. போதும்டா சாமி என்று ஒதுங்கிப் போனவரை மறுபடியும் இழுத்து வர முயற்சித்திருக்கிறார் சிம்புதேவன். இம்சை அரசன் 23 ம் புலிகேசி படத்தின் மூலம், வடிவேலுவின் யானை பலத்தை ரசிகர்களுக்கு நிரூபித்தவர் சிம்புதேவன். இந்த ஒரு காரணத்திற்காகவே அவர் அழைப்பை ஏற்றுக் கொண்டு மீண்டும் ஹீரோவாக நடிக்க சம்மதித்தார் வடிவேலு. இதற்கு அவர் கேட்ட சம்பளம்தான் தலையை ரங்கராட்டினம் போல் சுற்ற வைக்கும் சமாச்சாரம். நான் இந்த படத்தில் நடிக்க வந்தால், சுமார் பத்து படங்களையாவது இழக்க வேண்டி வரும். எனவே சம்பளமாக நாலரை கோடி கொடுத்துவிடுங்கள் என்றாராம். அறை எண் 305 க்கு பிறகு சிம்புதேவனுக்கு படம் கிடைத்ததே பேரதிர்ஷ்டம். இதில் வடிவேலுவுக்கு நாலரை கோடி என்றால்? குதிரையில் ஏறி தப்பிக்காத குறையாக ஓடிப்போனது தயாரிப்பு தரப்பு. சரி, வடிவேலுவே வேண்டாம். விவேக்கை...